ரகசியம் அல்லாத ரகசியம்!

என்னிடம் சொல்வதற்கு
தன்னிடம்
ஒரு ரகசியம் வைத்திருப்பதாக
ஓடி வந்து சொல்கிறாள்
குழந்தை.

மேலும் அதை
யாரிடமும்
சொல்லிவிடக் கூடாதென
சத்தியமும் வாங்கிவிடுகிறாள்.

பின்பும்
பல பீடிகைகளுடன்
காதில் கிசுகிசுக்கிறாள்.

அது ஒன்றும்
அத்தனைப் பெரிய
பிரபஞ்ச ரகசியமாயிருக்காது.
ரகசியமே அல்ல என்று
அதைப் புறந்தள்ளவும்
முடியாத
அந்த ரகசியத்தை
உங்களிடம்
என்னால் சொல்ல முடியாது
சத்தியத்தை மீறி.

நாளை அவளே
உங்களிடம் சொல்வாள்

''என்னிடம் ஒரு ரகசியம்
உள்ளது
யாரிடமும்
சொல்லிவிடாதீர்கள்''
என்றபடிக்கு!

- இரா.பூபாலன்

மனப் பால்

சகுனம் சரி இல்லை
திரும்பி வந்துவிட்டேன்
மனதில் ஓடும்
ஆயிரம் பூனைகளை
என்ன செய்ய?

- வெண்பா

தலையணை தைலம்

தலையணை அருகே
தைலம்
ஒவ்வொரு வீட்டிலும்
வெவ்வேறு வாசனையோடு.

- நலங்கிள்ளி

பொம்மை உலகம்

ஒவ்வொருவரிடமும்
இருக்கிறது
ஒரு கரடி பொம்மையோ
தன்னைச் செதுக்கிக்கொள்ளும்
பெண் பொம்மையோ
நெளிந்து நிற்கும்
ஒரு தோழி பொம்மையோ...

சில பொம்மைகள்
கை கூட்டி முழங்கால் மடித்து
கண் சாய்த்து அமர்ந்து

ஸ்நேகிதனை
கண் கொட்டாமல்
அல்லும் பகலும்
கண்ணாடி கவருக்குள்ளிருந்து
பார்த்தபடி

அவர்கள் தன்னோடு
தன் கவலைகளோடு
பேசிக்கொள்ளும்போது
காதுகள் கொடுத்து

மகிழ்ச்சியாய்
தோழர்கள் ஆடும்போது
புன்னகைத்தபடி

கூட இருப்பதே
ஒரு தவமாய் இயற்றி
விட்டுச் சென்ற
இடத்திலேயே காத்துக்கிடந்து

புறக்கணித்தோ
பரணிலோ
குப்பைத் தொட்டியிலோ
வீசிச் செல்லும்
நண்பர்களைக் குறை கூறாமல்
அங்கும் மௌனமாய்...
அங்கீகரிப்பும் அனுமதிப்புமாய்...

- தேனம்மை லெட்சுமணன்

பயத்தின் திசைகள்

அடிப்பானோ என்று நாயும்...
கடிக்குமோ என்று நானும்...
எப்போதும் ஓடியிருக்கிறோம்
எதிரெதிர் திசைகளில்!

- சொ.சேகர்

பாராட்டு விழா

எது எதுக்கு
யார் யார்
யார் யாருக்கு நடத்தலாம்?

சாதனையாளர்க்கோ
சமூகத் தொண்டர்க்கோ
வீரர்க்கோ என்றில்லை
யார் யார்க்கு வேண்டுமானாலும்
எதற்கு வேண்டுமானாலும்
நடத்திக்கொள்ளலாம்

அதிகம் கொலை செய்தவர்க்கு
கொலைக்குத்
துணை நின்றவர்க்கு
கொலை செய்யப்பட்டவர்க்கு
பயன் பெற்றதற்கு
பயன் பெறுவதற்கு
பிரபலமாவதற்கு
விழா நடத்துவதற்கு
மனத்தில் இடம் பிடிப்பதற்கு
சும்மா பாராட்டுவதற்கு
பாராட்டு விழா நடத்தியதற்கு
சிலரைப் புறக்கணிப்பதற்கு

பிறர்தான் நடத்த
வேண்டுமென்பதில்லை
பிறர் பெயரில் நாமேகூட
நடத்திக்கொள்ளலாம்

அல்லது
பிறரைத் தூண்டி
நடத்திக்கொள்ளலாம்

பாராட்டு விழாக்கள்
பாராட்டுவதற்காக மட்டும்
நடத்தப்படுவதில்லை!

- யாழினி முனுசாமி

ரகசியம் அல்லாத ரகசியம்!

என்னிடம் சொல்வதற்கு
தன்னிடம்
ஒரு ரகசியம் வைத்திருப்பதாக
ஓடி வந்து சொல்கிறாள்
குழந்தை.

மேலும் அதை
யாரிடமும்
சொல்லிவிடக் கூடாதென
சத்தியமும் வாங்கிவிடுகிறாள்.

பின்பும்
பல பீடிகைகளுடன்
காதில் கிசுகிசுக்கிறாள்.

அது ஒன்றும்
அத்தனைப் பெரிய
பிரபஞ்ச ரகசியமாயிருக்காது.
ரகசியமே அல்ல என்று
அதைப் புறந்தள்ளவும்
முடியாத
அந்த ரகசியத்தை
உங்களிடம்
என்னால் சொல்ல முடியாது
சத்தியத்தை மீறி.

நாளை அவளே
உங்களிடம் சொல்வாள்

''என்னிடம் ஒரு ரகசியம்
உள்ளது
யாரிடமும்
சொல்லிவிடாதீர்கள்''
என்றபடிக்கு!

- இரா.பூபாலன்

மனப் பால்

சகுனம் சரி இல்லை
திரும்பி வந்துவிட்டேன்
மனதில் ஓடும்
ஆயிரம் பூனைகளை
என்ன செய்ய?

- வெண்பா

தலையணை தைலம்

தலையணை அருகே
தைலம்
ஒவ்வொரு வீட்டிலும்
வெவ்வேறு வாசனையோடு.

- நலங்கிள்ளி

பொம்மை உலகம்

ஒவ்வொருவரிடமும்
இருக்கிறது
ஒரு கரடி பொம்மையோ
தன்னைச் செதுக்கிக்கொள்ளும்
பெண் பொம்மையோ
நெளிந்து நிற்கும்
ஒரு தோழி பொம்மையோ...

சில பொம்மைகள்
கை கூட்டி முழங்கால் மடித்து
கண் சாய்த்து அமர்ந்து

ஸ்நேகிதனை
கண் கொட்டாமல்
அல்லும் பகலும்
கண்ணாடி கவருக்குள்ளிருந்து
பார்த்தபடி

அவர்கள் தன்னோடு
தன் கவலைகளோடு
பேசிக்கொள்ளும்போது
காதுகள் கொடுத்து

மகிழ்ச்சியாய்
தோழர்கள் ஆடும்போது
புன்னகைத்தபடி

கூட இருப்பதே
ஒரு தவமாய் இயற்றி
விட்டுச் சென்ற
இடத்திலேயே காத்துக்கிடந்து

புறக்கணித்தோ
பரணிலோ
குப்பைத் தொட்டியிலோ
வீசிச் செல்லும்
நண்பர்களைக் குறை கூறாமல்
அங்கும் மௌனமாய்...
அங்கீகரிப்பும் அனுமதிப்புமாய்...

- தேனம்மை லெட்சுமணன்

பயத்தின் திசைகள்

அடிப்பானோ என்று நாயும்...
கடிக்குமோ என்று நானும்...
எப்போதும் ஓடியிருக்கிறோம்
எதிரெதிர் திசைகளில்!

- சொ.சேகர்

பாராட்டு விழா

எது எதுக்கு
யார் யார்
யார் யாருக்கு நடத்தலாம்?

சாதனையாளர்க்கோ
சமூகத் தொண்டர்க்கோ
வீரர்க்கோ என்றில்லை
யார் யார்க்கு வேண்டுமானாலும்
எதற்கு வேண்டுமானாலும்
நடத்திக்கொள்ளலாம்

அதிகம் கொலை செய்தவர்க்கு
கொலைக்குத்
துணை நின்றவர்க்கு
கொலை செய்யப்பட்டவர்க்கு
பயன் பெற்றதற்கு
பயன் பெறுவதற்கு
பிரபலமாவதற்கு
விழா நடத்துவதற்கு
மனத்தில் இடம் பிடிப்பதற்கு
சும்மா பாராட்டுவதற்கு
பாராட்டு விழா நடத்தியதற்கு
சிலரைப் புறக்கணிப்பதற்கு

பிறர்தான் நடத்த
வேண்டுமென்பதில்லை
பிறர் பெயரில் நாமேகூட
நடத்திக்கொள்ளலாம்

அல்லது
பிறரைத் தூண்டி
நடத்திக்கொள்ளலாம்

பாராட்டு விழாக்கள்
பாராட்டுவதற்காக மட்டும்
நடத்தப்படுவதில்லை!

- யாழினி முனுசாமி