ஸ்கூலுக்கு ரெடியாகி, பரபரப்பாக கிளம்பினான் ரகு. இன்னும் டிபன் சாப்பிடவில்லை. வழக்கம் போல அந்த ஓட்டலுக்குள் நுழைந் தான். எப்போதும் அவன் உட்காருகிற டேபிளுக்குச் சென்றான். வெயிட்டர் அருகில் வந்து, 'என்ன சொல்லட்டும்?' என்பது போல பார்த்தார். "முறுவலா ஒரு நெய் ரோஸ்ட்... பார்த்து, ரொம்ப தீச்சுடாம இருக்கட்டும்" என்றான்.
அவன் சொன்னது போலவே சுடச் சுட வந்து டேபிளில் இறங் கியது நெய் ரோஸ்ட். "கெட்டிச் சட்னி வேணும்... அப்படியே எக்ஸ்ட்ரா சாம்பார்!" என்றான் கொஞ்சம் அதிகாரமாக.
அப்போதுதான் நினைவுக்கு வந்தது... 'அய்யோ! பர்ஸ் எடுத்துட்டு வரலியே!" மனசு லேசாக பதற, 'இப்ப என்ன பண்றது?' என விழித்த படியே மெள்ள சாப்பிட்டுக்கொண்டிருந்தான். ரகுவின் முழியைப் பார்த்த வெய்ட்டர், 'என்ன, எல்லாம் சரியா இருக்குல்ல?' என்பது போல பார்க்க, 'என்னன்னு சொல்றது' என யோசித்தவனாக, கடைசியில் "தோசை நல்லா இருக்கு" என்று மட்டும் சொல்லிவிட்டு சாப்பிடுவதைத் தொடர்ந்தான்.
சாப்பிட்டு முடித்து கையை கழுவிவிட்டு, தயக்கத்தோடே கல்லா அருகே சென்றான். "என்ன இன்னிக்கும் பர்ஸ் எடுத்துட்டு வரலியா... உனக்கு எப்பதான் புத்தி வருமோ" என்று புலம்பினார் கல்லாவில் இருந்தவர்.
"இந்தா!" என்று சில்லறையாக நூறு ரூபாயை ரகுவிடம் அவர் கொடுக்க, "ஸாரி டாடி! இனி இப்படி நடக்காது" என்ற கெஞ்சலோடு ஸ்கூலுக்கு கிளம்பினான் ரகு.
பஞ்ச்சர்..!
|