எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது அது நடந்தது! சற்று முன் அத்தனைபேர் முன்னிலையில் மேலெழும்பிய அந்த விமானம் அதன் பாதையிலிருந்து விலகி, தாறுமாறாகப் போனது. பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பதற்றத்தில் கத்த
ஆரம்பித்தார்கள். விமானம் தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்த ராஜேஷ் பைலட், விமானம் கீழே விழுந்து நொறுங்காதபடி எப்படியாவது தரையிறக்கும் செயலில் ஈடுபட, விமானம் முழுவதுமாக கண்ட்ரோல் விட்டுப் போயிருந்தது. விமானங்கள் சீறிக் கிளம்பு வதையும் பறந்து செல்வதையும் வேடிக்கை பார்க்க வந்த கூட்டம், இந்த காட்சியைப் பார்த்து, அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என பதற்றத்துடன் நின்றிருந்தது.
ராஜேஷ் எவ்வளவோ போராடியும் எந்த பிரயோஜனமும் இல்லாமல், அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அந்த பகுதி முழுவதும் கூட்டம் சூழ்ந்துவிட்டது. விமானத்தின் உடைந்த பாகங்கள், தரையெங்கும் சிதறிக் கிடந்தன.
"சரி விடு... வேற ஒண்ணு புதுசா வாங்கிக்கலாம்...'' என்று அப்பா சமாதானம் செய்ய, உடைந்து கிடந்த தன் ரிமோட் விமானத்தை பார்த்தபடி நடந்தான் ராஜேஷ் பைலட்.
மாற்றம் !
|