போர் நிலம்

வெறும் நிலத்திற்கு பொம்மைகள் திரும்புகின்றன
பிரயாணிப்பவர்கள் எல்லோரது கைகளிலும்
பெருத்த வண்டிகளிலும்
அவர்களிடமுள்ள அகலமான குறுக்குப் பைகளிலும்
நிலத்தை அள்ளிச் செல்லுவதாக
வயது முதிர்ந்தவர்கள் பிதற்றுகிறார்கள்.

போர் நிலத்தில் குழந்தையின் பொம்மை
இறந்து சிதைவுகளுடன் கிடக்கிறது
கொல்லப்பட்டிருக்கிற தாயைக் குறித்தோ
தன் தந்தையைக் குறித்தோ
எதுவும் கேட்காமல் மறந்துபோன குழந்தை
தன் பொம்மை தேடி பாதியாய் மீட்டிருக்கிறது.

தரப்பால் துண்டுகளுடன்
சில பூவரசம் தடிகளையும் எடுத்துக்கொண்டு
பொம்மை வீடுகளைக்
குழந்தைகள் மூட்டிக்கொண்டு அதனுள் இருக்கின்றனர்
சுவர்களோ தடுப்புக்களோ இல்லாத
பொம்மை வீட்டுக்குள்
காற்றும் புழுதியும் வெம்மையும்
நுழைந்து காலச் சித்திரமாய் படிந்திருக்கிறது.

பெருமழையின் ஈரம் ஊறி முட்டிய
நிலத்தில் கைகளால் மண் அணைத்தபடி
சேற்றில் குளிக்கும்
குழந்தைகளின் கைகளிலிருக்கிற பொம்மைகளின்
வீடுகளுக்காகப் போர் தொடங்குகிறது.

யுத்தம் பிடித்து அழிவுகள் நிறைந்துபோய்க் கிடக்கிற
நிலத்தின் வாசனையைக் குழந்தைகள் முகர்கின்றனர்
வெடிபொருட்களின் புகை
இருதயத்தை ஊடறுத்துச் செல்கிறது
நஞ்சூறி நீலமாகிய தண்ணீரைக் குடித்து
குழந்தைகள் பசியாறுகின்றனர்.

தங்களைத் தாங்களே கொலை செய்யும் குழந்தைகளின்
கையில் உடைந்த பொம்மைகளைத் தவிர ஒன்றுமில்லை
போர் தின்று
நஞ்சுண்ட நிலத்தில் குந்தி இருப்பதற்காய் இன்னும் போர் நடக்கிறது.

குருதிக்கடல் நிலத்தின் பெருங்காற்று

பெருநிலத்தின் கடலில் கொட்டிய குருதி
உப்பு வயல்களில் தேங்கிக்கிடக்கிறது
வெடிகள் அதிர்ந்து புகை எழும்பி
உயிர் கரைந்த நாட்களில்
வேழினியின் தந்தை
உப்பு வயல்களில் உயிர் கொட்டி விறைத்திருந்தார்
வேழினியின் கண்களில் நீங்காதிருக்கின்றன
உப்பு வயல்களில் நகர்ந்த
வியர்வைகளும் குருதிகளும்.

நிலத்திற்காய் கொட்டிய குருதி
காயாமல் பிசுபிசுக்கிறது
வேழியின் கண்களை நிலம் கொள்ளையிடும்
கைகள் குத்துகின்றன
அன்றெமது நிலத்திற்காய்
இதே தெருவில் பற்றைகளினூடே
வெடிகளைச் சுமந்து சென்றவர்கள் நகரும் பொழுது
குருதி பெருக்கெடுத்துக் கொட்டியது.

இன்றெம் நிலத்தில்
மிகக் கொடும் கைகள் விளைந்திருக்கின்றன
நிலம் அள்ளும் கைகளின் நகங்கள்
உப்பு வயல் கடல் நிலத்தில்
வளர்ந்து கண்களையும் முகத்தையும் குத்துகின்றன.

அன்றெமது கொடி பறந்த தடிகளில்
நிலத் துயரம் பறக்கிறது
வெடி சுமந்து சென்றவரின்
தாங்கியில் வேறு கதைகள் எழுதப்பட்டுள்ளன
உப்பு வயல்களில் முளைத்து
இன்னும் உயிரோடு கிடந்து
துடிக்கிற வார்த்தைகள் பிடுங்கப்படுகிறது.

நிலம் அள்ளித் தின்ற கைகள்
எப்பொழுதும் தெருவில் செல்பவர்களை மிரட்டுகின்றன
கனவின் குருதி வயல்களில் உயிர்கள் மணக்கின்றன
உப்பு வயல்களில் மீண்டும் மீண்டும்
முளைக்கின்றன வெடி சுமந்தவர்களின் முகங்கள்.

இந்தக் கடல் நிலம் அடிமையாக்கப்பட்டதை
வேழினி தாங்க முடியாது துடிக்கிறாள்
எப்பொழுதும் காதுகளை நிரப்பியபடியிருக்கும்
குருதிக் கடல் நிலத்தின் பெரும் உப்புக் காற்று
வெடி சுமந்தவர்களின் கதைகளைக் கூவியபடியிருக்கிறது!

சிசுக்கள் வேகும் அடுப்பு

செம்புழுதி மூடி வளரும் கூடாரத்தில்
அடுப்புகள் எரியாத ஊரில்
ஏனைய இரண்டு குழந்தைகளும்
உணவுப் பாத்திரங்களை அறியாது அழுதழுது தூங்கினர்
தலைவன் முட்கம்பிகளால்
கட்டப்பட்டு யுத்தப் பாவத்தைத் தின்கிறான்
தலைவி துயரம் துடைக்க முடியாத
பசிக் கூடாரத்தைச் சுமக்கிறாள்
வன்புணர்வுக் கோடுகள் நிரம்பிய சீருடைகளும்
துவக்குகளும்
இரும்புத் தொப்பிகளும் அவளைப் புணர்ந்து
பசி தீர்த்த இரவில்
குழந்தைகள் பசியோடு உறங்கினர்
இரவில் பிறந்த சிசுக்களைக் கொன்று
நெருப்பு தகித்தாறாத
அடுப்பில் புதைத்தாள்
தொப்புள் கொடிகளை அறுத்து
பனிக்குடங்களை உடைத்தாள்
ரத்தம் பெருக்கெடுக்க
அவள் ரத்தக் கூடாரத்துள் கிடந்தாள்
குழந்தைகள் பசியின்றி உறங்கினர்!