பீட்ஸா ஃப்ரண்ட்ஸ்!

ஒரு மரத்தடி மெஸ்ஸ§லே பாட்டி பீட்ஸா சுட்டுகிட்டு இருந்தாங்க. அப்போ டிஷ் ஆன்டனா மேலே உட்கார்ந்திருந்த ஒரு காக்கா, பாட்டி அசந்த நேரமா பார்த்து ஒரு பீட்ஸாவ அபேஸ் பண்ணிட்டு பறந்துருச்சு. அது ஒரு காம்பவுண்ட் சுவர் மேல உட்கார்ந்து பீட்ஸாவை ரசிச்சு சாப்பிட ஆரம்பிச்சுச்சு. தூரத்துல இருந்து அதை ஒரு நாய் பார்த்துச்சு. 'பாட்டி வடை சுட்ட' பழைய கதை அந்த நாய்க்கு ஏற்கனவே தெரியும். ஒரு சுட்டிப் பாப்பா படிச்சுட்டு இருந்ததை கேட்டது நினைவிலே இருந்துச்சு. 'சரி, நாம நரி அளவுக்கு தந்திரக்காரன் இல்லைன்னாலும் 'ட்ரை' பண்ணி பார்ப்போமேன்னு காக்காகிட்ட போய்... "காக்கா காக்கா நீ அழகா இருக்கே, உன் குரலும் அழகாதான் இருக்கும். எனக்காக ஒரு பாட்டு பாடேன்"னு நரி கேட்ட மாதிரியே கேட்டுச்சு.

அதுக்கு காக்கா சொல்லுச்சு, "இதெல்லாம் ஓல்டு ஸ்டைல் கண்ணு! நீ ஏதாவது புதுசா சொல்லு".

நாயோ, 'சரி! பாட்டி கதை சரிபடலை, வேற மாதிரி ட்ரை பண்ணுவோம்னு நெனச்சுது. "பீட்ஸா எல்லாம் 'ஜங்க் ஃபுட்'... அதைச் சாப்பிட்டா உடம்புக்குதான் கேடு!"ன்னு சொல்லிச்சு.

காக்கா இதுக்கும் அசரலை. "அளவுக்கு மிஞ்சினாதான் அமிர்தமும் நஞ்சு. எப்போதாவது ஒருமுறை சாப்பிடலாம்"னு சொல்லிச்சு.

நாயும் விடலை. "சீச்சீ... உனக்கு நாட்டுப்பற்றே இல்லே. பீட்ஸா இத்தாலி நாட்டு உணவு. நான் எப்பவும் நம்ம நாட்டு உணவைத்தான் சாப்பிடுவேன். நீ உண்மையான இந்தியக் காக்காவா இருந்தா அதை தூக்கிப்போடு"ன்னு சொல்லிச்சு.

அதுக்கு காக்கா, "நீ சொல்ற நாட்டுப்பற்று மனசுலே இருந்தா போதும். இப்ப என்ன உனக்கு, பீட்ஸா வேணும். அவ்வளவுதானே? நேரடியாவே கேளு தர்றேன்!"னு சொல்லி... 'இந்தா பாதி பீட்ஸா... சாப்பிடு!"ன்னு கொடுத்தது. நாய்க்கு வெட்கமாய்டுச்சு. "ஸாரி, இனிமே நாம ஃப்ரெண்ட்ஸா இருப்போம்"னு சொல்லிச்சு. காக்காயும் ஓகே சொல்லிடுச்சு.