16-11-2009

ஜாலி நரி!

அந்த மரத்தின் அடியில் பெருங்கூட்டம். ஏதோ திருவிழா மாதிரி அமர்க்களப்பட்டது. அத்தனையும் எறும்புகள்! நரி ஒன்று இதை பூதக் கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

எல்லா எறும்புகளும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தன. சின்னச் சின்ன பூச்சிகள், பருப்பு, விதைகள் என கிடைப்பதை எல்லாம் இழுத்துக் கொண்டும் தூக்கிக்கொண்டும் தங்கள் புற்றுக்கு ஓடிக்கொண்டிருந்தன.

'எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்' என்று யோசித்தபடி தன் ஆள்காட்டி விரலால் ஒரு எறும்பை அழுத்திப் பிடித்து,"என்ன ஆயிடுச்சுன்னு இவ்வளவு டென்ஷன்? கிடைக்கிற உணவை அப்பவே பங்கு போட்டு சாப்பிடாம எங்கே தூக்கிகிட்டு அலையறீங்க?" என்று கேட்டது நரி.

"நரி அண்ணா! என்னை விட்டுடுங்க... இப்பவே எல்லாத்தையும் கொண்டுபோய் எங்க வீடுகளில் சேர்த்து வெச்சாதான் நாளைக்கு உதவும்! விடுங்கண்ணா..." என்று கெஞ்சியது எறும்பு.

"இரு... போகலாம். நாளைக்கு என்ன உங்களுக்கு லீவா? இதே மாதிரி நாளையும் வெளியே வந்து சாப்பிட முடியாதா?" என்றது நரி கிண்டலாக.

"நாளைக்கு நிலமை எப்படி இருக்குமோ தெரியாது. அதான்..." என்ற எறும்பிடம் நரி சொன்னது... "நாளை நாளைன்னு ஓடி இன்னிக்கு ஜாலியா இருக்கறதை மிஸ் பண்றீங்க! என்னைப் பாரு... எதையாவது அடிச்சோமா, திண்ணோமா, ரெஸ்ட் எடுத்தோமான்னு ஜாலியா இருக்கேன். என்னைப் பார்த்தாவது திருந்துங்க. போய் உன் பைத்தியக்காரக் கூட்டத்துக்கு சொல்லு. ஓடு!" என்று விரட்டியது. எறும்பும் விட்டால் போதுமென தெறித்து ஓடியது.

ஒரு பகல் தூக்கம் போட்டு எழுந்தது நரி. லேசாக பசிக்கவே யாராவது வசமாக மாட்டுவார்களா என பார்த்தது. வானம் இருட்டி இருந்தது. 'என்னடா இவ்வளவு இருட்டா இருக்கே...' என்று நரி யோசிக்கும்போதே தூறல் விழ ஆரம்பித்து, மழை வேகம் எடுத்தது. நரி மழைக்குப் பயந்து ஓடிப் போய் மரத்துக்கு அடியில் நின்றது.

நரிக்கு இப்போது பசி அதிகமானது. மழையும் அதிகமானது. எதையாவது தின்று பசியை ஆற்ற வேண்டும் நரிக்கு. ஆனால் இந்த மழையில் ஒன்றுமே செய்ய முடியாமல் தொப்பலாக நனைந்து குளிரில் நடுங்கியது நரி.

அப்போது ஒரு குரல். "நரி அண்ணா..!"

திரும்பிப் பார்த்தது நரி. மரத்தில் இருந்த சிறு ஓட்டை ஒன்றின் வாயிலில் எறும்பு நின்றிருந்தது. "என்ன அண்ணே, இப்பவும் ஜாலியாதான் இருக்கீங்களா?" என்று கேட்டது.

நரிக்கு அப்போதுதான் எறும்புகளின் உழைப்பு, சேர்த்து வைத்தல், நாளை பற்றி திட்டமிடுதல் எல்லாம் புரிந்தது. "எறும்பு தம்பி! என்னை மன்னிச்சிடு. நான் உங்களை தப்பா எடை போட்டு விட்டேன். ரொம்ப கிண்டலும் பண்ணிட்டேன். ஸாரி!" என்றது.

"கவலைப்படாதீங்க நரி அண்ணா... சேர்த்து வைக்கிறது எங்க ஸ்டைல். ஜாலியா இருக்கிறது உங்க ஸ்டைல். எதையும் மாற்ற முடியாது. இந்தாங்க..." என்று தான் சேர்த்து வைத்த உணவில் கொஞ்சம் கொடுத்தது. "பசிக்கு இதுவாச்சும் கிடைச்சதே... ரொம்ப தேங்க்ஸ் தம்பி" என்று மென்று விழுங்கியது நரி.

-யாஸ்மீன்