Published:Updated:

கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!

கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!

பிரீமியம் ஸ்டோரி

 
கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!
கவிதைகள்
கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!
கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!
கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!

கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!

கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!

மழைபற்றிய கவிதையைச்
சொல்லி முடிக்கும்போது
நித்யாவின் முகம் மலர்ந்திருந்தது.
கயல்விழியின் விழிகள் விரிய
நான் வேறொரு கவிதை
சொல்ல வேண்டியிருந்தது.
கவிதையின் முடிவில்
மெல்லிய சோகம்
இழையோட வேண்டும்
கவிதாவுக்கு.
மற்றவர் கவிதையை
என் கவிதை என்று சொல்லி
ஏமாற்றிவிட முடியாது கிருத்திகாவை.
எந்தவொரு கவிதையையும்
மிகச் சுலபமாய் நிராகரித்துவிடுகிறாள்
சரண்யா.
அவளைக் கவர்வதற்கான கவிதையை
யோசித்துக்கொண்டிருக்கிறேன் நான்.
அவளோ
நிராகரிப்பதற்கான காரணத்தை!

- தி.அய்யப்பன்


அந்நியன்!

கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!

பக்கத்து வீடு
குமார் குருக்கள்
மாடி வீட்டு
வசந்தா டீச்சர்
அடுத்தது
பால்கார மணி
அதற்கடுத்து
ஐ.சி.ஐ.சி.ஐ. சரவணன்
டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பிரதிபா
எதிர் வீட்டு வயதான தம்பதியர்
பிள்ளைகள் இருவரும் மேல்நாட்டில்
அதற்கடுத்து அகிலேஷ் அப்பா
மாடியில்
டிசைனர் சிவா
எம்.பி.ஏ., படிக்கும் நிஷா என்று
எல்லோரையும் தெரிகிறது
என் மனைவிக்கு.
இங்கு வந்து
இரண்டு வருடங்களாகியும்
தெரியவில்லை
எனக்கு யாரையும்
என்னை யாருக்கும்!

- வடகரை வேலன்


சீதனம்!

கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!

ஓடிப் போய்
கல்யாணம்
செய்துகொண்ட அக்கா
உறவு சேர்ந்த பின்
கேட்கிறாள்
'நீங்களா பண்ணிவெச்சா
எல்லாம் செய்வீங்கள்ல
அதை இப்ப செய்யுங்க'
சரி...
சக உறவுகளுக்கும்
ஊருக்கும் முன்பு
கூனிக் குறுகி நின்றோமே...
அதற்கு
நீ என்ன
செய்யப்போகிறாய்?

- ஆ.கீதம் லெனின்


ஆம்பளை யானை!

கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!

நான்கு வயது மகன்
கேட்டுக்கொண்டதும்
யானையாகிப்போனார்
என் கணவர்.
ஏறி அமர்ந்த பிள்ளை
உற்சாகமானான்
'யானை யானை...
அம்பாரி யானை...'
அறைக்குள் வலம் வந்தது
மகனைச் சுமந்த யானை.
'என்னம்மா யானை
வீட்டுக்குள்ளேயே சுத்துது?'
கேட்ட மகனுக்குச் சொன்னேன்
'நாமெல்லாம்
ஊருக்குப் போயிட்டா
அது வெளியில சுத்தும்டா!'

- ஆங்கரை பைரவி


குறை ஓவியம்!

கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!

யாரோ ஒருவரது
அதட்டலால்தான்
குழந்தைகளின் கிறுக்கல்கள்
கிறுக்கல்களாகவே
நின்றுவிடுகின்றன!

- வைகறை


பூவென உதிரும் பெண் நட்புகள்!

கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!

98..........
அதே எண்தான்
அதே 1100
ஆதி காலத்துக் கருவிதான்
முன்னிரவில் நெடுநேரம் பேசிய
நெடுநாள் தோழியின் எண்கள்
நண்பகல் உணவு வேளையில்கூட
இப்போது அழைப்பதில்லை
'பனிக்குடத்தில் என் கவிதை வந்திருக்கு
பார்த்தீங்களா சார்'
கவிதை குறித்து அவ்வப்போது
அபிப்ராயம் விழைத்த புதுத் தோழியின்
குரலும் கேட்பதில்லை
அநேகமாக அவளுக்கு
நிச்சயதார்த்தமோ கல்யாணமோ முடிந்துவிட்டிருக்கலாம்
கொஞ்ச நாட்களாய் குறுஞ்செய்திக் கவிதை
அனுப்பிக்கொண்டிருந்தவளும் அனுப்புவதில்லை
ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது
நட்பைப் புதுப்பித்துக்கொண்டிருந்த
மதுரகவித் தோழி
இனியருபோதும் பேசப்போவதில்லை
சமீபத்தில்தான் அவளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
ஆம் நண்பர்களே...
ஆண் நண்பர்கள் பரவாயில்லை
ஒரு பீர் உள்ளிறங்கினால் போதும்!

- யாழினிமுனுசாமி

விஞர்களே வண்டியைக் கிளப்புங்க பாஸ்! உங்கள் குட்டிக் கவிதைகளை 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2' என்ற முகவரிக்கோ, av@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வையுங்கள்!

 
கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!
கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு