Published:Updated:

எலி வாங்கலையோ எலி !

எலி வாங்கலையோ எலி !

பிரீமியம் ஸ்டோரி

அந்த நாட்டில் எலிகளின் எண்ணிக்கை அதிகமானதால், விளைச்சல் குறையத் தொடங்கியது. மன்னர், மந்திரி களுடன் கலந்து ஆலோசனை செய்து, பயிர்களைக் காப்பாற்ற ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

எலி வாங்கலையோ எலி !
##~##

'எலி ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம், நாட்டில் பிடிக்கப்படும் எல்லா எலிகளையுமே அரசாங்கம் வாங்கிக் கொள்ளும்’ என்று அறிவிக்கச் செய்தார். அன்றிலிருந்து அரண் மனையில் எலிகள் ஏராளமாகக் குவியத் தொடங்கின. இதனால், அரசாங்கத்தின் பணமும் கரையத் தொடங்கியது. அதேநேரம், விளைச்சல் முன்பைவிட குறையத் தொடங்கி இருந்தது. மன்னர், 'எதனால் இப்படி?’ என்று புரியாமல்  மிகவும் கவலைப்பட்டார்.

ஒரு நாள், மாறு வேடத்தில் வயல் பக்கம் சென்றார். பயிரிடாமல் தரிசாய்க் கிடந்த வயல்களைக் கண்டார். அங்கே இருந்த விவசாயிகளைக் கூப்பிட்டு, ''ஏன் நிலத்தை எல்லாம் தரிசாய் போட்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

''பயிர்களை உற்பத்தி செய்வதைவிட எலிகளோட உற்பத்தியில்தான் நிறைய வருமானம் கிடைக்கிறது. எலிகளை அரசாங்கமே பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறது. அதனால் எல்லோர் வீட்டிலேயும் எலிப் பண்ணை வைத்திருக்கிறோம்'' என்று அந்த விவசாயி கூறியதைக் கேட்டதும், மாறு வேடத்தில் இருந்த மன்னர் மயக்கம்போட்டு விழுந்தார்.

இரா.சங்கீதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு