கவிதைகள்

சிறுமி தைலாவின் வினா-விடை...

தலையணையில் நிலைத்த
இரு அன்னங்களையும்
மிதியடியில் மிதக்கும்
ஒரு மீனையும்
பீங்கான் தட்டில் உறைந்த
வெண்முயலையும்
விடுவிப்பது எப்படி அம்மா?
பதில் தேடிச் சலித்த
சங்கரியின் தலையில்
மெத்தென
செல்லக் குட்டொன்று
விழுந்தது.
தலையணையை மிதியடியை
ஆற்றில் எறி
பீங்கான் தட்டைக்
காட்டில் வீசு
என்றபடியே
படி தாண்டி விரைந்தாள்
தைலா!

- காலத்தச்சன்

மஞ்சள் பலூன்

திருவிழாவில் வாங்கிய
மஞ்சள் பலூனில்
உன் பெயரையும்
சிவப்பு பலூனில்
என் பெயரையும் எழுதி
பறக்கவிட்டோம்.
மஞ்சள் பலூன்
முன்னே போகும்போது நீயும்
சிவப்பு பலூன்
முன்னே போகும்போது
நானும்
கை தட்டியும் பழிப்புக் காட்டியும்
விளையாடினோம்.
தூரங்கள் அதிகமாகி
வண்ணங்கள் மறைந்து
பலூன்கள் புள்ளியான பின்
முன்னே போவது
என் பலூன்தான்
என்றாய் நீ.
இல்லை என்று நான் மறுக்க
சிணுங்கியும்
கொஞ்சியும்
திட்டியும்
செல்லச் சண்டையை ஆரம்பித்தாய்.
நான் பலூனை விட்டுவிட்டு
உன் சண்டையை ரசிக்க ஆரம்பித்தேன்

- தி.அய்யப்பன்

முன்னுரை

'யாருகிட்டேயும் சொல்லிராத!'
என்று சொல்லித்தான்
அத்தனை ரகசியங்களும்
அம்பலமாகின்றன.
'ஒண்ணு சொன்னா
தப்பா நினைச்சுக்க மாட்டியே?'
என்று தொடங்கித்தான்
நட்புப் பாலத்துக்கு
குண்டுவைக்கிறார்கள்.
'மனசைத் திடப்படுத்திக்கோங்க!'
என்று ஆரம்பித்துத்தான்
நெஞ்சில்
கல்லைத் தூக்கிப் போடுகிறார்கள்.
'சும்மா பார்த்துப் போக
வந்தவர்கள்'
பணம் காசைப் பார்க்காமல்
ஒருநாளும்
திரும்பிப் போனது இல்லை.
மனிதர்கள் விவரமானவர்கள்
முன்னுரைகள் விவஸ்தை கெட்டவை!

- எம்.கோசலை ராமன்

கல்லானாலும் கடவுள்!

கடவுளின் நிலம்
அபகரிக்கப்பட்டுவிட்டது.
கடவுள் எதேச்சையாக - தனது
நிலப் பத்திரத்தின் மதிப்பறிய
முற்பட்டபோதுதான்
தெரிந்திருக்கிறது
கடவுள் பெயரில் இருந்த நிலம்
சாத்தானின் பெயரில்
மாறியிருப்பது.
உண்டியல் காசுகளைக்
குருவி போல் சேர்த்து
வாங்கப்பட்ட நிலமென
அழுது புலம்பினார் கடவுள்.
பலமுறை காவல் நிலையம்
சென்று முறையிட்டும் பலனில்லை.
பேச்சுவார்த்தைக்கும்
மசியவில்லை சாத்தான்.
மந்திரிகளைத் தெரிந்திருந்தால்
ஒருவேளை
மீட்டிருக்கக்கூடும்.
என்றாலும்...
ஆள்வைத்து அடிக்கவோ
பணம்கொண்டு மீட்கவோ
கடவுளுக்குச் சாதுரியம் இல்லை.
முடிந்தவரை முயன்று
தோற்று...
நிலம் போன அதிர்ச்சியில்
ஊரின் நடுவில்
கல்லாகிவிட்டார் கடவுள்!

- இரா.பூபாலன்

படிக்கப் படிக்க உங்களுக்கும் கவிதை எழுதத் தோணுதா? குட்டியா... க்யூட்டா உங்க கவிதைகளை எழுதி 'ஆனந்த விகடன், 757.அண்ணாசாலை, சென்னை-2' என்ற முகவரிக்கோ, av@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவையுங்கள்!

கவிதைகள்

சிறுமி தைலாவின் வினா-விடை...

தலையணையில் நிலைத்த
இரு அன்னங்களையும்
மிதியடியில் மிதக்கும்
ஒரு மீனையும்
பீங்கான் தட்டில் உறைந்த
வெண்முயலையும்
விடுவிப்பது எப்படி அம்மா?
பதில் தேடிச் சலித்த
சங்கரியின் தலையில்
மெத்தென
செல்லக் குட்டொன்று
விழுந்தது.
தலையணையை மிதியடியை
ஆற்றில் எறி
பீங்கான் தட்டைக்
காட்டில் வீசு
என்றபடியே
படி தாண்டி விரைந்தாள்
தைலா!

- காலத்தச்சன்

மஞ்சள் பலூன்

திருவிழாவில் வாங்கிய
மஞ்சள் பலூனில்
உன் பெயரையும்
சிவப்பு பலூனில்
என் பெயரையும் எழுதி
பறக்கவிட்டோம்.
மஞ்சள் பலூன்
முன்னே போகும்போது நீயும்
சிவப்பு பலூன்
முன்னே போகும்போது
நானும்
கை தட்டியும் பழிப்புக் காட்டியும்
விளையாடினோம்.
தூரங்கள் அதிகமாகி
வண்ணங்கள் மறைந்து
பலூன்கள் புள்ளியான பின்
முன்னே போவது
என் பலூன்தான்
என்றாய் நீ.
இல்லை என்று நான் மறுக்க
சிணுங்கியும்
கொஞ்சியும்
திட்டியும்
செல்லச் சண்டையை ஆரம்பித்தாய்.
நான் பலூனை விட்டுவிட்டு
உன் சண்டையை ரசிக்க ஆரம்பித்தேன்

- தி.அய்யப்பன்

முன்னுரை

'யாருகிட்டேயும் சொல்லிராத!'
என்று சொல்லித்தான்
அத்தனை ரகசியங்களும்
அம்பலமாகின்றன.
'ஒண்ணு சொன்னா
தப்பா நினைச்சுக்க மாட்டியே?'
என்று தொடங்கித்தான்
நட்புப் பாலத்துக்கு
குண்டுவைக்கிறார்கள்.
'மனசைத் திடப்படுத்திக்கோங்க!'
என்று ஆரம்பித்துத்தான்
நெஞ்சில்
கல்லைத் தூக்கிப் போடுகிறார்கள்.
'சும்மா பார்த்துப் போக
வந்தவர்கள்'
பணம் காசைப் பார்க்காமல்
ஒருநாளும்
திரும்பிப் போனது இல்லை.
மனிதர்கள் விவரமானவர்கள்
முன்னுரைகள் விவஸ்தை கெட்டவை!

- எம்.கோசலை ராமன்

கல்லானாலும் கடவுள்!

கடவுளின் நிலம்
அபகரிக்கப்பட்டுவிட்டது.
கடவுள் எதேச்சையாக - தனது
நிலப் பத்திரத்தின் மதிப்பறிய
முற்பட்டபோதுதான்
தெரிந்திருக்கிறது
கடவுள் பெயரில் இருந்த நிலம்
சாத்தானின் பெயரில்
மாறியிருப்பது.
உண்டியல் காசுகளைக்
குருவி போல் சேர்த்து
வாங்கப்பட்ட நிலமென
அழுது புலம்பினார் கடவுள்.
பலமுறை காவல் நிலையம்
சென்று முறையிட்டும் பலனில்லை.
பேச்சுவார்த்தைக்கும்
மசியவில்லை சாத்தான்.
மந்திரிகளைத் தெரிந்திருந்தால்
ஒருவேளை
மீட்டிருக்கக்கூடும்.
என்றாலும்...
ஆள்வைத்து அடிக்கவோ
பணம்கொண்டு மீட்கவோ
கடவுளுக்குச் சாதுரியம் இல்லை.
முடிந்தவரை முயன்று
தோற்று...
நிலம் போன அதிர்ச்சியில்
ஊரின் நடுவில்
கல்லாகிவிட்டார் கடவுள்!

- இரா.பூபாலன்

படிக்கப் படிக்க உங்களுக்கும் கவிதை எழுதத் தோணுதா? குட்டியா... க்யூட்டா உங்க கவிதைகளை எழுதி 'ஆனந்த விகடன், 757.அண்ணாசாலை, சென்னை-2' என்ற முகவரிக்கோ, av@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவையுங்கள்!