வ.ரங்கநாயகி

வாசகி சிறுகதை

'உர்ர்' ருனு ஒரு வீடு!

''அப்பப்பப்பா! என்ன வெயில்..'' என்றபடி வீட்டுக்குள் நுழைந்தான் சங்கர். சாக்ஸ் கழற்றி, கை, கால் கழுவி, ஆறு வயது மகனையும் சேர்த்துக் கொண்டு டி.வி முன் அமர்ந்தவன், ''கீதா.. இன்னுமா காபி போடல..?'' என்றான் அதிகாரமாக.

சமையலறையில் கீதா முணுமுணுத்தாள்..

''இவர் மட்டும்தான் டயர்டா வர்றாரா? நானும்தான் அரக்கப் பரக்க ஆபீஸ் போயிட்டு வர்றேன். இன்னும் முகம்கூட கழுவாம ரெண்டு அடுப்புலயும் பாலும் டிகாஷனுக்கு தண்ணியும் வச்சிருக்கேன். காலையில கழுவப் போட்ட பாத்திரமே மலையா கெடக்கு.. ஒரு வாரத் துணி வேற கெடக்கு.. இப்படி ஈவு, இரக்கம் இல்லாம அதட்டுறாரே.. என்ன மனுஷனோ!''

இரண்டு டம்ளர்களில் காபியும் மகனுக்கு ஒரு டம்ளரில் பூஸ்ட்டும் கொண்டு வந்து ஹாலில் வைத்தாள். அதை சுவைத்துக் கொண்டே, டி.வி-யில் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தான் சங்கர். பையன் அவனை ஏதோ நச்சரிக்க, ''அம்மாவைப் போய்க் கேளு..'' என்று விரட்டினான்.

அவசரமாக முகம் கழுவி இரவு சமையலுக்கு ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்த கீதாவுக்குப் பேய்க் கோபம் வந்தது. 'இவரால என்னதான் முடியுமோ..!' என்று உள்ளுக்குள் பொருமினாள். உலகத்தில் மிச்சமிருக்கும் ஒட்டுமொத்த ஆணாதிக்கமும் கணவன், பிள்ளை ரூபத்தில் வந்து தன்னை வதைப்பதாக உணர்ந்தாள்.

ஆனாலும், பெற்று வளர்த்த செல்லத்திடம் அதை அப்படியே காட்ட முடியுமா? அதனால் கொஞ்சமாகக் காட்டும் பொருட்டு, லேசாக எரிந்து விழுந்து டென்னிஸ் பந்து போல பிள்ளையை மறுபடி ஹாலுக்கே அனுப்பி வைத்தாள். அப்படியே சங்கருக்கும் ஜாடைமாடையான அர்ச்சனை கிடைத்தது. வழக்கம்போல அவன் டி.வி வால்யூமை நான்கு பாயின்ட் கூட்டி வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தான். ராத்திரி கீதா படுக்க வரும்போதே மணி பதினொன்று.. மகனை சமாதானப்படுத்துகிறேன் பேர்வழி என்று பேசிக் கொண்டே தூங்கிப் போனாள்.

மறுநாள் காலை..

''என் ஷர்ட்டை இஸ்திரி போடக் கொடுத்தேனே.. வந்துடுச்சா இல்லையா..? குழந்தை குளிச்சுட்டு நிக்கறான் பாரு, துண்டு கொடு'' - தாம்தூம் என்று ஆயிரம் ஆர்டர்கள் பறந்தன. இரண்டு அடுப்பிலும் மாறி மாறி ஏற்றி இறக்கி, பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் கீதா. காலில் சக்கரம் கட்டினால் தேவலாம்போல இருந்தது.

பிள்ளையின் ஸ்கூல் டிபன்பாக்ஸை ரெடி செய்து எடுத்துக் கொண்டு வேகமாக வந்தவள், கீழே தண்ணீர் கொட்டிக் கிடந்ததை கவனிக்காமல் காலை வைக்க, டைல்ஸ் தரையில் சர்ர்ரென வழுக்கி விழுந்தாள். டிபன்பாக்ஸ் ஒரு பக்கம் சிதற, ''அம்மா'' என்ற அவள் அலறலில் பதறிப் போனான் சங்கர். பையனை பக்கத்து வீட்டில் விட்டு விட்டு, காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்குப் பறந்தான்.

டாக்டர் எல்லா டெஸ்ட்களையும் எடுத்துவிட்டு, ''பயப்பட ஒண்ணுமில்ல.. வலது கையில லேசான உள்முறிவு. பத்து நாள் அசையாம ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்'' என்றார். சங்கர் அங்கிருந்தே அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு தனக்கு பத்து நாட்கள் விடுப்பு சொன்னான். பின்னே.. குழந்தையும் ஸ்கூலுக்குப் போய்விட்டால் பக்கத்தில் இருந்து கவனிக்க ஒற்றை ஆள் கிடையாதே!

பத்து நாளும் கீதாவின் கைக்கெட்டும் தூரத்திலேயே அமர்ந்திருந்தான் சங்கர். காலையில் மகனைக் குளிப்பாட்டுவது, சீருடை அணிவிப்பது, டிபன் செய்வது, மத்தியான உணவை டப்பாவில் அடைப்பது என்று அத்தனையும் அவனே பார்த்தான். கீதாவுக்கு வேளா வேளைக்கு உணவு, மாத்திரை, மருந்து கொடுத்து அன்பாகப் பராமரித்தான்.

இரவெல்லாம் கூடவே அமர்ந்து விழித்துக் கொண்டிருந்தவனைப் பார்க்க கீதாவுக்கு ரொம்பவே பாவமாக இருந்தது.

''நான் தூங்கத்தானே போறேன்.. நீங்களும் படுங்க'' என்றாள்.

''இல்ல.. அப்புறம் உனக்கு எதாவது வேணும்னா கூப்பிட மாட்டே!'' என்று சொல்லி விடாப்பிடியாக சேரில் அமர்ந்தபடியே தூங்கினான்.

'உடம்பு சரியில்லாமல் போனால்தான் இவன் அன்பு கிடைக்குமோ.. அல்லது, 'இவ உடம்பு சரியானாதான் சீக்கிரம் வேலை செய்ய ஆரம்பிப்பா' என நினைக்கிறானோ?.. சே.. என்ன ஒரு எண்ணம் நமக்கு.' - கீதாவுக்குள் பலவிதமான எண்ணங்கள் அலைமோதின.

வீடே மிக அமைதியாக, சோகமாகக் காட்சி அளித்தது. கணவர் முதல் வேலைக்காரி வரை, கீதாவை எந்த வேலையும் செய்ய விடாமல் தடுத்தனர். தான் கையாலாகாதவளாகவும், ஏதோ ஒதுக்கப்பட்டது போலவும் உணர்ந்தாள் கீதா.

'கடவுளே.. பத்தாவது நாள் என் கை பழையபடி சரியாகிடணும்' என்று முணுமுணுவென வேண்டிக் கொண்டாள். பத்தாவது நாள் கையைப் பரிசோதித்த டாக்டர் கடவுள் போலவே நல்வார்த்தை சொன்னார். ''நீங்க பூரணமா குணமாயிட்டீங்க.. இனி என்ன வேணும்னாலும் செய்யலாம்''

மறுநாள் காலை..

''நான் ஏதாவது செய்யணுமா? கை எப்படி இருக்கு?'' என்றான் சங்கர் பழைய குரலில்.

பதிலுக்கு கீதா கத்தினாள்.. ''பத்து நாளா நீங்க வேலை செஞ்ச லட்சணம்தான் தெரியுதே இங்க.. வீட்ட ஒதுங்க வைச்சி நான் சமையலை ஆரம்பிக்கவே அரை நாள் ஆயிடும் போல இருக்கு. போட்டது போட்டபடி கிடக்கு.''

கடுப்பானான் சங்கர்.

'என்னடா.. அவசரத்துக்கு புருஷன் இந்த அளவு சமாளிச்சு கவனிச்சானேனு இல்லாம, வாய்க்கு வந்தபடி பேசிக்கிட்டு.. அருமை தெரியாத ஜென்மம்!'' என முணுமுணுக்க, ''அப்ப இதுநாள் வரை நான் எவ்வளவு செஞ்சிருக்கேன். அந்த அருமையை நீங்க என்னிக்கு புரிஞ்சிக்கிட்டீங்க?'' என கீதா கர்ஜனையோடு அர்ச்சனையை ஆரம்பிக்க, வீடு பழையபடி கல்யாண கோலம் பூண்டது!