கதைகள்

பேசி ஜெயிக்கலாம் வாங்க!

மாமியார்கள் பல விதம்.. ஒவ்வொருவரும் ஒரு விதம்.. அதில் ஒன்றுதான் 'யார் மனசுல யார்?' என்கிற டைப்..

அநேகமாக எல்லார் வீட்டிலும் இருக்கிற வகைதான் இந்த மாமியார். தனக்கு இன்னது வேண்டும் என்று வாய் விட்டுச் சொல்ல மாட்டார்கள். 'சரி.. சிறுசுகள் எப்படியோ சமைத்துப் போடட்டும்' என்றும் விட மாட்டார்கள். தான் நினைக்கிறதைச் சாதித்து விட்டே நிமிர்ந்து உட்காருவார்கள்.

ஆண்டாளம்மாவுக்கு செலூலாய்ட் பொம்மை மாதிரி இரண்டு மருமகள்கள்; நான்கு பேரக் குழந்தைகள். வயது எழுபதுக்கும் மேலாகிறது. ஆனால், சமையலறை ராணி அவள்தான். கேட்டால், 'பாவம்.. குழந்தைகள் எதுக்கு சிரமப்படணும்..' என்று தேனொழுகப் பேசுவாள். ஆனால், காரணம் அதுவல்ல.. மருமகள்கள், தன் வாய்க்கு வக்கணையாக சமைத்துப் போட மாட்டார்கள் என்கிற நினைப்புத்-தான்..

கிழவிக்கு, எதெல்லாம் ஆகாது என்று டாக்டர் சொல்லியிருக்கி-றாரோ.. அதெல்லாம்தான் பிடிக்கும். அதிலும் முக்கியமாக சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, வாழைக்காய்... தினசரி மெனுவில் அவசியம் அவளுக்கு. 'சிறுசுகள், 'டயட் டயட்' என்று எப்போதும் இஞ்ச் டேப்பும் கையுமாக அலைகிறார்கள்.. சமையலுக்கு எண்ணெயை இங்க் ஃபில்லரால்தான் விடுகிறார்கள்..' - அவளால் இந்த அநியாயத்தை எல்லாம் தாங்க முடியாது.

ஆதலால், காலையில் மார்க்கெட்டுக்கு எந்த மருமகள் கிளம்புகிறாளோ.. அவளிடம் ஆரம்பித்து விடுவாள்..

''யார் மார்க்கெட்டுக்குப் போறது?''

''ஏன்.. நான்தான்..''

''மாட்டுக்குப் போடறப்பல வண்டி கீரை கட்டை வாங்கிட்டு வந்து போடாதே. நேத்து பெய்ஞ்ச மழையில கீரை கறுப்பா இருக்கும்.''

''சரி.. வேற என்ன.. சௌ சௌ?''

''அதை குழந்தைகள் சீந்தாது..''

''வேற.. கத்திரிக்கா?''

''சின்னவளுக்கு தலையில இருந்த சிரங்கு இப்பத்தான் ஆறிட்டு வர்றது. கத்திரிக்கா மறுபடியும் கிளறி விட்டுடாதோ..?''

''அவரை..''

''அவரைக்காய, நான் காசிக்குப் போனப்ப, ஏதாவது ஒரு காய விடணும்னு சொன்னப்ப விட்டுட்டேன்..''

''வேற என்னதான்..''

''அரை கிலோ சேப்பங்கிழங்கு இருக்கு. இன்னும் ஒரு கிலோ வாங்கு. ரோஸ்ட் பண்ணினா ஏதோ அந்த சாக்குல குழந்தைகளுக்கு நாலு கவளம் சோறு இறங்கும்.''

''ஆனா.. உங்களுக்கு ஆகாதே..''

''ஆமா போ.. நான் ஒரு கணக்குல சேர்த்தியா.. ஏதோ கிடைக்கிறதைத் தின்னுட்டு விழுந்து கிடக்கறதை விட்டுட்டு..'' - இப்படிச் சொல்லுவாளே தவிர முக்கால் கிலோ சேப்பங்கிழங்கு ஆண்டாளம்மாவுக்குத்தான்.

இது 'டெலிகேட்'டான மேட்டராதலால் யாருமே இந்த விஷயத்தின் பக்கம் போவதில்லை. என்றைக்காவது அவள் பையன்களில் எவனாவது அக்கறையில் கேட்டாலும்.. குதி குதியெனக் குதிப்பாள் அவள்.

''ஏம்மா, உனக்குதான் கிழங்கு, எண்ணெய்லாம் ஆகாதுல.. உன் மருமகளுங்கதான் தினமும் மார்க்கெட் போறாங்களே.. ஃபிரெஷ்ஷா, பச்சைக் காய்கறி வாங்கிட்டு வரச் சொல்ல வேண்டியதுதானே..''

''ஏண்டா.. அதை வாங்கு, இதை வாங்குனு ஆர்டர் பண்ணிட்டு அவஸ்தைப்படணுமா நான்? சௌ சௌ நீயே சாப்பிட மாட்டே. உன் சின்னப் பொண்ணுக்கு கத்திரிக்கா ஆகாது. வெண்டக்கா இந்தக் குடும்பத்துக்கு ரெண்டு கிலோ வாங்கினாலும் வதக்கினா இத்து-ணூண்டா போயிடும். எனக்கு கிழங்கு ஆகாட்டி என்ன.. நீங்க எல்லாரும் சாப்பிட்டுப் போங்க.

இன்னிக்கு இத்தனை சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பண்ணினேனே.. ஒரு துண்டு எடுத்து வாயில போட்டுண்டேனா.. உன் பெண்டாட்டியையே கேளேன்..'' - கிழவி மருமகளையும் இக்கட்டில் மாட்டி விடுவாள்.

பார்த்தார்கள் இரண்டு மருமகள்களும்.. வித விதமாக யோசித்தார்கள். கிழங்குக்கு கல்தா கொடுக்க வேண்டும்.. கிழவிக்கு காய்கறியை சமைக்க ஆசை வர வேண்டும். எப்படி? இது போன்றவர்களை நாசூக்காகத்தான் திசை திருப்ப முடியும்.

ஆண்டாளம்மாளின் கணவர் உயிரோடு இருந்தபோது தினமும் பச்சை காய்கறி, கீரை வகை களைத்தான் சமைக்க வேண்டும் என்று வற்புறுத்து வாராம். தனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ.. 'மணாளனே மங்கையின் பாக்கியம்' என்று ஆண்டாளம்மாள் சமைத்துப் போடுவாளாம். மாமி யாரின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து இதை எடுத்துக் கொண்டார்கள் மருமகள்கள்..

''அத்தை.. மாமா இருக்குறப்ப நீங்க ஒரு பூசணிக்கா கூட்டு செய்வீங்களாமே.. மாமா அந்தக் கூட்டுக்காகவே தங்க வளையல் செஞ்சு போடணும்னு சொல்லுவாராமே..''

''கூட்டு நல்லாயிருக்குனுதான் சொல்லுவாரு. தங்க வளையல் பத்தியெல்லாம் சொன்னதில்ல..''

''உங்ககிட்ட சொல்லலையா இருக்கும். உங்க பையன் சொல்றாரே. 'அந்தக் கூட்டு மாதிரி வரவே வராதுடீ.. இத்தனைக்கும் தேங்கா கூட அரைச்சு விட மாட்டாங்க அம்மா.. வீட்டுக்குள்ளே நுழையறப்பவே வாசனை ஆளைத் தூக்கும். அதெல்லாம் அப்பாவோட போச்சு.. அம்மா, அப்புறம் அது மாதிரி சமைக்கறதே இல்லை'னு.. ரொம்ப வருத்தப்பட்டாரு..''

''யாரு.. சின்னவனா?''

''ரெண்டு பேருமேதான். அதான் நானும் அக்காவும் என்ன சொன்னோம்னா.. 'அத்தை பாவம், வயசாயிடுச்சு.. முடியலே. அவங்ககிட்ட அளவு, பக்குவமெல்லாம் கேட்டு.. பூசணிக்கா கூட்டு.. அப்புறம் கீரைத்தண்டு சாம்பார்.. முட்டைகோஸை மல்லிப்பூ மாதிரி பொரியல் பண்ணுவீங்களாமே.. அதையெல்லாம் கத்துக்கிட்டு செஞ்சு போடறோம்'னு..''

அவ்வளவுதான்.. ஆண்டாளம்மா ஃப்ளாட்! இப்போதெல்லாம் மார்க்கெட்டில் பை நிறையும் காய்கறிகளுடன் ஆண்டாள் உலாவுவதாக தகவல்!

அது சரி.. ஆண்டாளுக்கு இந்த வழி.. இன்னும் சில இடக்கு மடக்குகளிடமும்.. நச்சு பிச்சு உறவுகளிடமும் பேசி ஜெயிப்பது எப்படி? அது பற்றியும்..

- பேசுவோம்..