காஞ்சனா ஜெயதிலகர்

சுடும் நிலவு.. சுடாத சூரியன்!

இதுவரை செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தின் தலைவி வித்யாவதி. அவருடைய மகன்கள் விஜயன் - விக்ரமன். அவர்கள் ஊரைச் சேர்ந்த உயிர்த் தோழிகள் சூர்யா- சந்திரா. விக்ரமனுக்கும் சந்திராவுக்கும் திருமணம் நடைபெற்று, ஆண் குழந்தை பிறக்கிறது. மன நலம் குன்றிய மீனலோச்சினி என்ற பெண்ணை, உண்மை அறியாமல் மணக்கிறான் விஜயன். இதற்கிடையில், வித்யாவதி மரணமடைகிறார். மீனலோச்சினி, மாடிப்படியில் உருண்டு விழுந்து இறக்கிறாள். விசாரணை நடைபெற்று, அது விபத்துதான் என்று முடிவாகிறது. பிறகு..

மழை.. வரப்போவதாக ஆசை காட்டிக் கொண்டிருந்தது. அந்த எதிர்பார்ப்பில் பூமி விட்ட ஏக்கப் பெருமூச்சின் வெப்பத்தைத் தணிக்கும் முயற்சியில் மரங்கள்.

அந்த இதமான முன் மாலை நேரம் சின்ன சந்தீப்பும் பள்ளியிலிருந்து திரும்ப, இரு பெண்களுமே அவனிடம் முகத்தைத் திருப்ப, வெட்டுப்பட்ட அவர்களது பேச்சு அந்தரத்தில் காத்து நின்றது! ஆக, இருவருக்குமே சந்தீப்பின் மழலையில் கருத்து பதியவில்லை.

''ஹை.. சுருளப்பா!''

''சுருள் அப்பம்டா செல்லம்..''

மெல்லிய மைதா மாவு சுருளுக்குள் பொதிந்திருந்த ஏலம் மணத்த இனிப்பு கலந்த தேங்காய்ப் பூவை ஆவலாக சுவைத்தான் சின்னவன்.

மதியம் குட்டித் தூக்கத்துக்குப் பிறகு பள்ளியிலேயே பாலும் குடித்துவிட்டு வீடு வரும் சந்தீப்புக்கு அந்நேரம் அம்மாவோடு பெரியம்மாவும் வீட்டில் இருக்க வேண்டும். படித்த எழுத்துக்களை, பாடல்களைக் கடை பரப்பிவிட்டு, தோட்டத்து புல்வெளியில் பந்து, நாய்க்குட்டிகளோடு உருண்டு ஆடிய பிறகுதான் அவனது குளியல்.

அன்றும் அவன் புல் சரிவில் பந்துகளுக்குப் போட்டியாக உருள, அவனை நாய்குட்டிகள் முகர்தலும் முணகலுமாக வாலாட்டியபடி துரத்தின.

காட்சி சுவாரஸ்யமாக இருந்தாலும், பெண்கள் நிறுத்தி வைத்திருந்த பேச்சை எடுத்துத் தொடர்ந்தார்கள்.

''ஜெகன் என்னை 'கூடப் பிறந்தவ மாதிரி'ன்னாரா சூர்யா? அவரை மறுபடி கூப்பிட்டு நான் வேலை தந்தது முரட்டு தைரியம்தான்.. இல்லையா..?''

''சரியானதைச் செஞ்சா தப்பில்ல! ஆனா.. அதை நீ எப்போ செஞ்சேனுதான் எனக்குத் தெரியலை.'' - சூர்யா முறுவலித்தாள்.

''சந்தீப்புக்குத் தடுப்பூசி போட வேண்டியிருந்துச்சு.. நீ அவனை திண்டுக்கல் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயிருந்தே. ஏற்கெனவே அது முடிவாயிருந்ததால, அப்ப ஜெகனை இன்டர்வியூக்கு வரச் சொன்னேன்.''

''ம்ம்..'' - சூர்யாவின் முறுவல் மாறவில்லை. அவளது கண்கள் தோழியைக் குற்றப்படுத்தவுமில்லை.

தாய்மை பூரிப்பிலிருந்த சந்திராவின் முகம் சில வாரங்களாக வற்றிப்

போயிருந்ததைப் பரிவுடன் கவனித்தது அவள் பார்வை.

''எனக்கு.. குற்ற உணர்ச்சியோட குடைச்சலைத் தாங்க முடியலை சூர்யா. அதுலருந்து தப்பிக்க ஜெகனுக்கு ஏதாவது செய்யணும்னு ரொம்ப நாளாவே யோசனைதான். தங்கச்சி சாவுக்காக விக்ரமனைப் பழி வாங்க வந்த அந்த அண்ணனைத் தடுத்தவ நான்..''

''இல்லைன்னா, அவர் இப்போ ஜெயில்ல இருந்திருக்கணும். நீ ஜெகனைக் கொலை குற்றத்துலருந்து காப்பாத்தியிருக்கே, சந்திரா..''

''ஆனா, அந்த சந்தர்ப்பத்தையும் எனக்காகப் பயன்படுத்திக்கிட்டேனே?''

''உங்க கல்யாணத்துக்காகத்தானே பயன்படுத்திக்கிட்டே? உங்க அன்பை, சந்தோஷத்தை.. இந்தக் குட்டி சந்தீப்பைப் பார்க்கும்போது அது கடவுள் போட்ட முடிச்சுங்கறதுல எனக்கு சந்தேகமே இல்ல சந்திரா.. பல வருஷங்களா உங்களுக்குள்ள வளர்ந்த நேசத்தை அன்னிக்கு நீங்க உணர்ந்தீங்க.. ஏன் அனாவசியமா குழப்பிக்கறே?''

''ஆனா.. ஜெகனுக்கு உண்மை தெரிஞ்சா? 'கோடரி மறந்து விடும்.. மரம் மறக்காது'னுவாங்களே..?''

- உணர்ச்சி மிகுதியில் சந்திராவின் உதடுகள் நடுங்கின.

வேறு ஏதோ ஒன்றும் தோழியின் மனதை உறுத்துவது சூர்யாவுக்குப் புரிந்தது.

''நீ மரத்தை வெட்டின இரும்பில்ல சந்திரா.. அது அழியாம காப்பாத்தின கம்பி வேலி. சீக்கிரமே மத்தவங்களுக்கும்.. அதாவது ஜெகனுக்கும் அது புரிஞ்சிடும். ஆமா.. நீ அவரை எப்படி தேடிப் பிடிச்சே?''

''என் வளைகாப்பு சமயம் இசை நிகழ்ச்சிக்காக 'லயா'வைக் கூப்பிடணும்னு ஒரு ஆசை. விசாரிக்கச் சொன்னா, 'அந்த ட்ரூப்பே இல்லை. பிரிஞ்சிடுச்சு. அதை நடத்தின ஜெகனுக்கு குடிக்கறது மட்டுந்தான் இப்ப வேலை'னு தகவல் வந்தது. ஆனாலும் அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினேன்..''

''ஓ.. அவர் ரெண்டரை வருஷம் கழிச்சு வந்தாராக்கும்?''

''ம்ம்.. அதுக்குள்ள அவர் வாழ்க்கையே மாறிடுச்சு. இருந்த வீட்டையும் வித்துக் குடிச்சு, பிச்சையெடுக்கற நிலைக்கு வந்தவர், போதையிலருந்து மீள சிகிச்சை எடுத்திருக்கார். சிகிச்சை கொடுத்தவங்க, 'எங்களால ஆனதை செஞ்சுட்டோம். இனி நீங்க ஒரு வேலை, பொறுப்புனு ஏத்துக்கிட்டாதான் இதுல இருந்து முழுக்க மீள முடியும்'னு சொல்லியிருக்காங்க.. அப்பதான் நான் வரச் சொன்ன ஞாபகம் அவருக்கு வந்ததாம்.''

''ஜெகனை வேலைக்கு எடுத்துக்க.. விக்ரம் ஒண்ணும் மறுப்பு சொல்லலையா?''

''கொஞ்சம் யோசிச்சார்.. அப்புறம் 'உனக்குச் சரினு படறதைச் செய்'யுன்னுட்டார். தயங்கினது ஜெகன்தான். 'ஏதோ டெலிவரி பாய் வேலை தருவீங்கனு நினைச்சேன். சூபர்வைஸர்ங்கற பொறுப்பு எனக்குத் தாங்காது, தெரியாது'ன்னார். 'லயா ட்ரூப்பை' நிர்வகிச்ச உங்களால இது முடியும்'னு சொல்லி சம்மதிக்க வச்சேன்.''

''அந்த நன்றி அவருக்கு இருக்கு சந்திரா. 'குட்டையில் முங்கி மூச்சடைக்க இருந்தவனை, தூக்கி சமுத்திரத்துல நீச்சலடிக்க வச்சிருச்சும்மா அந்த மகராசி'னாரே.. இப்ப பாட்டிலைத் தேடலைங்குறதுலயும் அவருக்கு ரொம்ப நிம்மதி.''

''ஆனா.. எதுக்காக நான் அவரை மெனக்கெட்டு தேடி, கூப்பிட்டு வேலை தந்தேன்னு ஜெகன் யோசிச்சா..?''

''போதையோடே இந்த மாதிரி சந்தேகக் கலக்கமும் அவருக்குத் தெளிஞ்சிருச்சுன்னே தோணுது சந்திரா'' - சொன்னவளின் முகத்தில் ஒரு பிரகாசம் இருந்தது. சமயம் பார்த்து ஜெகனுக்கு தகுந்த விளக்கமளிக்கத் தயார்' என்ற தொனி அதில் பளிச்சிட்டது. ஆனாலும், சந்திராவின் முகக் கலக்கம்தான் தெளிந்த பாடில்லை.

''என்ன சொல்றீங்க விஜய்?'' - வேகமாக கேட்டாள் சூர்யரேகா.

தான் சொன்னது கேட்டு, புரிந்தே அத்தனை வேகமாக பேசுகிறாள் என்பது புரிந்தவன் மௌனமாக நின்றான்.

அந்த அறையில் அவர்கள் இருவர் மட்டுமே.

தன் குரலைத் தணித்துக் கேட்டாள்..

''இது உங்க ஊர், உங்க வீடு, உங்க குடும்பம் விஜய்.. இதை விட்டுட்டு நீங்க ஏன் போகணும்? எங்கே போவீங்க?''

''அது ரெண்டாம்பட்சம். இப்ப என் தேவை நிம்மதி. அது இங்க இருக்குற வரை எனக்குக் கிடைக்காது. இந்த ஊர் என்னை ஒரு கொலையாளியா பார்க்குது. 'வேண்டாத மனைவியைத் தள்ளி கதையை முடிச்சிட்டான்'னு யார் யாரோ பேச, எனக்குக் கூசுது.''

''சரியா சொல்றீங்க.. 'யார் யாரோ'னு. அப்படி எவரோ சொல்றது நம்மை ஏன் பாதிக்கணும்? ஒரு கவிதை படிச்சிருக்கேன்..

'நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
ஒரு வண்ணானின் நாக்கு
அழுக்காக்கியது'னு.''

முடிச்சிட்ட புருவங்களின் கீழே விஜயனின் சோர்ந்த விழிகள் அவளை ஏறிட்டன.

''ராமனே அதுக்கு பயந்து சீதையை விலக்கத்தானே வேண்டியிருந்தது? இது சின்ன ஊர் சூர்யா. கையளவு உப்பை ஒரு டம்ளர் தண்ணியில கரைச்சுக் குடிக்க முடியாது. அதுவே குளத்துல கரைச்சா ருசி மாறாது. ஆக, நான் யார்.. என்னனு தெரியாத ஒரு இடத்துக்கு..''

''ஓடிப் போகப் போறீங்க? உங்களைக் கோழையா பார்க்க நான் விரும்பலை, விஜயன்.''

அழுந்த சொன்னவளைச் சற்று ஆச்சர்யமாகப் பார்த்தான்.

''எனக்குக் கொஞ்சம் நிம்மதி தேவை சூர்யா.. ஒதுங்கியிருந்தா அது கிடைக்கும்னு தோணுது'' - பெருமூச்சுடன் சொன்னான்.

''சரி.. போகலாம்.''

திகைத்த அவன் கண்கள் வேறு பக்கமாக விலகின.

''வேற வம்பே வேணாம்'' என்றான் முணுமுணுப்பாக.

''நீங்க ஊரை விட்டுப் போனாலும் பாதிப்புதான்.. எவ்வளவு நாள்தான் வம்பு பேசுவாங்க? எத்தனை வித விதமா யூகம் பண்ணுவாங்க? யோசிச்சு பேசி தீர்க்கட்டும். போகப் போக அலுத்து, பிறகு மறந்தே போகும். தவிர..''

முதுகு காட்டி நின்றவனின் தளர்ந்த தோள்கள் அவன் மனநிலையைத் தெளிவாக காட்டின.

''எதுவும் உங்க.. நம்ப.. குற்றமில்லையே! பிறகு ஏன் குறுகுறுக்கணும்?''

''நீ என்னை முழுசா நம்பறே இல்லியா.. சூர்யா?''

''மீனாவின் பெற்றோரே நம்பறாங்களே விஜய்.. நாயகிம்மா எவ்வளவு தெளிவா உங்களுக்காக பேசினாங்க.. 'மாப்பிள்ளையைப் பற்றி மீனுவே தப்பா சொன்னதில்லை. எம்பொண்ணை அவர் தங்கமாத்தான் பாத்துகிட்டார்.. அவளுக்குத்தான் அனுபவிக்க ஆயுசில்லை'னு. மீனா அப்பா முதல்ல பதறினாலும் பிறகு..''

''பிரேத பரிசோதனைக்குக் கேட்டது அவர்தான்.''

''சோதனையில கொலைக்கான எந்தத் தடயமும் இல்லைனு தெளிவாயிடுச்சே.. தொடர்ந்த வீரிய மாத்திரைகளால மீனாவின் உடம்பும் மனசும் மந்தப்பட்டிருந்ததா டாக்டர்ஸ் சொன்னாங்க.''

''பழி, மீனுவோட செருப்பின் மேலதான்..''

''அதுதான் உண்மையும் கூட. அது இல்லைன்னா.. பிசகி.. அதாவது அத்தனை சுலபமா விழுந்திருக்க மாட்டா.''

''இப்போ உங்க பிசினஸ் நல்லா நிமிர்ந்திடுச்சு விஜய். இந்த சமயத்துல..''

''நீயும் சந்திராவும் விக்ரமும் நல்லபடி நடத்திடுவீங்க.''

''நீங்க இல்லாம நாயகிம்மாவும், உங்க மாமாவும் எப்படி இங்க தங்குவாங்க விஜய்? 'இனி எங்களுக்கு யாரிருக்காம்மா? நானும் மீனு அப்பாவும் சித்திரப்பாவூர் பக்கமா வந்துடலாம்னு இருக்கோம். எங்களுக்கு மிஞ்சினது மாப்பிள்ளைதானே.. என்ன?'னு கெஞ்சுறவங்களுக்கு என்ன சொல்ல?''

''அவங்க இங்க வந்தா.. மாமன், மாமியார் துப்பறிய வந்ததா புதுப் பேச்சு கிளம்பும்.'' என்றான் சலிப்பாக.

''ஊர் வாய்க்கு இவ்வளவு பயப்படணுமா விஜய்? நீங்க தைரியமா, தெளிவா நின்னா, அவங்க கதைகளுக்கு கையும் காலும் முளைக்காது.''

ஏற்கெனவே கலைந்திருந்த கேசத்தை இருகைகளாலும் கோதிக்கொண்டவன் குரல் அலுத்தது..

''உனக்குப் புரியலை, சூர்யா.''

''சொல்லுங்க, புரிஞ்சுக்கறேன்.''

மௌனமாக விலகி நடந்தவனின் முன்னே மறிப்பாக நின்று கேட்டாள்..

''சந்திராகிட்ட பேசறீங்களா?''

''அவ தைரியமெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியலை. சரியா சாப்பிடாம.. என்னை விட நில குலைஞ்சு போயிட்டா'' என்றான் சற்று வருத்தமாக.

''சரி.. அப்போ எங்கிட்டயே சொல்லுங்க. ஊரை விட்டுக் கிளம்பும் யோசனை ஏன் வந்துச்சு உங்களுக்கு?''

''ஊரோட பேச்சு என்னைப் பாதிச்சதுதான்.. ஆனா அதையும் தாண்டி, எம்மேலயே எனக்கு நம்பிக்கையில்ல சூர்யா.. இப்போ புரியுதா?''

அவளது சலனமற்ற முகம் ஏதும் புரியவில்லை என்பதைச் சொல்ல..

''பழைய காதல் துரு பிடிக்காது'' என்றான் மிக மெள்ள!

- தொடரும்..