பன்னிரெண்டு இளைஞர்கள் ஆர்வமுடன் போட்டியில் கலந்துகொண்டனர். ஒருமாதம் கழித்து மக்கள் முன்னிலையில், அரசர் செடிகளைப் பார்வையிட்டார். பதினொரு செடிகள் தொட்டிகளில் வளர்ந்திருந்தன. ஒரு தொட்டியில் மட்டும் செடி இல்லை. அரசர், அத்தொட்டியைப் பராமரித்தவனை அரசனாக அறிவித்தார்.
எல்லோரும் புரியாமல் வியப்புடன் பார்த்தனர். அரசர், "கல்வி, அறிவு, ஒழுக்கம் இவற்றைவிட முக்கியமானது நேர்மை. இவர்கள் அனைவரிடமும் நான் கொடுத்தது வளர வைக்க முடியாத மலட்டு விதைகள். மற்றவர்கள் வேறு விதைகளைப் போட்டு முளைக்கச் செய்திருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள்... நான் செய்தது சரியா? தவறா?" என்று கேட்டார். மக்கள் அனைவரும் சரிதான் என ஆர்ப்பரித்தனர்.
|