Published:Updated:

பச்சைக் குதிரை ராஜா !

பச்சைக் குதிரை ராஜா !

 அந்த ராஜா தினமும் மாலை நேரத்துல அரண்மனை உப்பரிகையில் நின்னு காத்து வாங்குவாரு. அப்போ அரண்மனைக்குப் பின்னாடி இருக்கிற மைதானத்துல சின்னப் பசங்க விதவிதமா விளையாடுவாங்க. அதுல ராஜாவுக்கு ரொம்ப பிடிச்சது பச்சைக் குதிரை தாண்டுவது. ராஜாவுக்கும் பச்சைக் குதிரை தாண்ட ஆசையா இருக்கும்.

ராஜா சின்ன வயசுலயே குருகுலத்துல சேர்ந் துட்டார். அங்கே, காலையில இருந்து இரவு வரை வாள், வில் பயிற்சி, படிப்பு என ஒரே பரபரப்புதான். விளையாட நேரமே இருந்ததில்லை. அப்புறம், ராஜாவானதும் மக்கள் பிரச்னை, நாட்டைக் காக்கவே சரியா இருந்தது.

பச்சைக் குதிரை ராஜா !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

ராஜா மைதானத்துல இன்னொரு விஷயத்தையும் கவனிச்சார். பசங்க விளையாடும் போது, தினமும் ஒரு சீனிமிட்டாய்க்காரன்  வருவான். தலையில் தலைப்பாகை, பெரிய மீசை, நீளமான அங்கியைப் போட்டுக் கிட்டு இருப்பான். கையில அவன் உயரத்தில ஒரு கொம்பு. அதுல பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்கள் கலந்த சீனிமிட்டாய் சுத்தி இருக்கும். இனிப்பா... கொஞ்சம் பிசு பிசுப்பா... இழுத்தா ஜவ்வு மாதிரி வரும். அந்த சீனி மிட்டாயில் குட்டிக் கிரீடம், வாள், பறவை மாதிரி விதவிதமா செய்து கொடுப்பான். பசங்க அதை வெச்சுக் கொஞ்ச நேரம் விளையாடிட்டு, பிறகு சாப்பிடுவாங்க. இதைப் பார்த்த ராஜாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு.

ஒருநாள், சீனிமிட்டாய் வியாபாரி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு கிளம்பினார். கையில் கொம்பு. அதில், அரண்மனைச் சமையல்காரர் செய்த சீனிமிட்டாய். மைதானத்துக்கு வந்தார்.  பசங்க ஓடிவந்தாங்க. ''அட! நீங்க யாரு? புதுசா இருக்கீங்க?'' என்று கேட்டான் ஒரு பொடியன்.

''நான் மிட்டாய்க்காரடோட தம்பி. இன்னிக்கு உங்க எல்லோருக்கும் இலவசமா சீனிமிட்டாய் தரேன். பசங்களா... என்னையும் ஆட்டத்தில சேர்த்துக் கறீங்களா?'' என்றார். பசங்களும் சம்மதிச்சாங்க. முதல்ல ராஜா குனிஞ்சு நின்னார். பசங்க தாண்டினாங்க. அப்புறம், ஒரு பையன் குனிய, ராஜா ஓடிவந்து தாவினப்ப... அவரோட தலைப் பாகை கீழே விழுந்துடுச்சு. உடனே பசங்க ''ஆ! ராஜா... ராஜா!'' என்று கத்தினாங்க.

உடனே ராஜா, ''டேய்...டேய்... கத்தாதீங்க! ஜனங்க வந்து பார்த்தா... நாட்டுக்கே ராஜாவா இருந்துக்கிட்டு, விளையாட வந்துட்டாரேன்னு சிரிப்பாங்க. இந்த விஷயத்தை வெளியே சொல்லாதீங்க'' என்றார்.

பசங்க குசுகுசுன்னு என்னமோ பேசினாங்க. பிறகு, ஒருத்தன் ராஜாகிட்ட வந்து, ''சரி ராஜா, இந்த விஷயத்தை நாங்க யார்கிட்டேயும் சொல்லலை. ஆனா, ஒரு நிபந்தனை... எங்களுக்கு தினமும் இதே மாதிரி இலவசமா சீனிமிட்டாய் வேணும்!'' என்றான்.

வேற வழி! ராஜா சம்மதிச்சார். அந்த சீனி மிட்டாய்க்காரனை ரகசியமா கூப்பிட்டு பொற் காசுகள் கொடுத்தார். பச்சைக் குதிரை தாண்ட ஆசைப்பட்டு, இப்படி சின்னப் பசங்ககிட்ட மாட்டிக்கிட்டதை நினைச்சு வெட்கமா இருந் தாலும், சிறுவர்களுக்கு தன்னால தினமும் சீனிமிட்டாய் கிடைக்கறதை நினைச்சு ராஜாவுக்கு ரொம்ப சந்தோஷம்!

கே.யுவராஜன்