நேர்மைக்கு கிடைத்த பரிசு!

பெரிய மாந்தோப்புக்குச் சொந்தக்காரர் ராமண்ணா. ஒரு நாள்...

எங்கெல்லாமோ வேலை தேடி அலைந்தும், கிடைக்காத மாதவன் என்ற ஏழை இளைஞன், அவரிடம் வந்தான்.

"உனக்கு என்ன வேலை தெரியும்?" என்று கேட்டார் ராமண்ணா.

"ஐயா! எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். தயவு செய்து வேலை இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். மிக ஏழைக் குடும்பம் என்னுடையது." என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான் மாதவன்.

சிறிது யோசித்த ராமண்ணா, "எனக்குச் சொந்த மாக ஒரு மாந்தோப்பு உள்ளது. அதைப் பொறுப் பாகப் பார்த்துக் கொள்வாயா?" என்று கேட்டார்.

"பார்த்துக் கொள்வேன் ஐயா!" என்றான் மாதவன்.

நாட்கள் சென்றன.

ஒருநாள் ராமண்ணா சில நண்பர்களுடன் மாந்தோப்புக்கு வந்தார். அவர் மாதவனைப் பார்த்து, "மாதவா! இவர்கள் என் நண்பர்கள்... நாங்கள் அனைவரும் சாப்பிடுவதற்கு நல்ல மாம்பழங்களைப் பறித்து வா!" என்றார்.

மாதவன் ஓடிச்சென்று ஏழெட்டு மாம்பழங் களைப் பறித்து வந்து அவர்கள் முன்னே வைத்தான்.

ராமண்ணா அந்தப் பழங்களை எடுத்து ஆளுக்கு ஒன்றாக நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக் கடித்தார்.

அடுத்த நொடி "அப்பா!" என்று வாயைப் பிடித்துக் கொண்டார்.

"என்ன, பழம் இத்தனை புளிப்பாக இருக்கிறது. வாயில் வைக்க முடியவில்லையே... உங்கள் பழங்கள் எல்லாம் எப்படி?" என்று கேட்டார்.

"எல்லாப் பழங்களும் புளிப்புதான்!" என்றார்கள் நண்பர்கள்.

ராமண்ணாவுக்கு மாதவன் மேல் கோபம் வந்தது.

"மாதவன்! மாதவன்!" என்று கத்த... அவன் ஓடி வந்தான்.

"விருந்தினர்களைக் கவனிக்கும் லட்சணமா இது? எல்லாப் பழங்களும் ஒரே புளிப்பு. வாயில் வைக்க முடியவில்லை. சுவையான, இனிக்கின்ற பழங்கள் எந்த மரத்தில் இருக்கும் என்பதுகூட தெரியாமல், இந்த ஆறு மாதமாக இங்கு என்ன செய்துக் கொண்டிருந்தாய்?" என்று தொண்டை நரம்பு புடைக்க கத்தினார் ராமண்ணா.

மாதவன் அமைதியாக, "ஐயா மன்னிக்கவும். தாங்கள் எனக்கு கொடுத்தது தோட்டத்தைக் காவல் காக்கும் வேலைதான். இங்கு எந்த மரத்துப் பழங்கள் புளிக்கும், இனிக்கும் என்று சாப்பிட்டுத் தெரிந்துகொள்ளும் உரிமையைத் தாங்கள் எனக்கு கொடுக்கவில்லையே!" என்றான்.

அதைக் கேட்டு ராமண்ணா உணர்ச்சி மிகுதியால் அவனை அப்படியே கட்டித் தழுவினார்.

"ஒரு நேர்மையான மனிதன் உன்னைப் போலத்தான் இருக்க வேண்டும்." என்று அனைவர் முன்னிலையிலும் மாதவனைப் பாராட்டி, தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அவனுக்குப் பரிசாக அளித்தார்.