சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி!

வயலட் ஒரு பெரிய ராட்சச நாவல் பழ உருண்டையாய் உருமாறிவிட்டதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
"ச்சச்சோ..."என்று உச்சுக்கொட்டிய வோன்கா, "சே, எப்பவுமே இப்படித்தான் ஆகிடுது.என்னோட ஆராய்ச்சி அறையில் இருபது தடவை இருபது ஊம்பா-லூம்பாக்களை வச்சு பரிசோதனை பண்ணி பாத்திருக்கேன். ஆனா பாருங்க, இதோ இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் சொதப்பிடும். ஊம்பா- லூம்பாக்கள் எல்லாரும் நாவல் பழ உருண்டையா மாறிடுவான்கள். சே... சே...சே...ஒரே கடுப்பா இருக்கு. என்னத்தைச் செய்ய, ஒண்ணும் புரியலையே..?!''என்று வோன்கா அலுத்துக் கொண்டார்.

"நீங்க என்னத்தையோ செஞ்சுக்குங்க. ஆனால் எனக்கு ஒரு நாவல் பழ உருண்டையை பொண்ணா நினைக்க முடியுமா சொல்லுங்க. என் பொண்னை பழைய மாதிரி மாத்தி தந்துடுங்க. உடனே அதைச் செய்யுங்க"என்று கோபமாகச் சொன்னாள் திருமதி ப்யூரகார்ட்.

"க்ளிக், க்ளிக், க்ளிக்" என்று தன் விரல்களை சொடுக்கினார் வோன்கா. எங்கிருந்து வந்தார்கள் என்று நினைக்கும் முன் கண் இமைக்கும் நொடிக்குள் பத்து ஊம்பா- லூம்பாக்கள் அவர் அருகில் வந்து நின்றார்கள்.

"இந்த குட்டிப் பொண்ணு வயலட்டை உடனடியா பழரச அறைக்கு உருட்டிட்டு போங்கப்பா. ம்... ம் கிளம்புங்க, சீக்கரம்"என்று உத்தரவிட்டார் வோன்கா.

"என்னது பழரச அறையா? அங்க கூட்டிட்டுப் போய் என் செல்லத்தை என்ன செய்யப்போறீங்க..?"என்று அலறினாள் திருமதி ப்யூரகார்ட்.

"அவளை பிழிஞ்சி எடுக்கணும்.அதுவும் உடனடியா...அவ உடம்புக்குள்ள இருக்குற பழரசத்தை எல்லாம் ஒட்டப்பிழிஞ்சு எடுத்தாகணும்.அப்பறம்தான் எதுவும் சொல்ல முடியும். அவ சரியாகறதை பத்தியெல்லாம் பயப்படாதீங்க திருமதி ப்யூரகார்ட். என்னால ஆன கடைசி முயற்சி வரைக்கும் செஞ்சு அவளை சரிப் பண்ண பாக்கறேன். கவலைப்படாதீங்க. இதுக்காக நான் வருத்தப்படறேன்.மன்னிச்சுக்கங்க. இதுக்கு மேல என்ன சொல்லறதுன்னே தெரியலை"என தடுமாறினார் வோன்கா.

அவர் சொல்லி முடிக்கும் முன்பே பத்து ஊம்பா - லூம்பாக்களும் அந்த ராட்சச நாவல் பழ உருண்டையை ஆராய்ச்சி அறையின் வாசலை நோக்கி தரையில் உருட்டிச் சென்றார்கள்.அதற்கு அப்பால் தான் சாக்லேட் ஆறு இருக்கும் இடத்துக்குச் செல்லும் படகு காத்துக்கொண்டிருந்தது. திரு மற்றும் திருமதி ப்யூரகார்ட் ஓட்டமும் நடையுமாக அவர்களை பின் தொடர்ந்தனர். மற்ற அனைவரும், சார்லி மற்றும் ஜோ தாத்தா உள்பட அப்படியே ஆடாமல் அசையாமல் வாய் பிளந்து நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சார்லி, ஜோ தாத்தாவின் காதுக்கு அருகே போய் கிசுகிசுத்தான். "தாத்தா போட்ல கிளம்பியிருக்கற ஊம்பா-லூம்பாக்கள் பாட ஆரம்பிச்சுட்டாங்க. கேட்குதா உங்களுக்கு"என்றான்.

நூறு ஊம்பா-லூம்பாக்கள் சேர்ந்து பாடும் குரல் வெகு துல்லியமாக அந்த அறைக்குள் கேட்டது...

"தங்கங்களே, குட்டி குட்டி சிங்கங்களே
வாலு பொண்ணு வயலட் கண்ணு
சூயுங்கம்மை மென்னு மென்னு
அவ உடம்பே மாறிப்போச்சு பன்னு
(அவ பக்கத்துல போய் நின்னு பாருடா
சீ... சீ... ஒரே புளிச்ச பபுள்கம் வாடையடா)
ஊம்பா-லூம்பா நாங்க சொல்றதைக் கேளு
சூயிங்கம்மை சோறா சாப்பிடற ஆளு
எல்லாத்தையும் எல்லாரையும் இழந்திடுவான்
ஒரு நாள் தனியனா கீழே விழுந்திடுவான்!
ஊம்பா-லூம்பா நாங்க
ஒரு கதையைச் சொல்றோம் கேளுங்க...
பிகிலோன்னு ஒரு பொண்ணு
மொச்சைக் கொட்டை மாதிரி
இருக்கும் அவ கண்ணு
எது பிடிக்கும் தெரியுமா அவளுக்கு?
தின்னப் பிடிக்கும்... வாய்ல பயங்கர சுளுக்கு!
சூயிங்கம் - அது தான் அவள் விருப்பம்
சவச்சுக்கிட்டேதான் இருப்பாள் எப்பவும்!
அரவை நிலையம் தோத்துச்சு,
ரைஸ்மில் கூட தோத்துச்சு
ராப்பகலா ஓயாம ஒழியாம தின்னு தின்னே
வாய்ல ரத்தம் கூட சேர்ந்துக்கிச்சு
ஆனாலும் விடமாட்டா இந்த சிடுமூஞ்சி சூர்ப்பனகை
சூயிங்கம்மை பார்த்தா மட்டும்தான் புன்னகை
குளிக்கும்போது துவைக்கும் போதும்
பாடும் போது ஆடும் போதும்...
பஸ்ல போகிற போதும்
கோவிலுக்குள் இருக்கும் போதும்
எந்த நேரமும் எல்லா காலமும்
அதை தின்னுட்டேதான் இருப்பா...
வாய்ல போட்டு மென்னுக்கிட்டேதான்
நடப்பா,
நிற்பா,
ஓடுவா!
ஒரு நாள் சூயிங்கம் கடையில கிடைக்கல
இவளுக்கு கையும் ஓடலை காலும் ஓடலை
தாங்க முடியாத தீனி வெறி ஏறிடுச்சு
மண்டைக்குள்ள தெறிச்சு கிறுக்கு முத்திடுச்சு!
கண்ணுல படற எல்லாத்தையும் எடுத்து பிரிச்சு
திங்க ஆரம்பிச்சுட்டா இந்த குட்டி ராட்சசி!
ஜோடி ஜோடியா ஷ¨க்கள்
ஒரு கொத்துப் பூக்கள்
அந்த தபால்காரன் பாவம், மிகவும் சாது
பிச்சுத் தின்னேவிட்டாள் அவனின் ஒரு காது!
அப்பப்பா கண்றாவி... தாங்கவே முடியாது இவள் லூட்டி
அடுத்த வீட்டிலிருந்து எடுத்து தின்றாள் அரை டஜன் ஜட்டி!
அவள் நண்பன் வந்தான். அவளைப் பார்க்க
ஒரேடியாய் அவனை இவள் தாக்க
கூரான அவன் மூக்கு உடைந்தது.
இவள் வாய்க்குள் நேராய் சரண் அடைந்தது!
எத்தனை எத்தனை அட்டூழியங்கள்
அத்தனையும் மகா மெகா துஷ்டத்தனங்கள்!
அவள் வாய்க்குள் நுழையும் அருவி
கடித்துக் குதறிவிடும் அந்த கெட்ட குருவி!
ஒரு நாள் வச்சான் பாரு ஆப்பு
முழி பிதுங்கிக்கிச்சு இந்த பாப்பு!
தின்னு தின்னே அவ வாய் நீளம்
வயலின் சைசில் ஆகிப்போனது சோகம்!
அந்த லூசுக்கு இதைப்பத்தி என்ன கவலை?
கிடைச்சா தின்னுடுவா எல்லாத்தையும் தவளை!
வாய்(கை)விடாம சிதறாம பதறாமா
வருஷக் கணக்கா ரூட் மாறாமா
அமுக்கிக்கிட்டேதான் இருந்துச்சு...-
சூயிங்கம்மை விடாமலேயே சவைச்சு!
எல்லா கதைக்கும் முடிவு உண்டு
பிகிலோ கிடைச்ச தண்டனை ரெண்டு!
வெயில் நாள் அன்று நடந்த ஒரு விஷயம்
எல்லோருக்கும் அது ரொம்ப விசேஷம்
ஏன்னா பிகிலோவுக்கு ஆச்சு தோஷம்
அன்னிக்கோட செத்தது அவள் ரோஷம்
நடு ராத்திரி பன்னெண்டு மணி
பிடிச்சது பார் அவளுக்கு சனி
அப்படியும் இப்படியும் உருண்டா
புரண்டா மறுபடியும் உருண்டா
புக்கை எடுத்தா... தீனி வேட்டை'ங்க்ற கதை
படிச்சா பிடிக்கலை. விட்டாள் ஒரு உதை
'ஹாவ்'வுனு... விட்டா ஒரு கொட்டாவி
அவளை சுத்தி வந்தது ஒரு கெட்ட ஆவி!
வாய்ல கிடந்த சூயிங்கம் விழுந்துது நழுவி
உடனே எடுத்து தின்னா கழுவி
முதலை போன்ற அவள் நாக்கு
போட்டு போட்டுத் தாக்கு!
ஒரு வழியாய் தூங்கினா மகராசி
அசிங்கமா போச்சு அவ முகராசி!
அவ தூங்கி தொலைச்சாலும்
உடம்பெல்லாம் களைச்சாலும்
விடாம ஒரு சத்தம் கேட்டுச்சு
அதுதான் சவைக்கற வாயின் தட்டச்சு
'சவுக் சவுக் சவுக், அவுக் அவுக் அவுக்
அவுக் அவுக் அவுக், சவுக் சவுக் சவுக்
சவுக் அவுக் அவுக் சவுக் வவ்வ்வ்வ்வ்வ்வ்
ட்ரேயில் கிடந்த அவள் பல்செட்டு
ஆட ஆரம்பிச்சுடுச்சு மெல்ற சத்தம் கேட்டு
அய்யோ பரிதாபம்
கேட்டுச்சு பெரும் ஓலம்
ரெண்டு துண்டா பிச்சுக்கிச்சு
பிகிலோவின் பெரிய நாக்கு!
அன்னிலேர்ந்து ஓரமா ஒதுங்கி
எங்கேயோ பதுங்கி
சோகம் தாங்காம ஓடிட்டா
தன் முடிவைத் தானே தேடிக்கிட்டா!
இப்ப புரியுதா குட்டீஸ்
எங்க ப்ரியமான சுட்டீஸ்
சின்னப் பொண்ணு வயலட் குட்டி
அவளும் தான் அடிச்சா சில லூட்டி
இப்ப நாங்க அவளை காப்பாத்திடுவோம்
நல்ல பொண்ணா அவளை மாத்திடுவோம்
இனி அவ சீக்கிரம் சரியாகிடுவா
தன்னோட கிறுக்குத்தனத்தையெல்லாம் மறந்திடுவா!

(தித்திப்பு தொடரும்...)