Published:Updated:

நோபல் பரிசு பெற்றா கதை !

நோபல் பரிசு பெற்றா கதை !


01-05-2008
 
நோபல் பரிசு பெற்ற கதை!
இரண்டு போர் வீரர்கள்!

அண்ணன் பீட் இருபது வயதை தாண்டிவிட்ட இளைஞன். அவன் தம்பியோ சிறுவன். அவனுக்கு ஒன்பது வயதுதான். இருவரும் வானொலிப் பெட்டியில் செய்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

நோபல் பரிசு பெற்றா கதை !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. எனவே செய்தி முழுவதும் போர் நிலவரங்களை பற்றியதாகவே இருந்தது. "இத்துடன் இந்த செய்திகள் நிறைவுபெறுகிறது" என்று சொல்லி முடித்தவுடன், அண்ணன் பீட் தன் தம்பியிடம் எதுவுமே பேசவில்லை. தம்பிக்கு அதை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. அண்ணனோ, கடைசி வரைக்கும் வாய்திறக்கவே இல்லை.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பீட் தன் தம்பியோடு பேசுவதையே நிறுத்திவிட்டான். சிறுவனான அவன் தம்பிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

திடீரென்று ஒருநாள் பீட், "நான் போய்த்தான் ஆக வேண்டும்" என்றான்.

"எங்கே?" என்று கேட்டான் தம்பி.

"போருக்கு..."

சிறுவனுக்கு போரை பற்றிய விவரங்கள் ஒன்றுமே தெரியாது. உடனே "நானும் வருகிறேன்" என்று சொல்ல ஆரம்பித்துவிட்டான்.

"நீ வந்து என்ன செய்யமுடியும்?" என்றான் பீட்.

"நீ பெரியவர்களை அடித்து நொறுக்கு. நான் சிறுவர்களோடு கட்டிப்புரண்டு சண்டை போடுகிறேன்" என்றான் தம்பி. பீட் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

"நீ சிறியவன். உன்னை ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்" என்று சொன்னான். சிறுவனுக்கு மிகவும் ஏமாற்றமாக போய்விட்டது.

அம்மாவும், அப்பாவும் பீட்டை வருத்தத்தோடு வழியனுப்பி வைத்தார்கள். விடைபெறும்போது அம்மா அவனுக்கு ஆசி முத்தம் கொடுத்தாள். உடனே தம்பிக்கும் அண்ணனை போல ராணுவ வீரனாக வேண்டுமென்ற ஆசை பிறந்தது.

ஆனால், 'அம்மாவும், அப்பாவும் அதற்கு சம்மதிக்கமாட்டார்களே! என்ன செய்வது?' அவனுக்கு ஒரேயரு யோசனைதான்! அண்ணன் பீட் போர்க்களத்துக்குச் செல்லும் முன்பாக தானும் அந்த இடத்திற்குப் போய்விட வேண்டும் என்பதுதான் அது.

இரவு நேரத்தில் அம்மா, அப்பா இருவரும் உறங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் அவர் களுக்குத் தெரியாமல் சிறுவன் வீட்டைவிட்டு கிளம்பிவிட்டான். இரவு முழுவதும் நடந்தான். நடந்தான்... நடந்துகொண்டே இருந்தான். பொழுது விடிந்தபிறகுதான் நகரத்தை நெருங்க முடிந்தது. அதிக தூரம் நடந்ததால் சிறுவனுக்கு பசியெடுக்க ஆரம்பித்தது. பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து வந்திருக்கலாம் என நினைத்தான்.

அந்த நகரத்துக்குச் சென்று சேர்ந்த பிறகுதான் சிறுவனுக்கு இன்னொரு விஷயமும் புரிந்தது. அந்த நகரத்தையும் தாண்டி எண்பது மைல் தூரம் போனால், மற்றொரு நகரம் வரும். அதன் பெயர் மெம்பிஸ். அங்குதான் பீட் இருக்கிறான். 'இங்கிருந்து அங்கு நடந்துபோய் சேருவதற்குள் போர் முடிந்துவிடுமே!' என சிறுவனுக்கு ஒரே கவலையாக இருந்தது.

பரிதாபமாய் நின்றுகொண்டிருந்த சிறுவனை காவலர் ஒருவர் பார்த்துவிட்டார். 'பாவம், வழி தெரியாமல் தவிக்கிறானே' என வருத்தப்பட்டார்.

"நீ எந்த ஊர்?" என்றார். ஆனால் சிறுவனோ "நான் மெம்பிஸ் நகரத்திற்குப் போகவேண்டும். அங்கு என் அண்ணன் பீட் இருக்கிறான்" என்பதை மட்டுமே திரும்பத்திரும்ப சொன்னான். வேறு வழியில்லாமல் மெம்பிஸ் நகரத்திற்கு டிக்கெட் வாங்கி கொடுத்து சிறுவனை பஸ் ஏற்றிவிட்டார் அந்த காவலர்.

மெம்பிஸ் நகருக்குள் நுழைந்தவுடன் சிறுவனுக்கு தாங்கமுடியாத மகிழ்ச்சி. எப்படியும் ராணுவத்தில் சேர்ந்துவிடமுடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டது.

ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் இடத்தை கொஞ்சநேரத்திலேயே கண்டுபிடித்துவிட்டான். ஆனால், யாரும் அவனை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. அங்கிருந்த ஒரு வீரன், சிறுவனை கேலி செய்தான். சிறுவனுக்கு, அந்த வீரனின் மீது பயங்கரமான கோபம்!

உடனே தன் கால்சட்டைப் பையிலிருந்து சிறு கத்தியை எடுத்து கேலி செய்த வீரனின் கையில் கீறினான். போர் புரியும்போது அந்த கத்தி பயன்படக்கூடும் என்று சிறுவன் நினைத்தான். எனவே அந்த கத்தியை தன் சட்டைப்பையிலேயே வைத்திருந்தான்.

கத்தி கீறிய இடத்தில் வீரனுக்கு ரத்தம் வந்தது. மற்ற ராணுவ வீரர்கள் சிறுவனை மடக்கிப்பிடித்தார்கள். ஒரு உயரதிகாரி சிறுவனை விசாரணை செய்தார். பீட்-டை அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.

தம்பியின் ஆசை அவனுக்கு புரிந்தது. அதிகாரியிடம் நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து தம்பியை விடுவித்தான். "இளைஞர்களை மட்டும்தான் ராணுவத்தில் சேர்ப்பார்கள். சிறுவர்களை சேர்க்க மாட்டார்கள்" என்று தன் தம்பிக்கு அறிவுரை சொன்னான்.

உயரதிகாரி சிறுவனை தன் வீட்டுக்கு அழைத்துப் போய் விருந்து கொடுத்தார். அவனை தன் காரிலேயே வீட்டுக்குத் திருப்பி அனுப்பி வைத்தார்.

'நீ என்ன ஆக விரும்புகிறாய்?' என்று யாராவது நம்மிடம் கேட்டால் டாக்டர் அல்லது இன்ஜினீயர் ஆவோம் என பதில் சொல் வோம். ஆனால் உடனே நாம் டாக்டராகிவிட முடியுமா? அதற்கான வயதும் தகுதிகளும் வேண்டும் அல்லவா?

எனவே, நம்முடைய ஆசைகள் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் உடனே, அதை அடைந்துவிட முடியாது. அதற்கான வயது வரும் வரைக்கும் காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் அதற்கு தேவையான தகுதியை மட்டும் இப்போதே வளர்த்துக்கொள்வோம்.

Two Soldiers என்ற இந்த ஆங்கில கதையை எழுதிய எழுத்தாளர் வில்லியம் பாக்னர். 1897-ல் அமெரிக்காவில் உள்ள மிஸிஸிப்பி மாகாணத்தில் பிறந்தார். இந்தக் கதைக்காக இவருக்கு 1949-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.