சமுத்திரத்துக்கு யார் டாக்டர்?

நவீன பஞ்சதந்திரக் கதை-37

இரா.நடராசன்

மீன் அம்மாக்கள் கதையே சொல்வது கிடையாது என்று நாம் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது உண்மையல்ல. கதை சொல்லும் பழக்கமே நமக்கு மீன் காலத்திலிருந்து வந்ததுதான். செதில்களின் அசைவாலும், வாலின் படபடப்பாலும், கண்களின் அசைவாலும் அவைகள் தங்களது குட்டிகளுக்கு கதை சொல்வது நமக்குப் புரியாது. அவ்வளவுதான்.

அந்த வீட்டின் பிரதான அறையின் மையத்தில் அந்த மீன் தொட்டி இருந்தது. அந்த வீட்டுக்கு ஊரிலிருந்து வந்த ஒருவர், "அட... ஆடுமாடு... நாய் இருந்தால் ஏதாவது பயன் இருக்கும். இந்த மீன்களால் நமக்கு என்ன பயன்?" என்று சொல்வதைக் கேட்ட மீன் குஞ்சுகளுக்கு வருத்தமாகிவிட்டது. எல்லாம் ஒரே அழுகை. அவைகளை சமாதானப்படுத்த அம்மா மீன் தன் குஞ்சுகளுக்கு கதை சொல்ல ஆரம்பித்தது. ரொம்ப சுவாரசியமான கதை.

"என் செல்லங்களா... நம்முடைய மீன் இனத்தை அவ்வளவு குறைவாக மதிப்பிடுவது சரியல்ல. இந்தக் கதையைக் கேட்டால் பிறகு அப்படி சொல்ல மாட்டார்கள். முன்னொரு காலத்தில் மிகப் பெரிய சமுத்திரத்தில் பல பிரமாண்ட மீன்கள் இருந்தன. சுறா, திமிங்கலம், வஞ்சிரம் முதல் மின்சார மீன் வரை பல மீன்கள் வசித்தன. அதே சமுத்திரத்தில் பெரிய பெரிய ஆமைகள் இருந்தன. பாம்புகள், கடல் குதிரைகள், எட்டுக்கால் கொண்ட ஆக்டோபஸ், அப்புறம் அழகாகப் பளபளத்த நட்சத்திர மீன்கள், இவைகளுடன் கோடிக்கணக்கில் கொட்டிக்கிடந்த சிறுசிறு வகை மீன்கள்... என ஏராளமான உயிரினங்கள் இருந்தன.

ஒருநாள், அந்த சமுத்திரத்தின் டாக்டர் யார் என்பதில் அவைகளுக்குள் பெரிய போட்டி ஏற்பட்டது. சமுத்திரத்தில் யாருக்காவது காய்ச்சல் அடித்தாலோ, காயம் பட்டாலோ இன்னும் எலும்பு முறிவு, அப்பன்டிசைட்டிஸ் அது இது என்று வாயில் பெயர் நுழையாத பல வியாதிகளை என்ன செய்வது என்பதில் அவைகளுக்கு ஏற்பட்ட பயமே காரணமாக இருந்தது. சமுத்திரத்துக்கு என்று ஒரு டாக்டர் இருந்தால் நோய்களிலிருந்து தப்ப முடியும் என அவைகள் நினைத்தன.

முதலில் சுறா மீன் முன் வந்தது... "எனக்கு முதுகில் ஒரு கத்தி இருப்பதால் அதை வைத்து ஆபரேஷன் கூட செய்ய முடியும், ஆகவே, நான் டாக்டராக இருக்க தகுதியானவன்" என்றது. ஆக்டோபஸ், "என்னை விடவா நீ ஆபரேஷன் செய்துவிட முடியும்? எனக்குதான் எட்டுக் கைகள் உள்ளன" என்றது. உடனே ஆமைகள், "இதோ பாருங்கள்... எலும்பு முறிவு முதல் காய்ச்சல் வரை எங்களுக்கு எதுவுமே வருவது கிடையாது. நாங்கள் ஓட்டுக்குள் பத்திரமாக இருக்கிறோம். நாங்கள் டாக்டர் ஆவதே பொருத்தமானது" என்றன.

"டேய்..." என்று ஒரு பெரிய நீலத்திமிங்கிலம் பாய்ந்ததும் எல்லாரும் பயந்து போனார்கள். உடனே ஒரு வயதான ஆமை பேசத் தொடங்கியது, "நமக்குள் சண்டை வேண்டாம். இப்போது மாலை நேரம். நாளைக் காலையில் நாம் மீண்டும் இங்கே கூடுவோம். நான் ஓரிரு கேள்விகள் கேட்பேன். என் மேல் நம்பிக்கை இருந்தால் சொல்லுங்கள்" என்றது. "சரி, நாளைக் காலை வருகிறோம். ஏதாவது வம்பு பண்ணினே... அவ்வளவுதான்!" என்று தாத்தா ஆமையை மிரட்டி விட்டு அனைவரும் பிரிந்தார்கள்.

அன்று இரவு பெரிய கடல் கொந்தளிப்பு வந்தது. புயல் சீற்றத்துடன் வீசியது. பயங்கரமான கடல் சீற்றம். மீன்கள் எல்லாம் பயந்துபோய் ஆழ்கடலுக்குள் ஓடிவிட்டன. விடிந்து வெகுநேரம் கழித்து அவை எல்லாம் மெதுவாக மேலே தலை நீட்டின. கடல் அமைதியாக இருக்க, மீட்டிங்கில் கலந்துகொள்ள புறப்பட்டன. ஏழெட்டு ஆமைகள் மட்டும் மீட்டிங்கிற்கு கொஞ்சம் காலதாமதமாக வந்து சேர்ந்தன. அவற்றுக்கு ஒரே இருமல். புயல் ஒத்துக்கவில்லை. "பெரிசு... சீக்கிரம் கேள்வியைக் கேளு" என்று ஆக்டோபஸ் அதட்டியது.

"ஒரே ஒரு கேள்விதான் கேட்கப்போறேன்" என்று ஆமை தாத்தா மேல்மூச்சு வாங்கியபடி பேசியது. "நேற்று இரவு புயல் தாக்கியபோது எங்கே இருந்தீர்கள். என்ன செய்தீர்கள்?" என்று கேள்வியைக் கேட்டது.

"இது ஒரு கேள்வியா... புயல் தாக்கி, கடல் கொந்தளிப்பு இருந்தா எங்கே இருப்பாங்களாம்... கடல் அடியில்தான்" கிட்டதட்ட எல்லாமே கோரஸாக கத்தின.

"அப்படி செய்யாமல் வேறு வேலைகளில் ஈடுபட்டவர் யாராவது உண்டா?" ஆமை தாத்தா கேட்டது.

"நான்... நான் அப்படி கடலடியில் ஓடிப் போகவில்லை... சாரி" என்று ஒரு குரல் வந்தது. எல்லாரும் அந்த திக்கை நோக்கினார்கள். அங்கே ஒரு டால்ஃபின் இருந்தது. "நிறைய மனிதர்கள் மீன்பிடிக்க வந்தார்கள். அதில் சில சிறுவர்களும் கூட இருந்தார்கள். பாவம் புயலில் சிக்கி படகு சாய்ந்துவிட்டது. தண்ணீரில் தத்தளித்த அவர்களை நான் முட்டி மோதி கரையில் சேர்த்தேன். பார்க்க பாவமாக இருந்ததால் அப்படி செய்தேன். அவர்கள் கரையைச் சேர்ந்தவர்கள். நம்மை நம்பி இருப்பவர்கள்."

"சபாஷ்... டால்ஃபின்" என்று ஆமை தாத்தா கூறியது. "எல்லாரையும் போல் டால்ஃபின் ஓடி ஒளியவில்லை. அது மற்றவர்கள் மீது அக்கறை காட்டியது. பொது சிந்தனை கொண்டது. ஆபத்துக்கு உதவ ஓடியுள்ளது. அந்த சிந்தனை இருந்ததால்தான் டாக்டர் ஆக முடியும். எனவே டால்ஃபின்தான் சமுத்திரத்துக்கு டாக்டர்" என்று அறிவித்தது.மற்ற கடல்வாழ் உயிரினங்கள் டால்ஃபினுக்கு தொங்கிய முகத்துடன் கை கொடுத்தன.

கதையை முடித்த அம்மா மீன் "அடுத்தவர் மேல் அன்பும் கருணையும் கொண்டவர் களால்தான் உயர்ந்த இடத்தை அடைய முடியும்" என்றது. இதைக் கேட்ட மீன் குஞ்சுகள் உற்சாகம் அடைந்தன.