மழையாலணையும் பெயர்

அணிகையிலும் களைகையிலும்
வெவ்வேறழகு நீ.
மழை மாதிரி.

கொஞ்சிக்கொண்டே
இருக்க வேண்டும் என்கிறாய்.
தூறிக்கொண்டே இருக்கும் மழை.

அடை மழைக்கு
ஒளிவதுபோலத்தான்.
உன் கோபப் பொழிதல்களிலும்

சாத்தியமே இல்லை
என்று நினைக்கையிலெல்லாம்
உன் வருகைபோன்றே மழை.

உன் என் ஊடல்
எப்படி அறிந்திருக்கும் மழை.
உன் மேல்தான் சந்தேகம்.

எடுத்ததற்கெல்லாம் சந்தேகிப்பாய்.
பருவ கால மழையாய்.
ஊடல் கோடை மழை.

மழைகளில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
முதல் மழையில் தொலைந்த என்னை.

மழை நீர் சேகரிப்புத் தொட்டி
வீட்டுக்கு வெளியேயும்
மனசுக்குள்ளேயும்!

- ஆத்மார்த்தி

சித்திரப்பூச்சி

எட்டுக்கால் பூச்சியின் வலை
ஓவியம் போல இருக்கிறது
அதைக் கலைக்கும்
ஒட்டடைக் குச்சியோ
தூரிகை போல இருக்கிறது!

- கட்டளை ஜெயா

அவரவர் பிம்பங்கள்

உடைந்து போன நிலைக்கண்ணாடிக்காய்
வீடே அலறும்படி கத்துகிறோம்
நானும் அவளும்.
ஆனால்
ஒவ்வொரு துண்டாய் எடுத்து
ஒட்டவைக்கிறாள் மகள்
முகம் நிறையப் புன்னகை சுமந்து
துண்டுகளை அவள் நேர்த்தியாக்குகிறாள்
அவள் எப்போதும் எல்லாவற்றையும்
நட்போடுதான் பாவிக்கிறாள்
நாங்கள்தான் காசாகப் பார்க்கிறோம்!

- ஈஸ்வர சந்தான மூர்த்தி

பாம்பு குறித்த பயம்

மூன்றாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில்
பாம்புப் படம் இருந்த
பக்கத்தைக் கிழித்துவிட்டாள்
பெரியாயி

இரவுக்கு மேல் பாம்பைப் பற்றி
பேச வேண்டியிருக்கும்போது
பூச்சியென்றோ
பெயர் சொல்லாதது
என்றோ அழைக்கச் சொல்லி
தாத்தா சொல்லிக்கொடுத்தார்

ஓடுற பாம்பை மிதிக்கும் வயசு என
ஊக்கப்படுத்தும்போதே
புற்றின் திசைக்கு
அண்டவிட மாட்டார்
அப்பா

ஓர் இடத்தில்
நாகராஜனெனப் பாலூற்றியும்
இன்னோர் இடத்தில்
கம்பெடுத்துக் கொடுத்தும்
விநோத பக்தியிலிருந்தாள் அம்மா

எல்லாப் பழைய கதைகளையும்
கிளறிவிட்டபடிக்கு சுருண்டு படுத்திருக்கிறது
கீரியிடம் சண்டை போடக்
கூடையில் காத்திருக்கும்
பல் பிடுங்கிய பாம்பு!

- லதாமகன்

நேரமில்லை

ஃபேஸ்புக்கில் கிரிக்கெட்டர்களை
விமர்சித்தேன்
ஆர்குட்டில் அரசியல்
பேசினேன்
பிளாக்கில் திரையுலகைப்
பின்னியெடுத்தேன்
ஸாரி... அப்பா
உங்களிடம் அடுத்த வாரம்
பேசுகிறேன்!

- சந்திரா சிவபாலன்

மழையாலணையும் பெயர்

அணிகையிலும் களைகையிலும்
வெவ்வேறழகு நீ.
மழை மாதிரி.

கொஞ்சிக்கொண்டே
இருக்க வேண்டும் என்கிறாய்.
தூறிக்கொண்டே இருக்கும் மழை.

அடை மழைக்கு
ஒளிவதுபோலத்தான்.
உன் கோபப் பொழிதல்களிலும்

சாத்தியமே இல்லை
என்று நினைக்கையிலெல்லாம்
உன் வருகைபோன்றே மழை.

உன் என் ஊடல்
எப்படி அறிந்திருக்கும் மழை.
உன் மேல்தான் சந்தேகம்.

எடுத்ததற்கெல்லாம் சந்தேகிப்பாய்.
பருவ கால மழையாய்.
ஊடல் கோடை மழை.

மழைகளில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
முதல் மழையில் தொலைந்த என்னை.

மழை நீர் சேகரிப்புத் தொட்டி
வீட்டுக்கு வெளியேயும்
மனசுக்குள்ளேயும்!

- ஆத்மார்த்தி

சித்திரப்பூச்சி

எட்டுக்கால் பூச்சியின் வலை
ஓவியம் போல இருக்கிறது
அதைக் கலைக்கும்
ஒட்டடைக் குச்சியோ
தூரிகை போல இருக்கிறது!

- கட்டளை ஜெயா

அவரவர் பிம்பங்கள்

உடைந்து போன நிலைக்கண்ணாடிக்காய்
வீடே அலறும்படி கத்துகிறோம்
நானும் அவளும்.
ஆனால்
ஒவ்வொரு துண்டாய் எடுத்து
ஒட்டவைக்கிறாள் மகள்
முகம் நிறையப் புன்னகை சுமந்து
துண்டுகளை அவள் நேர்த்தியாக்குகிறாள்
அவள் எப்போதும் எல்லாவற்றையும்
நட்போடுதான் பாவிக்கிறாள்
நாங்கள்தான் காசாகப் பார்க்கிறோம்!

- ஈஸ்வர சந்தான மூர்த்தி

பாம்பு குறித்த பயம்

மூன்றாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில்
பாம்புப் படம் இருந்த
பக்கத்தைக் கிழித்துவிட்டாள்
பெரியாயி

இரவுக்கு மேல் பாம்பைப் பற்றி
பேச வேண்டியிருக்கும்போது
பூச்சியென்றோ
பெயர் சொல்லாதது
என்றோ அழைக்கச் சொல்லி
தாத்தா சொல்லிக்கொடுத்தார்

ஓடுற பாம்பை மிதிக்கும் வயசு என
ஊக்கப்படுத்தும்போதே
புற்றின் திசைக்கு
அண்டவிட மாட்டார்
அப்பா

ஓர் இடத்தில்
நாகராஜனெனப் பாலூற்றியும்
இன்னோர் இடத்தில்
கம்பெடுத்துக் கொடுத்தும்
விநோத பக்தியிலிருந்தாள் அம்மா

எல்லாப் பழைய கதைகளையும்
கிளறிவிட்டபடிக்கு சுருண்டு படுத்திருக்கிறது
கீரியிடம் சண்டை போடக்
கூடையில் காத்திருக்கும்
பல் பிடுங்கிய பாம்பு!

- லதாமகன்

நேரமில்லை

ஃபேஸ்புக்கில் கிரிக்கெட்டர்களை
விமர்சித்தேன்
ஆர்குட்டில் அரசியல்
பேசினேன்
பிளாக்கில் திரையுலகைப்
பின்னியெடுத்தேன்
ஸாரி... அப்பா
உங்களிடம் அடுத்த வாரம்
பேசுகிறேன்!

- சந்திரா சிவபாலன்