க.சீ.சிவக்குமார்

தொடர்கதை

குமாரசம்பவம்

அருள் பிரகாஷின் கையில் இருந்து அலைபேசியை கிருபா வாங்கினாள். ''சொல்லுங்க, எந்த ஹாஸ்பிடல்?'' என வினவினாள். மருத்துவமனையைமனதுக் குள் வாங்கிக்கொண்டவள், வண்டிச் சாவிக்காக அருள் பிரகாஷிடம் கை நீட்டினாள். அவன் சாவியைத் தந்தவாறே, ''யெஸ்... யெஸ்... நீயே ஓட்டு!'' என்றான்.

மருத்துவமனை வளாகத்தில் வண்டி நின்றபோது கையில் ஃபிளாஸ்க்குடன் முருகானந்தன் வந்தான்.

''இவனுக்கு இவ்வளவு ஆள் இருக்கறது ஆச்சர்யமா இருக்கு. சார் வாங்க! முதல்

மாடில இருக்கான், போலாம்'' என்று லேசாக முறுவல் காட்டினான். அருள் பிரகாசுக்கு ஆறுதலாக இருந்தது.

''நல்லா இருக்கான்ல... தப்பிச்சுட்டான்ல?''

''நல்லா இருக்கான். சாணிப் பவுடரைக் கரைச்சுக் குடிச்சிருக்கான். பைப் போட்டுக் கழுவி எடுத்தாச்சு. ஒரு எட்டாயிரம், பத்தாயிரத்தைக் காலி பண்ணிட்டான், அவ்வளவுதான்!''

முதல் மாடியில் மூலைக் கட்டிலில் ராமமூர்த்தி படுத்திருந்தான். உறவினர்கள் சுற்றி நின்று அன்பான வார்த்தைகளால் மூச்சுத் திணறடித்துக்கொண்டு இருந்தார்கள். முருகானந்தனிடம், ''இனி எப்ப ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கப் போனாலும் இவனையும் கூட்டிக்கிட்டுப் போயிடணும்'' என்றான் அருள்.

''ஏன் அப்படிச் சொல்றே?''

''எப்பப் படம் முடிஞ்சு வந்தாலும் இவன் ஆஸ்பத்திரில இருக்கற தகவலே வருது. நாம கூட்டிக்கிட்டுப் போயிட்டா, பிரச்னை இல்லல்ல''- முருகானந்தன் உறவினர்களுக்கு காபி வழங்கினான். காபி குடித்தவர்கள் இன்னும் தெம்பாகி, தளர்ந்துகிடந்த ராமமூர்த்தியை அன்பெனும் அருவியில் குளிப்பாட்டிச் சென்றார்கள்.

அவர்கள் போனதும் அருள் பிரகாஷ், ராமமூர்த்தியிடம், ''ஏன்டா டே!'' என்றான். ராமமூர்த்தி தலை கவிழ்ந்துகொண்டான்.

கிருபா அருகில் சென்று அமர்ந்து அவனது தலையை லேசாகக் கோதினாள். ''என்னங்க மூர்த்தி, நாங்கள்லாம் இல்லியா?'' ராமமூர்த்தி ஆதுரத்தால் பெற்ற பரவசத்தைக் கண்ணீராக்கி நான்கு துளிகள் வெளியேற்றினான்.

விடை பெறும் நேரத்தில் அருள் பிரகாஷிடம், ''கங்காகிட்ட இதைச் சொல்ல வேண்டாம்'' என்றான்.

அருள் பிரகாசுக்கு வார்த்தைகள் மௌனக் கடலில் கரைத்த பெருங்காயமாகிவிட்டிருந்தன. தலையை ஆட்டிவிட்டு வெளி வந்தான். கிருபாவையும் அருள் பிரகாஷையும் அனுப்ப முருகானந்தன் கூட நடந்து வந்தான்.

அருள் பிரகாஷ், ''நீ என்ன போன் பண்ணினா எடுக்கவே மாட்டேங்கற?'' என்று கேட்டான்.

''சும்மாதான், நான் பெங்களூரு போலாம்னு இருந்தேன்'' என்றான் முருகானந்தன்.

''எப்போ?''

'இனிக்கே கிளம்புறதா இருந்தேன். அதுக்குள்ள இவன் இப்படிப் பண்ணிட்டான். நாளைக்குக் கிளம்பிடுவேன்.''

''கௌதம் வரச் சொல்லியிருந்தானா?''

''சீக்கிரம் கூப்பிடறேன்னு மெயில் பண்ணி இருந்தான். நான் போறேன்டா, கரூர் ரொம்பப் போர் அடிக்குது.''

''போர் அடிக்குதுன்னா?''

''முடியல...''

வண்டியில் அருள் பிரகாசுக்குப் பின்னால் கிருபா உட்கார்ந்தவாறே முருகானந்தனிடம், ''கங்கிராட்ஸ்'' என்றாள். முருகானந்தன் முறுவலுடன் அதை ஏற்றான்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர் ஆகிய ஊர்களின் குளிர்க் காற்றால் தாக்குண்டவனாகி முருகானந்தன் பெங்களூரு வந்து இறங்கியபோது காலை ஆறே கால் மணி ஆகி இருந்தது. முன்பு கௌதம் சொல்லி இருந்தபடி சில்க் போர்டு மேம்பாலம் ஏறி இறங்கியதும் வருகிற மடிவாளா நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டான்.

கன்னட மொழியை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்தவாறே நடக்கையில், ''எங்கே போகணும்?'' என்று ஆட்டோ டிரைவர் கேட்டார்.

செல்போனின் செய்திப் பெட்டியில் தேக்கிவைத்திருந்த கௌதமின் விலாசத்தை முருகானந்தன் எடுத்து வாசித்தான். ஆட்டோக்காரர், ''ட்வென்ட்டி ருபீஸ்'' என்றார்.

மகிழ்ச்சியாக ஆட்டோ ஏறி அமர்ந்து 'இது எப்படி காஸ்ட்லி சிட்டி ஆகும்?' என யோசித்தான். பின்வரும் நாட்கள் பற்றி அறியாதவனாக.

கௌதமின் அறைக்கு வெளியே கிடந்த சூக்கள் மற்றும் செருப்புகளைப் பார்த்துவிட்டு அறையில் ஐந்தாறு நபர்களாவது இருக்கக் கூடும் என எண்ணமிட்டான் முருகானந்தன்.

ஆனால், அறையில் கௌதம் தவிர்த்து இன்னொருவன் மட்டுமே இருந்தான்.

''நேத்து நைட் பத்து மணிக்குத்தான்டா இ-மெயில் பண்ணேன். அதுக்குள்ள வந்துட்டே?'' என்றான் கௌதம்.

''நான்பாட்டுக்குக் கிளம்பி வந்துட்டேன்.''

''இன்னிக்குச் சனிக்கிழமையா... யா... மன்டே நீ ஜாயின் பண்ணிறலாம். நம்ம ஆள்தான் டீம் லீடர்.''

''எவ்வளவு சம்பளம் வரும்?''

''ஒரு ஏழாயிரம்...''

''அவ்வளவுதானா?''

''இது ஒரு கிச்சடிக் கம்பெனிடா, உன்னை வேலைக்கு எடுக்கறவனே நாளக்கழிச்சு வேலயவிட்டுப் போனாலும் போய்டுவான்.''

''அப்புறம் எதுக்கு இந்தக் கம்பெனிக்கு நான் போகணும்?''

''சும்மா ஒரு ரெண்டு மாசம் போ. அதுக்குள்ள ஹைக்குன்னா என்ன ஃபேக்குன்னா என்னன்னு தெரிஞ்சுக்கலாம். விசுவாசத்தை விட்டுரு... சம்பளம் அதிகம் கிடைச்சுதுன்னா உடனடியா தாவிடு அதுதான் பேஸிக்.''

குளியலறைக்குச் சென்று திரும்பியவனிடம் கௌதம், முருகானந்தனை அறிமுகப்படுத்தினான். பிறகு, ''இது குணசீலன். லினக்ஸ் சிங்கம். கவிஞர். தனியா பிளாக் எழுதற நெட்டிசன். பிளாக்ல இவன் எழுதற கட்டுரையை தினமும் படிச்சியானா டெய்லி ஒரு பட்வைசர் பீர் வாங்கித் தந்திடுவான்.''

குணசீலன் நட்பாகக் கை குலுக்கினான்.

திங்கட்கிழமை வேலையில் சேர்ந்த நாளின் மாலையில் முருகானந்தன் அருள் பிரகாசுக்கு போன் செய்த நேரத்தில் அருள், கிருபாவுடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இருந்தான்.

கரூர் ரயில் நிலையத்துக்குப் பக்கவாட்டில் இருந்து ஆஞ்சநேயர் கோயிலுக்குச் செல்கிற பாதை மிகவும் அமைதியானது. காலை, மாலை நேர நடைப்பயிற்சிக்காகச் சிலர் அதைப் பயன்படுத்தினர். நகரத்தின் மோட்டார் இரைச்சல் தீண்டாத பகுதியாக இருந்தது. அவ்வப்போது குறுக்கிடும் ரயில் சத்தம் தவிர, குயில்கள் கூவும் அமைதி நிலவும் அங்கு.

கிருபா, ''அருள் உங்க வீட்ல சொல்லிட்டிங்களா?'' என்றாள்.

''என்ன சொல்லிட்டிங்களா?''

''சார். இப்படியே சினிமாவுக்குப் போறது, உங்க லேப்ல வந்து உட்கார்ந்து பேசறதுன்னு வாழ்க்கை ஓடிறாது.''

''சரி, ஒண்ணு பண்ணுவோம். இப்பவே எங்க வீட்டுக்குப் போவோம். அம்மா இருப்பாங்க. கேட்டா ஃப்ரெண்டுனு மட்டும் சொல்லிடறேன். அப்புறம் மெதுவா பாத்துக்கலாம்.

கிருபா சம்மதிக்கவும் அருள் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

பால் சின்னய்யா வெளியில் சென்றிருக்க... சாந்தா டெய்சி லீலா மட்டும் வீட்டில் இருந்தார். அருள் பிரகாசுடன் ஒரு பெண் வருவதைப் பார்த்ததும் திகைத்தவர், பின் அதை மறைத்து ''வாம்மா!'' என்று வரவேற்றார். சப்பாத்திகள் உருவாக்கப்படும் இடைவெளியில் வீட்டின் பகுதிகளை கிருபாவுக்குக் காட்டினான் அருள்.

கிருபா விடைபெற்றுச் சென்ற பின் அருளிடம் சாந்தா, ''யார்டா இந்தப் பொண்ணு?'' என்றார்.

''ஃப்ரெண்டும்மா.''

''ஃப்ரெண்டு மாதிரி தெரியலையே!''

அருளுக்குக் காரியங்கள் எளிமையாகிக்கொண்டு வருவது போலத் தெரிந்தது.

''லவ் பண்ற பொண்ணு மாதிரி தெரியுதா? ஏம்மா... இவளைக் கட்டிக்கலாமா?''

''நல்ல பொண்ணுதான். என்ன சாதி?''

''அதெல்லாம் அப்புறம் சொல்றேன். ப்ளீஸ்! அப்பாகிட்ட சொல்லும்மா. அவ நல்ல பொண்ணுன்னு.''

''எத்தனை நாளாடா இது நடக்குது?''

''கொஞ்ச நாளாத்தாம்மா.''

''என்ன படிச்சிருக்கா?''

''லாயர்மா. வக்கீலு.''

''மதமாவது நம்ம மதமா?''

''அதெல்லாம் பிரச்னை இல்லம்மா. மோதிரமும் மாத்திக் கணும் ஒரு தாலியும் கட்டிரலாம்.''

கங்காதேவி, வருங்காலக் கணவனை கலர் லேப்புக்கு அழைத்து வந்திருந்தாள். பவ்யமான பையனாகத் தோன்றி னான். அவனது அருகாமையில் காற்றில் அலையும் காட்டுப் பூவாகக் குலுங்கி மணந்துகொண்டு இருந்தாள் கங்கா. கிருபா வக்கீல் என்று அறிமுகப்படுத்தப்பட்டதால்பையனின் பவ்யம் பலமடங்கு அதிகரித்தது.

'உன் வீட்டிலேயே எல்லா வசதியும் செய்துகொடுத்து உள்ளங்கையில் வைத்துத் தாங்குவேன்' என்று உறுதி மொழிகளை அளித்ததுடன் தனது அம்மா, தன் மகளே போல கங்காவைக் கவனித்துக்கொள்வார் என்றும்சொல்லிய வண்ணம் இருந்தான்.

''இவங்க ரெண்டு பேரையும் நீங்க போட்டோ பிடிச்சா என்ன?'' என்று வருங்காலத் தம்பதியைக் குறிப்பிட்டு கிருபா கேட்டுக்கொண்டு இருந்தபோது, செல்லமுத்துவின் செல்போன் ஒலித்தது.

''புது நம்பரா இருக்கே?'' என்றவாறே போனை எடுத்தான்.

''ம்... சொல்லுங்க... நீங்களா... நல்லா இருக்கீங்களா... அவன் வேலைக்கு வந்து மூணு நாள் ஆச்சுங்களே'' என்று செல்போன் இணைப்பைத் துண்டித்த செல்லமுத்து ''ரொம்ப அலுப்பா இருக்குப்பா'' என்றான்.அருள் பிரகாஷிடம்.

''என்ன விஷயம்?''

''மைனர் தங்கராஜ், ஜெயக்குமாரைக் கேட்டு போன் பண்றார். அதான் கட் பண்ணிட்டேன்.''

செல்லமுத்துவுக்கு மறுபடியும் போன் அடித்தது. இம்முறை அவன் பேசியவிதத்தில் பயணம் மேற்கொள்ளாமல் தப்ப முடியாது என்று அருளுக்குப்பட்டது. எதிர்பார்த்தது போலவே பேசி முடித்ததும் எழுந்து நின்ற செல்லமுத்து, ''வா... வீரராக்கியம் வரைக்கும் போயிட்டு வந்துடுவோம்!'' என்றவன் கிருபாவிடம், ''நீங்களும் கங்காவும் கடையைப் பாத்துக்கங்க ஒரு டூ அவர்ஸ்ல வந்திடறோம்'' என கோரிக்கை போலக் கேட்டுக்கொண்டான்.

''கங்காவும் போய்ட்டா இப்படி நம்ம திடீர் டிரிப்புகளுக்குக் கடையைப் பார்க்க யார் இருக்கா?'' என்று அருள் ஐயம் கிளப்பினான்.

''என்னோட இ-மெயில் ஃப்ரெண்ட் ஒருத்தர் இருக்காங்க திருநங்கை. நரேஷா இருந்து அனாமிகாவா ஆனவங்க. இன் சென்னை. ஒரு கௌரவமான வேலைன்னு கேட்டு ஒரு மாசமா மெயில் பண்ணிக்கிட்டிருக்கு. வரச் சொல்லட்டுமா?'' என்றாள் கிருபா.

''நீங்க வேற டென்ஷன் பண்ணாதீங்க கிருபா. நாங்க சீரியஸான வேலையாய் போய்க்கிட்டு இருக்கோம்...'' வெளியேறிய செல்லமுத்து வண்டி நோக்கி விரைந்தான்.

அருளிடம் கிருபா, ''நானும் சீரியஸாத்தான் சொன்னேன்'' என்றாள்.

''அது பரிசீலிக்கலாம். அங்கே ஓர் ஆள் துப்பாக்கிக்கு தேங்காய் எண்ணெய் தடவி பாலீஷ் போட்டுக்கிட்டு இருப்பாராட்டம் இருக்கும். என்ன ஏதுன்னு பாத்துட்டு வந்துடறோம்.''

செல்லமுத்துவின் பின்னால் அருள் பிரகாஷ் ஏறிக்கொள்ள, செல்லமுத்து வண்டியை விரட்டினான். சுழிக்கும் எண்பதுக்கும் இடையிலாக வேகங்காட்டி முள் விளையாட்டுக் காட்டியது.

''என்ன செல்லா! என்ன ஆச்சு?''

''நமக்கு இதுல கொஞ்சம் வேல கம்மின்னு நினைக்கிறேன். பொண்ணு லெட்டர் எழுதி வெச்சுட்டுப் போயிருக்குதாம்!''

- தொடரும்...