Published:Updated:

காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை

காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை

பிரீமியம் ஸ்டோரி
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை
கி.கார்த்திகேயன்
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை
திடீர் ஜிலீர் தொடர்கதை
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை
காதலினால் பெண்கள் செய்வீர்
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை

சென்ற இதழ் தொடர்ச்சி...

''சிக்கன் பிரியாணி, சிக்கன் செட்டிநாட், கிராப் ஃப்ரை, மட்டன் சுக்கா, நிறைய பெப்பர் போட்டு ஒரு மசாலா ஆம்லெட். ம்ம்ம்... போதும். பாலா உனக்கு என்ன வேணுமோ சொல்லிக்கோ... நான் என்னுதுல இருந்து எதுவும் ஷேர் பண்ணிக்க மாட்டேன்!''

ஆர்டர் எடுத்த பேரர், வரலட்சுமியை கொஞ்சம் கேரிங்காகப் பார்த்தார். எனக்கு அதைக் காட்டிலும் படபடப்பாக இருந்தது. அது ஒரிஜினல் தலப் பாக்கட்டி பிரியாணிக் கடை. அக்மார்க் ஐயர் பெண்ணான வரலட்சுமி முன் சிக்கன், மட்டன், முட்டை என்ற வார்த்தையைக்கூட ஆபீஸில் யாரும் பேச மாட்டார்கள். மற்றவர்கள் குடித்த வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீர்கூடக் குடிக்காதவள். ஏன் என்னைக் கூட்டிக்கொண்டு சாப்பிட வந்து சுயரூபம் காட்டுகிறாள்?

காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை

''என்னங்க நீங்க நான்வெஜ் சாப்பிடுவீங்களா?''

''ஏன், ஐயர் பொண்ணா இருந்தா நண்டு செரிக்காதா? புராஜெக்ட்டுக்காக பெங்களூர்ல தங்கியிருந்தப்ப ஃப்ரெண்ட்ஸ் பழக்கிட்டாங்கப்பா. இப்ப வாரம் ஒரு தடவையாவது என்.வி. எடுத்துக்கலைன்னா தேடுது!''

சாப்பிட்டு முடிக்கும்வரை வரலட்சுமி பேசுவதற்காக வாய் திறக்கவில்லை. நான் மிச்சம் வைக்கவிருந்த பாதி கப் பிரியாணியையும் மொக்கிவிட்டுத்தான் எழுந்தாள். பில்லுக்கு பணம் வைத்தவள் கை நிறைய வெள்ளைச் சீரகத்தை அள்ளி வாயில் போட்டு மென் றாள். மினி ஃபேன்டா வாங்கிக் குடித்தாள். இரண்டு சென்டர் ஃப்ரெஷ் பபிள்கம்களை வாயில் போட்டுக் கொண்டாள்.

ஸ்கூட்டியில் ஏறும் முன், ''ஏங்க கிளம்பும்போது நான் பண்ண திருட்டுத்தனத்தை யார்கிட்டயும் சொல்லாம இருப்பேன்னு சொன்னீங்களே... அது என்னங்க?'' என்றேன்.

''அட மண்டு... அப்படி எல்லாம் எதுவும் கிடை யாது. தனியாப் போறதுக்குப் பதிலா, உன்னைக் கூப்பிடலாம்னு தோணுச்சு. அதான் அப்படிச் சொன் னேன். என்னமோ, ஏதோன்னு பயந்து ஆட்டுக்குட்டி கணக்கா தலையாட்டிக்கிட்டே வந்துட்ட. இப்ப நீதான் என்னைப் பத்தி ஆபீஸ்ல சொல்லக் கூடாது. சொன்னே... நீ என்னை ரேப் பண்ண ட்ரை பண் ணேன்னு எல்லார்ட்டயும் சொல்லிருவேன்!''
எனக்கு இதயம் தொண்டைக்கு எகிறிப் புரையேறி, இருமித் தும்மி... ஸ்கூட்டியில் இருந்து இரண்டடி ஒதுங்கி நின்றேன்.

''ஐயோ... நான் ஆட்டோல வர்றேன். இல்ல, இன்னிக்கு லீவு. இல்லைங்க... நான் ரிசைன் பண்ணிட்டு ஊருக்குப் போறேங்க..!''

முழுதாக ஒரு நிமிடம் சிரித்துக்கொண்டே இருந் தாள் வரலட்சுமி. ''என்னப்பா... இவ்வளவு பாண்டுவா இருக்கே. நான் சும்மா காமெடி பண்ணேன். ஆனாலும், நீ ரொம்ப சென்சிட்டிவ். இதுக்கே இப்படின்னா நான் உன்னை ரேப் பண்ண ட்ரை பண்ணா, நீ என்ன ஆவியோ..?''

''ஹலோ... சினிமால ஹீரோயின் கிளாமரா இருந்தா, கண்ணை மூடிக்கிற ஆளு நான். நீங்க கிளம்புங்க!''

''கூல்... கூல்! பை தி வே... 'வாங்க போங்க'ன்னு சொல்லி நீ என்னைவிடச் சின்ன பையன்னு எஸ்டாபிளிஷ் பண்ணப் பார்க்காதே. கால் மி வரூ!''

'வரூ' என்று அழைத்தால், பக்கத்து வீட்டு ஆன்ட்டியை அனுப்பி என்னை ரேப் செய்துவிடுவாளோ என்று தோன்றவே அந்த எண்ணத்தை டெலிட் செய்தேன். தயங்கி மயங்கி ஸ்கூட்டியில் தொற்றிக்கொண்டேன். ஆபீசுக்குள் ஒன்றாக நுழைந்த எங்களை அத்தனை ஜோடிக் கண்களும் கவனிக்கத் தவறவில்லை!

ஸ்ஸ்ஸ்ஸ்... மூன்றாவது பீர் என்பதால் நுரை பொங்கித் ததும்பி வழிந்ததை தினகரன் கண்டுகொள்ளவில்லை.

''ஐயிரு பொண்ணு... அயிரை மீன் கொழம்பு... 'கால் மி வரூ!' கலக்குற பாலா. நானும்தான் இந்த சென்னையில நாலு வருசமா குப்பை கொட்டிட்டு இருக்கேன். நீல்மெட்டல் பனால்கா பொண்ணுகூட கண்டுக்க மாட்டேங்குது. உன்னை நினைச்சா எனக்கு பிரவுட், பெருமை, பொறாமை, ஆங்க்ரி, வடகறி எல்லாம் கலந்து கலந்து வருது. ஆனாலும், நாளைக்கே உனுக்கும் வரூவுக்கும் கல்யாணம் கட்டினா, அது மகாவீர் ஜெயந்தி லீவுன்னாக்கூட என் உயிரைக் குடுத்தாவது எங்கேயாச்சும் மட்டன் வாங்கிக் குடுப்பேன். ஏன்னா நீ என் நண்ண்ண்பன்!''

எனக்கு எரிச்சலாக வந்தது. இப்படி பிதற்றித் தள்ளுவான் என்றுதான் அவனுக்கு பீர் வாங்கித் தரமாட்டேன் என்று மல்லுக் கட்டினேன். ஆள் எப்போது மட்டையாவான் என்று காத்திருந்தேன்.

''அது எப்டி பாலா... ஒரு கி கிளாஸ் பீஸ் உன்கிட்ட மடிஞ்சா?''

''டேய்... ஹோட்டலுக்கு ஒரு தடவை போய் சாப்பிட்டோம். சும்மா ஃப்ரெண்ட்லியாப் பேசிட்டு இருக்கோம். அவ்வளவுதான்! ஆனா, எனக்கும் இந்த சந்தேகம் வந்துச்சே... 'என்கிட்ட ஏன் இவ்ளோ ஈஸியாப் பழகுறீங்க?'ன்னு கேட்டேனே?''

''வாட் ஷி டோல்ட்?''

''என்னைப் பார்த்தா நல்லவன் மாதிரி இருக்காம். ஒரு இன்னொசன்ஸ் இருக்காம்!''

''கொக்கமக்கா... நீ நல்லவனாடா..? ஹவ் கி கிளாஸ் பீஸ்லாம் கி-1

அக்யூஸ்டுகள்ட்ட விழுகுதுகளோ? டேய் டேய் டேய் ஒரு ஹெல்ப் பண்ணேன். உங்க ஆபீஸ்ல போனி டெயில் போட்ட குதிரை மாதிரி திரிவாளே சியாமந்தா... எனக்கு அவகிட்ட இன்ட்ரோ குடுரா... ப்ளீஸ்!''

''போடா... அவ என்கிட்ட ஏதோ முக்கியமாப் பேசணுமாம்.. நாளைக்கு காபி ஷாப் போலாம்னு சொல்லியிருக்கா? இதுல நீ வேற!''
அதிர்ந்து நிமிர்ந்து என்னைப் பார்த்தவன் முழுச் சக்தியையும் திரட்டி... வாந்தி எடுத்தான். ரூமைச் சுத்தம் செய்துவிட்டு படுத்தபோது மணி மூன்றரை.

எனக்கு உள்ளபடியே ரொம்பக் கூச்சமாக இருந்தது. இது ஏதோ ஒரு ஸ்டார் ஹோட்டலின் மினுமினு பளபள காபி ஷாப். ஏர் ஹோஸ்டஸ் போல அழகழகான பெண்கள்தான் பரிமாறினார்கள். அநேகமாக அந்த ஹோட்டல் கேம்பஸிலேயே எனது டிரெஸ்தான் மிகவும் கேவலமானதாக இருக்கும்.

மெனு கார்டில் கண்களை ஓட்டிய சியாமந்தா, ''கோல்ட் ஸ்பார்க்கிள் ஃபார் மி. உனக்கு நீயே சொல்லு பால்!'' என்றபடி மெனு கார்டை என்னிடம் நீட்டினாள். வாசித்தேன். மூன்றாம் பால் வீதிக்கு அப்பால் இருக்கும் கிரகங்களின் பெயர் போல இருந்தவைகளின் முன் 150, 220 என்ற ரீதியில் விலை குறிப்பிடப்பட்டு இருந்தது. அட்டையின் இறுதியில் தஞ்சாவூர் டிகிரி காபி என்று பரிச்சயமான ஒரு பெயர் தட்டுப்பட்டது. ''ஒன் தஞ்சாவூர் டிகிரி காபி!'' என்று இறுக்கமாகச் சொன்னேன்.

சியாமந்தா கலகலவென சிரிக்கத் தொடங்கினாள். ''இதுதான் பால். உன்கிட்ட எனக்குப் பிடிச்சது. அப்பாவி கோபக்கார ஃபூலிஷ் ஜீனியஸ்!''

''தாங்க் யு.''

காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை

''ஓ.கே. எதுக்கு உன்னைக் கூட்டிட்டு வந்தேன்னு ஆச்சர்யமா இருக்கலாம். லெட் மி லெட் தி கேட் அவுட். என் அப்பா கோயமுத்தூர்ல இன்டஸ்ட்ரியலிஸ்ட். சும்மா பொழுதுபோக்குக்குத்தான் நான் இந்த வேலை பார்த்துட்டு இருக்கேன். எங்களைவிட ஏதோ ஒரு பெரிய பணக்காரன் வீட்டுக்கு மருமகளாப் போறதுக்கு முன்னாடி சென்னை லைஃப் வாழ்ந்து பார்க்கணும்னு ஆசை. என்ஜாய் பண்ணிட்டே இருக்கேன். ஆனா, போரடிக்குது. ஒரு ஃப்ளாட் எடுத்துத் தங்கிக்கலாம்னு பார்க்கிறேன். கம்பெனிக்கு ரெண்டு பொண்ணுங்களைச் சேர்த்தா, அகெய்ன் அது மினி லேடீஸ் ஹாஸ்டல் மாதிரி ஆகிடும். ஸோ, நீ ஏன் என்னோட அந்த ஃப்ளாட்டை ஷேர் பண்ணிக்கக் கூடாது? சம்திங் லைக்... லிவிங் டுகெதர்!''

உச்சந்தலையில் யாரோ ஐஸ் கத்தியை நச்சென்று இறக்கியது போல இருந்தது. ''ஏங்க... என்னாங்க இது? எனக்கு இது சத்தியமாப் புரியலைங்க. இதெல்லாம் எந்தளவுக்குச் சரியா வரும்னு எனக்குத் தெரியலைங்க!''

''ஏன் சரியா வராது. ஒய் மேன்... செலவுகள்லாம் நான் பாத்துக்கிறேன். என்னோட எந்த பாய் ஃப்ரெண்டையும் ஃப்ளாட்டுக்குக் கூட்டிட்டு வர மாட்டேன். நான் ஊருக்கு போயிருக்கிறப்ப மட்டும் நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ... ஐ டோன்ட் கேர்!''

மிச்சம் இருந்த காபியைக் குடித்துவிட்டு, ''ஏன் நான்?'' என்று கேட்டேன்.

''நான் தனி ஃப்ளாட் எடுத்து தங்கப் போறேன்னு தெரிஞ்சா, நாலைஞ்சு பேர் லக்கேஜோட கிளம்பி வந்துருவானுங்க. பட்... அவனுங்கள்லாம் தியேட்டர், பீச், டிஸ்கோக்குத்தான் லாயக்கு. கூடவே வெச்சுக்க முடியாது. யு ஆர் சம்திங் ஸ்பெஷல். அதான் நீ! உன்னை எந்த விஷயத்துக்காகவும் கம்பெல் பண்ண மாட்டேன். ஜஸ்ட் ஃபீல் ஃப்ரீ!''

சியாமந்தாவை இப்போது நிதானமாகப் பார்த்தேன். நெற்றியை ஒட்டிய பகுதிகளில் மட்டும் கலரிங், கர்லிங் செய்யப்பட்ட கூந்தல். அடிக்கடி துடிக்கும் சின்னக் கண்கள். ஃபேசியல்களால் ஒரு செயற்கை நிறத்துக்கு வந்திருந்தாலும் காந்தமாக ஈர்க்கும் களையான முகம். உள்ளே டி-ஷர்ட், மேலே ஜெர்கின் ஓவர் கோட் அணிந்திருந்தாள். 'நோ பார்க்கிங்' என்ற டி-ஷர்ட் வாசகம் தெரியுமளவுக்கு ஜெர்கின் படபடத்தது.

''இல்லைங்க... ஒரு பையனும் பொண்ணும் தனியா தங்கியிருந்தா நாளப்பின்ன எதுனா ஏடாகூடமா நடந்துருமோன்னு..?'' என்று வார்த்தைகளை உதிர்த்த பிறகுதான் அதன் அர்த்தம் புரிந்து நாக்கைக் கடித்துக் கொண்டேன்.

ஒரே ஒரு மைக்ரோ செகண்ட் யோசித்தவள், ''இல்லை பால்... உன் முகத்துல ஒரு குழந்தைத்தனம் இருக்கு. நீ நல்லவன். நான் உன்னை நம்புறேன்!'' என்றாள். வரலட்சுமியின் அதே வார்த்தைகள். எனக்கு பெருமிதத்தில் கம்பீரமாகத் தலை நிமிர்வதா அல்லது அவமானத்தில் வெட்கித் தலை குனிவதா... தெரியவில்லை. மேற்கொண்டு என் சம்மதத்தை எதிர்பார்க்காமல் சியாமந்தா ஃப்ளாட் பார்க்கத் துவங்கிவிட் டாள்.

காபி மெஷினில் லெமன் டீ பிடித்துக்கொண்டு இருக்கும்போது வரலட்சுமி அருகில் வந்து நின்றாள். சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அடிக்குரலில் கிசுகிசுத்தாள். ''பாலா வர்ற சனிக்கிழமை நீ எங்க வீட்டுக்கு வர்ற.. உனக்கு ஒரு சஸ்பென்ஸ்!''

''எதுக்குங்க?''

''டாடி மம்மி வீட்டில் இல்லே... தடை போட யாருமில்லே... விளையாடுவோமா உள்ளே வில்லாளா!'' - பாடியபடி சென்றுவிட்டாள். எனக்கு பித்தம் தலைக் கேறி முடிகள் எல்லாம் நட்டுக்கொண்டு நின்றது.

'பீப் பீப்' என்றது எஸ்.எம்.எஸ் டோன். சியாமந்தாவிடம் இருந்து எஸ்.எம்.எஸ்...

'ஃப்ளாட் ஃபிக்சட். அட்வான்ஸ் பெய்டு. நீயும் நானும் ஹஸ்பண்ட் வொய்ஃப்னு சொல்லியிருக்கேன். வர்ற சனிக்கிழமை அந்த ஃப்ளாட்லதான் நம்ம ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் நைட் எல்லாம்!'

 
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை
- காதல் செய்வோம்...
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு