காஞ்சனா ஜெயதிலகர்

சுடும் நிலவு.. சுடாத சூரியன்!

இதுவரை
பெரும் பணக்காரரான வித்யாவதியின் மகன்கள் விஜயன் - விக்ரமன். விஜயன், மனநலக் குறைபாடு கொண்ட மீனலோச்சனியை மணக்கிறான். விக்ரமன், சந்திரலேகாவை மணக்கிறான். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கிறது.
தன்னால் தாய்மை அடைய முடியாததை நினைத்து மீனா ஆத்திரத்தில் தவிக்கிறாள். இந்நிலையில் வித்யாவதி இறந்து விடுகிறார். குட்டி இளவரசனாக வீட்டில் வளைய வரும் சந்திராவின் மகனையும் வெறுக்கிறாள் மீனா. பிறகு..

காலை டிபனை முடித்தவர்கள், அன்றைக்கான வேலைகளுக்குத் தயாராகி விட்டிருந்த சமயம்..

வேலைக்கார செல்லியின் அலறல் சமையலறைச் சுவரைத் தாண்டி வீட்டை ஊடுருவியது!

''என்ன சத்தம்? யாரு.. என்னாச்சு?'' என்ற விசாரிப்புடன் வீட்டாரின் கவனம் சமையல்கட்டுக்குப் போனது.

''பாம்பு.. பாம்புங்கய்யா'' - விஜயனிடம் முகம் வெளிறச் சொன்னாள் செல்லி.

''எங்கே?''

''சிங்க்குல டிபனு பாத்திரம் குமிஞ்சு கிடந்தததுங்க... ரெண்டாவது பாத்திரத்தை எடுத்த என் விரலுல வழுவழுன்னு தட்டுப்பட்டுச்சு'' - விளக்கியவளின் தோள்கள் உதறின.

''அடிச்சாச்சா?''

''இல்லீங்கய்யா... கறுப்பா கைத் தடிமனு சாரை.. இந்த ஜன்னல் வழியே போயிருச்சே..''

செல்லிக்கு சற்று 'கீச்சு' குரல். அதில் அவள் வார்த்தைகளைக் குழைத்ததால் கிடைத்த செல்லப் பெயரே 'குயிலு' என்பது. ஆனால், இப்போது அச்சத்தில் அவள் பேச்சு, கொஞ்சலாக இல்லாமல் வெறுமே 'க்றீச்'சிட்டது!

''அடிக்கலியா?''

''நமக்குப் பாவம் சேருமாமுங்களே. நானும் அப்பப்ப பாம்பைக் கண்ணுல பாக்கறதுதான். ஆனா, குயி.. செல்லிகிட்ட சொல்றதில்லீங்க.. பயந்திரும்னு. இப்போ ஜாஸ்தியாயிருச்சு போல..'' என்றான் நாணு.

''விட்டா பெருகத்தான் செய்யும்.. ஏதாவது செய்யணுமே'' - சந்திரா யோசனை கேட்டாள்.

''மகுடி ஊதறவனை வரச் சொல்லணும்ங்க. ஊதியே அத்தனையையும் பொந்துக்குள்ளாரயிருந்து வரவழைச்சு உருவி எடுத்துப் போயிருவாங்க'' - யோசனை தந்தவர் தோட்டக்காரர்.

''அப்ப அதுக்கு ஏற்பாடு செய்யுங்க'' என்றபடி விஜயன் கிளம்பினான்.

''அந்திப் பொழுதுக்குத்தான் அரவமெல்லாம் மகுடிக்கு அடங்கும்'' எல்லாம் தெரிந்தவர் போல அறிவித்த தோட்டக்காரர் முஸ்தீபுடன் ஏற்பாடுகளைச் செய்ய, மறுநாள் மாலை மகுடியின் விநோத ஒலி அந்த வீட்டைச் சூழ்ந்தது!

வீட்டின் காவலாள், கார் ஓட்டுனர், தோட்ட வேலையாட்கள் எல்லோரும் அரவங்களைக் காணும் ஆவலுடன் அங்கே கூட, நாணுவும் இரவுச் சமையலை சீக்கிரமே முடித்து விட்டு, துண்டை முண்டாசாகக் கட்டியபடி விசித்திரக்

காட்சிகளுக்காகக் காத்து நின்றான்.

'சமையலறையின் ஜன்னல் வழியே தெரிவதே தனக்குப் போதும்' என்று செல்லி மட்டும் உள்ளே பம்மியிருந்தாள். சூர்யரேகாவுக்குமே வேடிக்கை பார்க்கும் ஆசையிருந்தது. ஆக.. அவளும் பின்புறத் தோட்டத்தில். விக்கிரமன் தெரிந்தவரைப் பார்க்க வெளியே போய்விட, விஜயன், உற்பத்தியின் செலவைக் குறைப்பது எப்படி என்பதை கம்ப்யூட்டரின் கணக்கு வழக்குகளிலிருந்து ஆராய்ந்தபடி இருந்தான். சந்திரலேகா, சலவை இயந்திரத்தைத் தனக்கு விற்றவர்களை போனில் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

''மூணு வருஷ கேரன்ட்டி தந்திருக்கீங்க. ஆக.. இழுத்தடிச்சு, அது முடிஞ்ச பிறகு ரிப்பேருக்கு ஆட்களை அனுப்பினா, செமத்தியா ரிப்பேர் சார்ஜஸ் போடலாம்னு நினைக்கறீங்களா?''

''இல்லைன்னா நாளைக்கே வந்து மெஷினை சரி செய்யுங்க சார். இங்கே வேலை கெடுதே.. வாடிக்கையாளரிடம் சால்ஜாப்பு சொல்ல எங்களுக்கு உங்க அளவுக்கு சாமர்த்தியமில்லை!''

போன் பேச்சை முடித்தவள், ஒரு நீள மூச்செடுத்த நிமிடம்தான் அந்த சத்தம் கேட்டது.

''சந்துக் குட்டி மாடியில தூங்கறான் சந்திரா. பார்த்துக்கறியா?'' என்ற சூர்யா 'பாம்பு பிடி படல'த்தைக் காணப் போயிருந்ததால் கூர்மைப்பட்டிருந்த இவள் கவனத்தில் அந்த சத்தம் தெளிவாகவே பதிந்தது..

யாரது மாடிப்படியில் உருளுவது.. சந்தீப்பா?

பதறி, படிகளை நோக்கி ஓடினாள் சந்திரலேகா.

ஓடிய கால்கள் அங்கு கண்ட காட்சியில் உறைந்து நின்றன! ஸ்தம்பித்த மூளையால் அவற்றுக்கு எந்தக் கட்டளையையும் தர முடியவில்லை!

'எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதையும் பரபரன்னு இனி செய்யவே கூடாது நீ' என்று இவள் சொல்லிப் புரட்டிப் போட்டிருந்த அவளது மூளை, என்ன செய்வதென்று புரியாமல் திகைத்திருந்தது.

இதயம் மட்டும் எம்பி எம்பித் துடித்தது!

விழிகள் அகன்று அந்த விநோதக் காட்சியை மூளைக்குள் திணிக்க முயன்றன..!

மீனலோச்சனி மாடிப்படிகளில் உருண்டு விழுந்து கிடந்தாள்! பிடிமானத்துக்காக விரிந்த அவள் கைகள் அது கிடைக்காத ஏமாற்றத்தில் இன்னும் விரிந்தே கிடந்தன!

கால்களில் ஒன்று மடங்கி, மற்றது நீண்டிருக்க, அதிலிருந்து பிரியாத குதி காலுயர்ந்த செருப்புகள் இப்போது கழன்றிருந்தன!

கழுத்தின் அசாத்திய கோணம், விரிந்த வாய் வழியே சதா மீனலோச்சனி மறைக்க முயலும் எடுப்பான பற்கள் தெரிந்து.. 'அவள்', 'அது'வாகியிருந்ததைச் சொல்லின!

சந்திரலேகாவின் உலர்ந்த தொண்டையிலிருந்து குரல் எழும்பவில்லை. வீட்டின் பின்புறக் களேபரத்தில் மீனா படிகளில் விழுந்து உருண்டது இன்னும் கவனம் பெறவில்லை. ஏ.ஸி. அறையில் இருந்த விஜயனையும் எட்டியிருக்கவில்லை.

கனத்த கால்களை நகர்த்தியவள், மீனாவை நெருங்கிக் குனிந்து, நாசியின் கீழே விரலை நீட்டினாள்.

கழுத்தின் விகார வளைவும், பாதி திறந்த விழிகளும் மிரட்டின. மாடியிலிருந்து சந்தீப்பின் தூக்கக் கலக்கமான ''அம்மா'' கேட்டது!

குழந்தை வந்து இந்தக் கோரம் கண்டு பயந்து விடக் கூடாது.. நடுங்கிய கால்களை படியேறச் செய்தாள். 'பிள்ளையைத் தூக்கிய பின், 'இன்டர்காம்'-ல் யாரையேனும் அழைக்கலாம்..' விரைந்து ஏறிய பாதங்கள் தடுமாறின..

வீட்டின் பின்புறம் புதிதாகக் கேட்ட கூக்குரலில் மீனலோச்சனி ஈர்க்கப்பட்டு, படியிறங்க.. அவளது செருப்புகள், அவளை மேலும் தடுமாறச் செய்து விட்டனவோ..?

இரண்டாம் நிமிடம் மறுபடி சந்தீப்பின் அழைப்பு.. இப்போது அதில் அழுகை சேர்ந்திருந்தது.

''இதோ வந்துட்டேன் செல்லம்.. அங்கேயே இரு..'' மகனிடம் ஓடினாள் சந்திரலேகா.

தன்னால் ஜீரணிக்க முடியாத சில அதிர்ச்சியான சம்பவங்களை, மூளைப் பகுதி ஸ்தம்பித்து சமாளிக்கும் போலும்.

மீனலோச்சனியின் சாவைத் தொடர்ந்த பல மணி நேரங்கள் நிமிடமாக நழுவியது போலிருந்தது!

நடந்தது என்ன என்பதை நினைக்க முயன்றதில் துண்டு துண்டாக சில ஞாபகங்கள் மட்டுமே உள்ளே கோர்வையின்றி முண்டின..

தூங்கி எழுந்து கண்ணைக் கசக்கிய மகனை அணைத்ததன் இதயத் துடிப்பு சந்திராவையே அச்சுறுத்தியது. இதமாக இயங்கிய மகனின் துடிப்பு தன்னுடையதை ஆசுவாசப்படுத்த, சந்தீப்பை இறுக அணைத்துக் கொண்டாள்.

நேரமறியாது நின்றவள், மகன் ''ம்மா.. பால்'' என்றதும்தான் மாடியிலிருந்த அழைப்பு மணியை அழுத்தினாள். மறுபடி மீனாவின் உடலைப் பார்க்க முடியுமென்று தோன்றவில்லை. கைகளை விரித்து, தலை கீழாக, வாயும் கண்ணும் திறந்து கிடந்த அந்தக் கோலம்..

பனிப்பிரதேசத்தில் நிர்வாணமாக நிற்பவளைப் போல உதறியது இவள் தேகம்.. பற்கள் கிட்டித்துத் தந்தியடித்தன!

இன்டர்காம் வசதி ஏற்பட்ட பிறகு, இந்த மின்சார மணியை ஒலிக்க நேர்ந்ததில்லை. ஆனால், இன்டர்காம் மூலம் தன்னால் அழைத்துப் பேச முடியுமா என்ற சந்தேகத்தில் வெறுமே மணிக்குமிழை அழுத்தியபடி நின்றாள்.

யாரோ ஓடி வரும் சத்தம்.. பின் செல்லியின் அலறல்.. தொடர்ந்து பல பேச்சுக் குரல்கள்.. பதறல்கள்.

''யாரும் எதையும் தொட வேணாம். தள்ளி நில்லுங்க.. பல்ஸ் இல்லை.. எதுக்கும் டாக்டர் வரட்டும்.''

சூர்யரேகாவின் உத்தரவுகள் கனவில் கேட்பது போல் இருந்தன!

புத்தி முழுக்க கிரகிக்க முடியாமல் நழுவ விட்ட வார்த்தைகள் வெறும் சத்தங்களாக வீட்டை சுற்றிச் சுற்றி அலைந்தன.

மகனை அணைத்தபடி சுவரோடு ஒட்டி நின்றவளை, சூர்யாவின் குரல் இதமாகத் தேற்றியது.

''சந்தீப்பை எங்கிட்ட தந்துட்டு, உக்கார் சந்திரா..''

''இல்ல.. சந்து என்னோடவே இருக்கட்டும்.''

''அவனுக்குப் பசிக்குது சந்திரா.. தூங்கி எழுந்த பிள்ளை எதுவும் சாப்பிடலையே?''

''ம்ம்..''

''மீனாவோட அப்பா, அம்மாவுக்குத் தகவல் சொல்லிட்டேன்.. இதோ உனக்கும் காபி வந்திருச்சு.. குடி.''

அந்த சூடான பானம் சந்திராவினுள்ளே பரவியிருந்த மசமசப்பை சற்று துடைத்தெடுத்தது.

''அவங்க எப்போ வர்றாங்க?''

''ஒடனே வந்திருவாங்கள்ல.. மீனா அவங்களுக்கு ஒரே பொண்ணு இல்லையா? அவ அப்பாவுக்குப் பதட்டத்தோட ஆத்திரமும் கூட. ஆக.. வந்ததும் துக்கத்துல அவங்க எதாவது பேசினாலும் நாம கேட்டுக்கணும், சந்திரா..''

''எனக்கு.. எனக்குப் பேச்சே வரலை சூர்யா.. ரொம்பக் குழப்பமா இருக்கு.''

''புரியுது. உன் அதிர்ச்சி புரிஞ்சதால நான்தான் முதல்ல 'பாடி'யைப் பார்த்ததா போலீஸிடம் சொன்னேன்.. எனக்குப் பின்னால செல்லியும் வந்தா..''

''போலீஸ்.. ஏன்?'' கனவில் பேசுபவளைப் போலக் கேட்டாள் சந்திரா.

''மீனாவின் அப்பா மிஸ்டர் அமரேசன் பதறினார்னேனே.. அங்கிருந்தே மதுரை டி.ஐ.ஜி-யிடம் புகார் தந்து, அவர் உத்தரவில் லோக்கல் போலீஸ் விசாரிக்க வந்தாங்க..''

சந்திராவின் முகம் வெளுத்து, மேனி நடுங்கியது.

''அவ... மீனலோச்சனி விழுந்தது ஒரு விபத்துதானே சூர்யா..''

''ம்ம்.. முதல்ல டாக்டரை வரவழைச்சோம். வந்தவர் ஒரே பார்வையில அதைத்தான் சொன்னார்.. 'கழுத்து நெரிக்கப்படலை. வேற காயங்கள் இல்லை'னு. மயக்க மருந்தோ, விஷமோ உடம்பில் இருக்குமான்னு பரிசோதனையில் தெரியலாம்னார்...''

''என்ன சொல்ற?''

''விபத்துதான்னு. மீனாவை யாரும் கொலை பண்ணலை! டாக்டர் அட்வைஸின்படி ஆர்.டி.ஓ., ரெஜிஸ்ட்ரார்னு சிலரும் வந்து பார்த்து ரிப்போர்ட் தந்திருக்காங்க.''

''இவ்வளவு நடந்திருக்கு.. நீயே எல்லாத்தையும் சமாளிச்சிட்டியா சூர்யா?''

''விஜயன் வீட்டில்தானே இருந்தார்? விக்ரமனையும் வரவழைச்சுட்டேன். குழந்தையோட மாடியிலிருந்த நீ பாலுக்காக மணியடிச்சதால்தான் நாங்க வந்து பார்த்தோம்.. பார்த்தா..''

குற்ற உணர்வுடன் சந்திராவின் பார்வை தடுமாறியது.

''குழந்தையோட இருக்கிற உன்னை தொந்தரவு பண்ண வேண்டாம்னு நான் கேட்டுக்கிட்டேன். விசாரணையை என்னிடமும் செல்லியிடமுமே வச்சுக்கச் சொன்னேன்..''

''நாந்தான் முதல்ல பார்த்தேன் சூர்யா..''

''இருக்கட்டும். அந்த அதிர்ச்சி உன்னை ரொம்ப பாதிச்சிருச்சே.. இந்த நிலையில போலீஸ் உன்னை விசாரிச்சா.. முன் பின்னா எதையேனும் உளறுவே.. எதுக்கு வம்பு..?''

''தே... தேங்க்ஸ்..''

முணுமுணுத்த சிநேகிதியின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டாள் சூர்யரேகா.

அன்றிரவு விக்ரமனிடம் சந்திரா ஏதும் பேசவில்லை. மௌனத்தில் அமிழ்ந்து கொண்டிருந்தவள், மறுநாள் இருட்டிய பின்பும் விளக்கேற்றாமல் தன் அறைக்குள் படுத்திருக்க, அறையின் கதவு மெள்ள திறந்தது.

அதிர்ச்சியால் விடைத்த சந்திராவின் நரம்புகள் சுலபமாக அதிர்ந்தன.. விக்கித்து எழுந்தவளை அந்தக் குரல் மிருதுவாக அமர்த்தியது.

''நான்தான் சந்திரா..'' - என்றது சூர்யா.

இன்னமும் சந்திராவின் நாவின் கட்டவிழவில்லை. ஆனால், அதற்குமாக சேர்த்து அவளது கண்கள் பேசின.

''சந்திரா.. உன்னை இவ்வளவு கலங்கி நான் பார்த்ததில்லை. கண்டதையும் யோசித்துக் குழம்பாதே. பயப்படக் கூடாது.. என்ன?''

அதுநாள்வரை ஆர்வமும் அன்பும், பெருமையும் சிநேகமுமாக சூர்யாவைப் பார்த்தவளின் விழிகள் முதன்முறையாக கலக்கத்துடன் கலவரமாக ஏறிட்டன.

எதுவும் பேசவில்லை சந்திரலேகா..

- தொடரும்..