நோபல் பரிசு பெற்ற கதை!

கொடுமையை எதிர்த்து நில்!

தென்னாப்பிரிக்காவில் எங்கும் ஒரே கலவரம். சாலைகளில் நடமாடுவதற்கே மக்கள் பயந்தனர். நிறவெறி தலைவிரித்தாடிய காலகட்டம்

அது. கறுப்பு நிறத்தவர்களை வெள்ளையர்கள் விலங்குகளைவிட கேவலமாக நடத்தினார்கள். கறுப்பர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளுக்குள் யாரும் போகக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அன்று இளம் பெண்ணான 'ஜாய்ஸ்' அந்த முடிவை எடுப்பாள் என்று யாரும் நினைக்கவே இல்லை. அவள் ஒரு வெள்ளைக்காரி. இருந்தாலும், கறுப்பர்களின் குடியிருப்புக்குள் தடையை மீறி நுழைந்து தனது எதிர்ப்பை தெரிவிக்க அவள் தயாராகிவிட்டாள்.

உடனே தனது சக தோழியான ஜெஸிகாவிடம் தனது விருப்பத்தையும் சொல்லிவிட்டாள். ஜெஸிகாவின் தலைமையில்தான் நிறவெறிக்கு எதிரான அந்த போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் போராட்டத்தில் ஜாய்ஸ் கலந்துகொள்வதற்கு ஜெஸிகா உடனடியாக சம்மதித்து விடவில்லை.

"சங்கத்தில் உறுப்பினரானால்தான் போராட்டத்தில் சேர்ப்போம்" என்று சொன்னாள் ஜெஸிகா. ஜாய்ஸ் அடுத்த நிமிடமே சங்கத்தின் உறுப்பினரானாள்.

"உன் எதிர்ப்பைக் காட்ட சங்கத்தில் சேர்வது மட்டும் போதாது.." என்றாள் ஜெஸிகா. ஆனால் ஜாய்ஸோ, "நானும் கண்டிப்பாக போராட்டத்தில் கலந்துகொள்வேன்" என்று உறுதியாகச் சொன்னாள்.

போராட்டத்திற்காக குறிக்கப்பட்ட நாள் நெருங்கிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளாய் குறைந்து, அந்த நாளும் வந்தது.

ஏதோ ஒரு தீவிரமான மனநிலையில் ஜாய்ஸ் போராட்டத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்து விட்டாள். இருந்தாலும், அந்த முடிவு சரியா..? தவறா..? என இப்போது அவளுக்கு குழப்பம்.அதே குழப்பத்தோடு போராட்டம் நடத்தப்படும் இடத்திற்கும் சென்றுவிட்டாள்.

அங்கு கறுப்பர்கள் மட்டுமின்றி, அவர்களின் போராட்டத்தை ஆதரிக்கும் வெள்ளையர்களும் இருந்தார்கள். எல்லா இடங்களிலும் நல்லவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அந்த நல்லவர்களில் ஒருவராக 'ஜாய்ஸ்' நின்று கொண்டிருந்தாள்.

போராட்டக்காரர்கள் ஒருவரையருவர் கேலி செய்தபடி மகிழ்ச்சியாக இருந்தனர். ஜாய்ஸ் இதற்கு முன் எந்த போராட்டத்திலும் கலந்துகொண்டதில்லை. எனவே அவளின் அடிமனதில் ஒரு மெல்லிய பதற்றம் உருவாகி அது கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்க ஆரம்பித்தது. போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக காவலர்கள் கைது செய்யும் முன்னரே மயங்கி விழுந்துவிடுவோமோ..?! என்ற அளவுக்கு அவள் பயந்து கொண்டிருந்தாள்.

'வந்த வழியாகவே திரும்பி வீட்டுக்கு ஓடி விடலாமா...' என்றெல்லாம்கூட அவளுக்கு புத்தி வேலைசெய்தது. ஆனால் மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள்? 'பயந்தாங்கொள்ளி' என்று கேலி பேசுவார்களே! வந்தது வந்துவிட்டோம். 'இனி வீடு திரும்புவது சரியில்லை' என்று மனதிற்கு சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

போராட்டத்துக்கு அனைவரும் தயாராயினர். அவர்களை படம் எடுப்பதற்காக பத்திரிகையாளர்களும் கூடிவிட்டனர்.

தடையை மீறி போராட்டக்காரர்கள் கறுப்பர் களின் குடியிருப்புக்குள் நுழைந்தனர். ஜாய்ஸ¨ம் அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள். அங்கிருந்த கறுப்பர்களின் வீடுகளை பார்த்த ஜாய்ஸ், மிகவும் வருத்தப்பட்டாள். சின்னச்சின்னதாய் நிறைய குடிசைகள், மின்சாரம், சுகாதாரம் என்று அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. அந்த குடிசைக்குள் எப்படி அவர்களால் வாழ முடிகிறது என்று நினைத்தாலே மனதிற்கு சங்கடமாக இருந்தது அவளுக்கு!

ஜாய்ஸின் மனது கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. எனது போராட்டம் நியாய மானது. நான் உணர்ச்சி வசப்பட்டு எந்த தவறையும் செய்துவிடவில்லை என்று நம்ப ஆரம்பித்தாள். கறுப்பின குழந்தைகள் மகிழ்ச்சியோடு ஓடி வந்து அந்த போராட்டக்குழுவை வேடிக்கை பார்த்தார்கள். சற்று தூரம்தான் நடந்திருப்பார்கள். அங்கு காவலர்கள் தங்கள் வாகனங்களில் காத்து கொண்டிருந்தனர்.

அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களின் பெயர்களை காவலர்கள் கேட்டனர். ஒவ்வொருவராக தன் பெயரை பதிவு செய்து கொண்டனர்.

ஜாய்ஸ் தனக்கு அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கறுப்பர்களை பார்த்தாள். ஆடை கிழிந்து அலங்கோலமாக நின்று கொண்டிருந்த அவர்களை பார்த்ததும் அவளுக்குள் வீரம் விளைந்தது. இப்போது அவளுக்கு அச்சமோ, வருத்தமோ துளியும் இல்லை. அழுத்தம் திருத்தமாக தன் பெயரை காவலரிடம் சொன்னாள்...

"எனது பெயர் ஜாய்ஸ்" என்று!

சட்டமறுப்பு (Civil Disobedience) என்ற இந்த கதையை நடைன் கார்டிமர் என்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் எழுதினார். இக்கதைக்கு 1991-ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது.