Published:Updated:

''நாட்டி... ரொம்ப மோசம்டா நீ!'' -ஒரு பக்கக் கதை

டேவி.சாம் ஆசீர்
''நாட்டி... ரொம்ப மோசம்டா நீ!'' -ஒரு பக்கக் கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நாட்டி... ரொம்ப மோசம்டா நீ!'' -ஒரு பக்கக் கதை
ஒரு பக்கக் கதை
''நாட்டி... ரொம்ப மோசம்டா நீ!'' -ஒரு பக்கக் கதை
''நாட்டி... ரொம்ப மோசம்டா நீ!''
''நாட்டி... ரொம்ப மோசம்டா நீ!'' -ஒரு பக்கக் கதை

''இப்பெல்லாம் ஃபிகர்களை வழிக்குக் கொண்டு வர்றது ரொம்ப ஈஸி. ரெண்டு எம்.எம்.எஸ். கிளிப்பிங்ஸ் அனுப்பிச்சா சம்மதிக்கிறாளா, இல்லையான்னு தெரிஞ்சுரும். என் ஃப்ரெண்ட் நாலு பேருக்கு அனுப் பினானாம். ஒருத்தி நோ ரெஸ்பான்ஸ். ரெண்டு பேரு முறைச்சாங்களாம். ஒருத்தி விழுந்துட்டாளாம்!'' பாலா சொன்னதைக் கேட்டதும், தானும் அப்படி முயற்சித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது பிரவீனுக்கு.

''நாட்டி... ரொம்ப மோசம்டா நீ!'' -ஒரு பக்கக் கதை

தனது கல்லூரி மாணவிகளிடம் வித்தை காட்ட தயக்கமாக (பயமாக!) இருந்ததால் 'ரீசன்ட் டிரெண்ட்ஸ் இன் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங்' கருத்தரங்குக்கு வந்திருந்து, ஜோவியலாகப் பழகிய நான்கு ஃபிகர்களை செலெக்ட் செய்தான். முதல் விநாடி முதலே ரத்தத்தைச் சுண்டி சூட்டைக் கிளப்பும் 'அந்த' காட்சிகள் இரண்டை நாலு பேரின் மொபைல்களுக்கும் தட்டிவிட்டான். முழுதாக இரண்டு நாட்கள் கடந்தன. யாரிடம் இருந்தும் ரிப்ளை இல்லை. கொஞ்சம் பயமாக இருந்தது பிரவீனுக்கு. 'யாரும் போலீசுக்குப் போய்விட்டால்?' மூன்றாவது நாள் பிரவீனின் மொபைலுக்கு அழைத்தாள் அனிதா. அவன் எம்.எம்.எஸ்ஸியிருந்த நால்வருள் ஒருத்தி!

''நாட்டி... ச்சீ... ரொம்ப மோசம்டா நீ!'' செல்லக் கொஞ்சலாகத் திட்டினாள். அவள் குரலின்கிளுகிளுப்பு பிரவீனின் காது மடல்களை சுண்டச் செய்தது. என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை அவனுக்கு.

''என்னடா... ஃபாரின் ஸீனா அனுப்பியிருக்க? லோக்கல் இல்லியா?'' இந்தக் கேள்வியைச் சத்தியமாக அவன் எதிர்பார்க்கவே இல்லை.

''ஏன் இல்லாம... வேணுமா?''

''வெரைட்டியா எங்கெல்லாம் கிடைக்குதுன்னு விசாரிச்சு வை. ரெண்டு நாள்ல வர்றேன்!'' கட் செய்துவிட்டாள் அனிதா.

சொன்னது போலவே இரண்டாவது நாள் அவனைத் தேடி கல்லூரிக்கே வந்துவிட்டாள் அனிதா. பிரவுசிங் சென்டர், மொபைல் சர்வீஸ் சென்டர், எலெக்ட்ரானிக்ஸ் கடை என்று பிரவீன் விசாரித்து வைத்திருந்த அத்தனை இடங்களுக்கும் அவனோடு யமஹாவில் தொட்டுக் கட்டிப் பயணித்தவள் தினமும் மெமரி கார்டை 'அந்த'க் காட்சிகளால்நிரப்பிக் கொண்டே இருந்தாள்.

அவளின் அதீத ஆவேசத்தைக் கண்டு மிரண்டவன், ''இத்தனை எதுக்கு உனக்கு?'' என்று பைக் ஓட்டிக் கொண்டே கேட்டான். ''எதையுமே முழுசா அனுபவிக்கணும்டா!'' இளமையின் முத்திரை அவன் முதுகில் பதிய அவள் கூறிய பிறகு, அடுத்த கேள்வியைக் கேட்கத் தோன்றவில்லை பிரவீனுக்கு.

அந்த ஐந்தடி மூன்றங்குல உயர மெழுகுச் சிலை யோடு சுற்றியலைந்த மூன்று நாட்களும் பிரவீனுக்கு இந்திரலோகத்தில் சஞ்சரிப்பது போலவே இருந்தது. அடுத்தகட்ட அழைப்புக்காக பிரவீன் காத்திருக்க, தவிர்க்காமல் அழைத்தாள் அனிதா.

''பிரவீன் டி.வி-யில நியூஸ் பாரேன்!'' மறுமுனையில் காத்திருந்தாள்.

'பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து விநியோகித்த 48 நபர்களையும் அவர்கள் பயன்படுத்திய கம்ப்யூட்டர்களையும் கைப்பற்றியுள்ளோம். நகரம் முழுக்க ஒரே நாளில் நடந்த இந்தச் சோதனையைத் திட்டமிட்டு மிகத் துல்லிய மாகச் செயல்படுத்திய சைபர் க்ரைம் உதவி ஆணையர் வனிதாவைப் பாராட்டுகிறேன்!' போலீஸ் கமிஷனர் பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார்.

''பிரவீன், அந்த வனிதா என் கூடப் பிறந்த அக்கா!'' தொடர்பைத் துண்டிப்பதற்கு முன் அனிதா கூறியது இது!

''நாட்டி... ரொம்ப மோசம்டா நீ!'' -ஒரு பக்கக் கதை
''நாட்டி... ரொம்ப மோசம்டா நீ!'' -ஒரு பக்கக் கதை