ஸ்பெஷல் -1
Published:Updated:

மன சூல்!

மன சூல்!

##~##
ப்படியும் ஒரு திரைப்படமா?’ என ஆச்சர்யப்பட வைக்கப்போகும் 'மேல் விலாசம்’ என்ற மலையாளப் படத்தில் நடிக்க திருவனந்தபுரம் சென்றுவிட்டு வீடு வந்து, என் அறைக் கதவைத் திறந்தபோது, படுக்கை முழுக்க குட்டிக் குட்டித் தீவுகளாய்... படிக்க வேண்டிய வாரப் பத்திரிகைகள். முன் வாக்கியத்தில் இருந்த 'குட்டி’ 'குட்டி’யில் மட்டும் 'குஜால்’ குழைத்துப் பூசியபோது, குதித்து வெளியேறிக் கும்மி அடித்த வார்த்தை வஸ்துக்களை வைத்துக் குழைத்த லேகிய ஜாங்கிரி இது!

அய்யய்யய்யயோ
திக்குமுக்காடித்தான் போகிறேன்

இதழ்கள் விரிந்தும் குவிந்தும்
இன்பம் சொரிய அழைப்புகள்

மன சூல்!

முன் பக்கம் காட்டியபடி
பின் பக்கம் காட்டியபடி
கவர்ச்சிப் பகுதிகள்
காற்றில் படபடக்க...

'கிட்ட வாயேன்’
'தொட்டுப் பாரேன்’

கையேந்தி
மடி சாய்த்து
மதி மயங்கி
மூழ்கிப்போவாய்

ஒவ்வொரு நரம்பாய்
விரல் நுனி நீவும் - உன்
எச்சில் ஈரம் - என்
அச்சில் ஊற...

முழுதாய் சுவைத்து
முடிவாய் ஓய்வெடு
முடியாவிட்டால்...
மெதுவாய் ஒரு புரட்டு
புரட்டிவிட்டாவது
போய் ஒழி
புண்ணியமாய் போகும்!

இப்படியா...
சிவப்பு விளக்கு
சிங்காரிகளின்
'சிணுங்கல்களாய்
சிதறிக்கிடப்பது?’

வாரங்கழித்து வந்தவனுக்கு
வார இதழ்களின்
வரவேற்பு வாசிப்பு!