Published:Updated:

சோட்டா ஸ்டாரி

சோட்டா ஸ்டாரி

சோட்டா ஸ்டாரி

சோட்டா ஸ்டாரி

Published:Updated:

அரசன் கெட்டால், அரண்மனை குட்டிச்சுவர் !
சோட்டா ஸ்டாரி
சோட்டா ஸ்டாரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோட்டா ஸ்டாரி !

அந்த ராஜாவுக்கு மூடநம்பிக்கை அதிகம். ஒரு முறை அமைச்சர் ஒருவர், "கழுதை முகத்தில் விழித்தால் யோகம்" என்று சொல்ல, உடனே ஒரு கழுதையை அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னார் ராஜா. அதற்கு இன்னொரு அமைச்சரோ, "அரண்மனைக்கா... வேண்டாம் மன்னா. கழுதை இருக்கும் இடம் குட்டிச் சுவராகிவிடும்" என்று எச்சரிக்க, அதையும் நம்பிய மன்னர், வேறு ஒரு ஏற்பாடு செய்தார். அதாவது... ஒரு சலவைத் தொழிலாளி, தினமும் ராஜா விழிக்கும் நேரத்துக்கு தன்னுடைய கழுதையை அரண்மனைக்கு அழைத்து வருவது என்று முடிவானது.

சோட்டா ஸ்டாரி

அதன்படியே தினமும் அரண்மனைக்கு கழுதை அழைத்து வரப்பட்டது. ஆனால், திரும்பிச் செல்லும்போது அந்தச் சலவைத் தொழிலாளி நமட்டுச் சிரிப்போடு செல்வதைக் கவனித்த அரண்மனைக் காவலாளி, "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டான்.

அதற்கு, "கழுதை முகத்தில் விழித்தால் யோகம் கிடைக்கும் என்றால், பிறந்ததில் இருந்தே அதன் முகத்தில் விழிக்கும் எனக்கு குடிசை யோகத்தை தவிர வேறு எந்த யோகமும் கிடைக்கவில்லையே! அதேபோல, கழுதை இருக்கும் இடம் குட்டிச் சுவர் என்றால், என் வீடும் அப்படி ஆகியிருக்க வேண்டுமே! பொறுப்புகளை சரியாக கவனிக்காமல் இப்படி மூடநம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டிருந்தால் கழுதையெல்லாம் வராமலே அரண்மனையும் குட்டிச் சுவராகிவிடும். இதையெல்லாம் தினமும் நினைப்பேன்... சிரிப்பு வந்துவிடும்" என்று சொல்லிவிட்டு கழுதையோடு நடந்தான்.

மொத்தத்தையும் மறைந்திருந்து கவனித்த ராஜா.. தலை குனிந்தார்!

- ர.முனிஷ்ராதா, மி பி.எஸ்சி.,
வ.உ.சி. கல்லூரி, தூத்துக்குடி

சோட்டா ஸ்டாரி
 
சோட்டா ஸ்டாரி
சோட்டா ஸ்டாரி