கரடி சொன்ன சேதி!

தாத்தா கரடி வெளியில் எங்குமே செல்வது இல்லை. வயதாகிவிட்டதால் அதற்கு எப்போதுமே ஓய்வுதான்! பெற்றோர் கரடிகள் எல்லாம் வெளியில் உணவு தேடிச் சென்றுவிடும். குட்டி கரடிகள் மட்டும் குகைக்குள்ளே அங்குமிங்கும் விளையாடிக் கொண்டும் சிலசமயம் தாத்தா கரடியிடம் ஏதாவது கதை சொல்லச்சொல்லி கேட்டுக் கொண்டும் இருக்கும். அன்றும் அப்படித்தான் தாத்தா கரடி குட்டிக் கரடிகளுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது.
"மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும்தானே?'' என்றது தாத்தா கரடி.

"ஓ! நல்லாத் தெரியுமே. அவங்க எல்லாருமே குரங்குல இருந்து வந்தவங்கதானே..?!'' என்றது ஒரு குட்டி கரடி.

"சரியாகச் சொன்னே. சரி, கதையைச் சொல்றேன் கேளுங்க. ஒரு ஊரில் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு ஒரு நண்பனும் இருந்தான். இருவருமே நெடுங்காலமாக நண்பர்களாக இருப்பவர்கள். ஒருநாள் இவர்கள் இருவரும் நம் காட்டு வழியாக நடந்து சென்றார்கள். அப்போது நம் முன்னோர் கரடியார் ஒருவர் அவர்களை பார்த்துவிட்டார். அவர்களை நோக்கி நம் கரடியார் வேகமாக ஓடினார். இதை பார்த்த அவர்கள் இருவரும், 'நம்மைத்தான் தாக்க வருகிறதோ..?!' என்று பயத்தில் உறைந்தே போயினர்...'' என்று தாத்தா கரடி சொல்லச் சொல்ல குட்டி கரடிகள் இரண்டும் தங்களை மெய்மறந்து கதையை கேட்டுக் கொண்டு இருந்தன.

"...நாம்தான் மனிதர்களைச் சாப்பிடுவது இல்லையே! பொதுவாக காய், கனிகள், வேர்கள் போன்றவற்றைத்தான் அதிகமாக நாம் சாப்பிடுவோம். எப்போதாவது மட்டுமே மீன் சாப்பிடுவோம். அதுவும் வேறு எந்த உணவும் கிடைக்கவில்லையென்றால்! இது தெரியாத அந்த மனிதர்கள் பயங்கரமாக பயந்து விட்டனர்.

அப்போது தன் நண்பனை பற்றி கவலைப்படாமல், ஒரு மனிதன் அருகிலிருந்த மரத்தில் ஏறி உயரமான கிளையில் சென்று உட்கார்ந்து கொண்டான். மற்றொரு மனிதனோ, செத்துக் கிடப்பது போல் அப்படியே உடல் அசைவுகள் இன்றி தரையில் படுத்துக் கொண்டான். வேகமாகச் சென்ற நம் கரடியார், தரையில் படுத்திருந்த மனிதனின் காதில் ஒரு செய்தியை சொல்லிவிட்டு அருகிலிருந்த புதருக்குள் சென்று மறைந்தது. கரடி சொன்ன செய்தியைக் கேட்டு அந்த மனிதன் அதிர்ச்சியடைந்தவனாக காணப்பட்டான்.

இதை பார்த்து மரத்தில் இருந்தவன், கீழே இறங்கி வந்து தன் நண்பனிடம் விசாரித்தான்.

"கரடி, ஏதோ உன் காதில் சொல்லுச்சே. என்ன சொல்லுச்சு?'' என்றான்.

"ம்... நீ உண்மையான நண்பன் அல்ல. நீ என்னுடன் வைத்திருக்கும் நட்பு, உண்மையான நட்பு அல்ல. வெறும் நடிப்பு என்று சொன்னது'' என சொல்லிவிட்டு விருட்டென நடக்கத் தொடங்கினான். அவன் போகும் திசையையே இன்னொருவன் பார்த்துக் கொண்டிருந்தான்'' என்று தாத்தா கரடி கதை சொல்லி முடித்தது.

தொடர்ந்து பேசிய கரடி, "ஆபத்தான நேரத்தில் தன் நண்பனை பற்றி கவலைப்படாமல் தான் மட்டும் தப்பி பிழைத்தால் போதும் என நினைத்த மனிதன் உண்மையான நண்பன் அல்ல. பெரும்பாலான மனிதர்கள் இவனைப்போல்தான் உள்ளனர். சாதி, மதம், இனம் என்று பல வேறுபாடுகளால் ஒற்றுமை இல்லாமல் மனிதர்கள் விரோதத்துடன் வாழ்கிறார்கள்.

'உண்மையான நட்பு எது?' என்று நம் கரடியார் அன்று உணர்த்தியதை இன்னமும் மனிதர்கள் மறக்காமல் இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு டெடி கரடி பொம்மையை விளையாட வாங்கித்தருகிறார்கள். நல்ல சூழ்நிலைகளில் நட்பின் உண்மை தெரியாது. சோதனை வரும் போதோ, உண்மையான நட்பு கைவிடாது என்பதை எப்போதும் ஞாபகப்படுத்திக் கொள்ளவே நமது உருவத்தை டெடி கரடியாக்கி மனிதர்கள் தினமும் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று மேலே சொன்ன கதைக்கான அர்த்தத்தையும் சொன்னது தாத்தா கரடி.

கதையை கேட்ட உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தன இரு குட்டிக் கரடிகளும்!