16-05-09

ஒரு புல் பாடுகிறது!

தென்னாப்பிரிக்காவில் உள்ள பண்ணைவீட்டில் மேரி தன்னந்தனியாக வசித்துவந்தாள். அவள் ஒரு இளம்பெண் என்றாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த வாழ்க்கையில் அவளுக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் இருந்தது. தோழிகள் நிறைய பேர் இருந்ததால் ஒரு பறவையைப்போல கவலையின்றி சுற்றித் திரிந்தாள்.

ஆனால், அவளது உறவினர்கள் "இன்னும் நீ ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?" என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். அதற்காகவே அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று.

டிக் டர்னர் என்ற வாலிபனை அவள் திருமணம் செய்துகொண்டாள். அவன் கடுமையான உழைப்பாளி. தன்னுடைய பண்ணையை லாபகரமாக நடத்துவதற்காக இரவுபகல் உறக்கமின்றி உழைத்துக் கொண்டிருந்தான்.

மேரியும் அவனோடு பண்ணைக்குச் சென்று உதவி செய்தாள். அவன் பண்ணையில் வேலையாட்களோடு பணிபுரிகையில் வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டாள். டிக் உடல்நலமின்றி வீட்டில் இருக்கும்போது, மேரி தன்னந்தனியாகவே பண்ணைக்குச் சென்றாள். அவர்கள் இருவருக்கும் பண்ணை என்பதுதான் முக்கியமாக இருந்தது. அவர்களின் வாழ்க்கை என்பதுகூட இரண்டாம் பட்சம்தான்.

வசதியான வாழ்க்கை அமையும் வரையில் விழாக்களுக்கு செல்லக் கூடாது என்று முடிவுசெய்தனர். குழந்தை பெற்றுக் கொள்வதையும் தவிர்த்தனர். எனவே பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்களை வித்தியாசமாக பார்க்க ஆரம்பித்தனர். கணவனும் மனைவியும் 'பணம்... பணம்' என்று பேயாக அலைவதாக கேலி பேசினர்.

மேரிக்கு இயல்பாகவே தான் ஒரு வெள்ளைக் காரப் பெண் என்ற கர்வமிருந்தது. டிக், மேரி இருவருமே தங்களது பண்ணையில் வேலைபார்த்த கறுப்பின மக்களிடம் அந்நியமாகவே நடந்துகொண்டனர். கறுப்பர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று குறைபட்டுக்கொண்டனர். டிக்காவது பரவாயில்லை, குறைசொல்வதோடு நிறுத்திக்கொண்டான். மேரியோ அவர்களை விலங்குகளைப்போன்று கடுமையாக நடத்த ஆரம்பித்தாள். ஓய்வுநேரத்தை குறைத்து அதிகமாக வேலை வாங்கினாள். அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய நியாயமான கூலியையும் குறைத்துவிட்டாள்.

அங்கு வேலைபார்த்த கறுப்பர்களில் மோசஸ்ஸும் ஒருவன். அவன் பெயர்கூட மேரிக்குத் தெரியாது. எப்போதும் முகமலர்ச்சியோடு இருந்த அவனைத் தாமதமாகத்தான் கவனித்தாள்.

சதா சர்வகாலமும் மன உளைச்சலோடு அலைந்துகொண்டிருந்த அவளால், அடிமையாக வேலைபார்க்கும் ஒரு கறுப்பன் உற்சாகமாக இருப்பதை நம்ப முடியவில்லை.

காலங்கள் நகர்ந்தது... நடந்தது... ஓட ஆரம்பித்தது...

மேரி வயதானவளாகிவிட்டாள். டிக்கும் அவளும் பேசிக்கொள்வதுகூட இல்லை. பணம்தான் வாழ்க்கையென்று அவர்கள் நம்பி வாழ்ந்ததே அவர்களின் துன்பத்துக்கும் காரணமாயிற்று.

ஆனால் மோசஸ் இன்னும் அதே பழைய உற்சாகத்துடனேயே இருந்தான். ஒருநாள் அவனை அழைத்த மேரி தன் கவலைகளை அவனிடம் சொல்லி அழுது புலம்பி விட்டாள்.

மோசஸுக்கு மேரியின் மீது எந்தக் கோபமும் இல்லை. ஒரு உற்ற நண்பனைப் போல அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

இப்போது மோசஸ் அந்த வெள்ளைக்கார வீட்டில் தவிர்க்கமுடியாத ஆள்.

மனித உறவுகளே வாழ்க்கையில் முக்கியமானது. பணம் எப்போதுமே இரண்டாம்பட்சம்தான். அதேவேளையில் நிறத்தின் காரணமாகவோ, ஜாதிமதங்களின் காரணமாகவோ மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதும் பெருந்தவறு.

The Grass Is Singing என்ற இக்கதையை எழுதியவர் டோரிஸ் லெஸ்லிங் என்ற ஆங்கில பெண் எழுத்தாளர். இவருக்கு 2007-ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப் பட்டது.