மல்லி

சரசுவதி

த  ன் வீட்டில் அவ்வளவு கூட்டத்தை, மல்லி ஒரு நாளும் பார்த்ததில்லை!

தெருவிலும் வீட்டுக்குள்ளும் ஊர்க்காரர்கள், உறவுக்காரர்கள் என்று நிறையப் பேர். சிலரை மல்லிக்குத் தெரிந்திருந்தது. பலரைத் தெரியவில்லை.

தாத்தாவின் உடல், கடை வீட்டில், அவர் எப்போதும் படுத்துக்கொள்ளும் மெத்தையின் மீது கிடத்தப்பட்டு இருந்தது.

புத்தகச் சுமையைச் சுவரோரம் வைத்துவிட்டு தாத்தாவின் உடலருகே சென்ற மல்லி, சில நிமிடங்கள் தாத்தாவைப் பார்த்துக்கொண்டு நின்றாள். சின்னத் தாத்தா, தன் அண்ணன் உடல் அருகில் உட்கார்ந்து சோகத்துடன் வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார். அவர் வீட்டிலிருந்து மற்றவர்களும் வந்திருந்தது மல்லிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

‘‘பெருசு சாவு, நல்ல சாவு; ஒரு நோய்நொடின்னு படுக்காம, மருந்து மாத்தர தேடாம, பொட்டுனு போயிட்டாரு புண்ணியவான். யாருக்கும் எந்தச் செரமமும் வைக்கல’’ என்று ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.

நல்லவங்க பொட்டுனு போவாங்களா இருக்கும். ஆனா, பொட்டுனு போறவங்கள்லாம் நல்லவங்க கிடையாது என்று மல்லி மனசு சொல்லியது. அம்மா மீது எடுத்ததற்கெல்லாம்

குற்றம் சுமத்தி அழவைத்து, மல்லியைத் தொட்டதற்கெல்லாம் கரித்துக் கொட்டி அடி வாங்கிக் கொடுத்த தாத்தா எப்படி நல்லவராக இருக்க முடியும்?

ஆற்றங்கரை நோக்கிப் போனவர், நெஞ்சு வலியென்று பாதி வழியிலேயே வீடு திரும்பியிருக்கிறார். வீட்டிலிருந்த பெரியண்ணா, தாத்தாவுக்கு நீலகிரித் தைலத்தை நெஞ்சில் அரக்கித் தேய்த்திருக்கிறார். கை பொறுக்கும் சூட்டில் தண்ணி கொண்டுவரச் சொல்லி, தாத்தாவைத் தன் மீது சாய்த்தவாறு, டம்ளர் நீரைப் புகட்டியிருக்கிறார். நீர் தொண்டையை நனைப்பதற்கு முன்பே, தாத்தாவின் தலை சாய்ந்துவிட்டதாக பக்கத்துவீட்டு துளசிபாய் அம்மா சொல்லிக்கொண்டு இருந்தாள்.

தாரா, உள் வீட்டில் ஒரு மூலையில் தனியே அழுதுகொண்டு இருந்தாள். உள் வாசலில் கோவிந்தம்மா, அவ்வப்போது வரும் ஊர்ப் பெண்களின் இடுப்போடு கைகோத்து, ஒப்பாரி வைத்து எழவு கொடுத்துக்கொண்டு இருந்தார்.

‘‘மக்க பெருமையையும் மருமக்க
சந்ததியும் இன்னுஞ் சில காலம் இருந்து
நீ பாக்காமெ... ய்யேய்யேய்யேஹெஹ்ஹ.

எமனோட சந்நிதியே இன்பமுன்னு
போனீயோ... ய்யேய்யேய்யேஹெஹ்ஹ.

புள்ள பெருமையையும் பேரப்புள்ள
சந்ததியும் இன்னுஞ் சில காலம் இருந்து c
பாக்காமெ...ய்யேய்யேய்யேஹெஹ்ஹ...’’  - ஒப்பாரிப் பாடலின் சோகம் வீட்டின் இண்டு இடுக்கையெல்லாம் நிறைத்தது.

பார்ப்பதற்கு ஒரு சாயலில் அந்தக் காலத் திரைப்பட நடிகை கண்ணாம்பாள் போல இருந்த நடுத்தர வயதுப் பெண், அரக்கப்பரக்க ஓடி வந்தார். ‘‘அடியே கோவிந்தம்மா, மாமனாரையும் வாரிக் குடுத்துப்புட்டு, நீ என்னாதான் செய்யப் போறியோ?’’ என்று கேள்விஎழுப்பியவராக ஒப்பாரி வட்டத்துக்குள் தன்னையும் இணைத்துக்கொண்டார்.

‘‘ஆம்பளக்கி ஆம்பளயா, பொம்பளக்கி பொம்பளயா, அருமையா எனை வளத்த அப்பாவே போயிட்டியா’’  என்று ஒரு பாட்டம் அழுது முடித்தார். மூக்கைச் சிந்தி, முந்தானையில் துடைத்தபடி அங்கிருந்து நகர்ந்தார். யார் இவர் என்று கண்களால் கேள்வி எழுப்பிய பெண்களுக்கு, ‘‘எம் மாமனாருக்கு மவ மொறயாவணும். மருதையில வாக்கப்பட்டிருக்கா, குணவதின்னு பேரு’’ - தகவல் தந்தார் கோவிந்தம்மா.

மெள்ள நகர்ந்த டூப்ளிகேட் கண்ணாம்பா, தாரா இருந்த அறைக்குள் வந்தார். சுவரில் சாய்ந்தபடி அழுதுகொண்டு இருந்த தாராவை, கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். ‘‘நீதான் ராஜண்ணனோட மூத்த மவளா? ஒம் பேரென்ன?’’ என்று கேட்டார். அழுகையோடு ஆமென்று தலையாட்டி, தன் பெயரைச் சொன்னாள் தாரா. ‘‘படிச்சுக்கிட்டு இருக்கியா?’’ என்று கேட்டதற்கு, இல்லையென்று தாரா தலையாட்ட, முந்திக்கொண்ட மல்லி, தன் அக்கா எட்டாங் கிளாஸ் முடித்துவிட்டு ரெண்டு வருசம் ஆகிவிட்டதைப் பெருமையோடு தெரிவித்தாள்.

தாராவின் தோள் வழி முன்புறம் வழிந்து தரையைத் தொட்ட நீண்ட சடையைப் பார்த்துவிட்டு, ‘‘சவுரி முடி வெச்சு சடை போட்டிருக்கியா?’’ என்று குணவதி கேட்கவும், மல்லிக்கு அந்த டூப்ளிகேட் கண்ணாம்பா மீது எரிச்சலும் வெறுப்பும் ஏற்பட்டது. ‘‘அதொன்னுஞ் சவுரியில்ல. எங்கக்காவோட நெஜ முடிதான்’’ என்று நொடித்தாள். தாரா பதிலேதும் சொல்லாமல் அழுதபடியே இருந்தாள்.

அடுத்த நாள் காலை வந்து சேர்ந்த உலகநாதனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உறவுப் பெண்கள் ஒரு பாட்டம் அழுதனர். கோவிந்தமாள் பெருங்குரலெடுத்து அழ, தாரா அண்ணன் முகம் பார்த்து ஆறாகக் கண்ணீர் வடித்தாள். மல்லியும் அண்ணனோடு ஒட்டிக்கொண்டாள்.

பெரியண்ணா தீச்சட்டி தூக்க, உலகநாதன் நெய்ப்பந்தம் பிடிக்க, தாத்தாவின் உடல் ஆற்றங்கரை சுடுகாட்டை நோக்கிப் பயணித்தது.

வெளியூரிலிருந்து வந்திருக்கும் முக்கியமான சொந்தக்காரர்கள், மறுபடியும் பதினாறாம் நாளுக்கு வந்து போவதென்பது கூடுதல் செலவு, சிரமம் என்று பேசப்பட்டதால், தாத்தாவின் கருமகாரியம் மூன்றாம் நாளே நடந்தது. அன்று இரவுக்குள் எல்லோரும் புறப்பட்டுச் சென்றுவிட, வெறிச்சோடியது வீடு.

கிளம்பும்போது, தாராவைத் தேடி வந்த டூப்ளிகேட் கண்ணாம்பா, ‘‘எழவுக்கு வந்தவங்க சொல்லிட்டுப் போக் கூடாதுன்னு சொல்லுவாங்க’’ என்றபடி கிளம்பியது மல்லிக்கு வித்தியாசமாகப்பட்டது. அடுத்த நாள் காலை உலகநாதனும் கிளம்பிவிட்டான்.

தாத்தாவின் கடையை ஏறக்கட்டியாகிவிட்டது. கடையின் பலகைக் கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டன. வயலைக் கவனித்துக்கொண்ட பெரியண்ணா, இப்போதெல்லாம் அங்கேயே தங்கிக்கொண்டு, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மல்லி, தாராவைப் பார்க்க வந்து போனார். அப்போதும் வீட்டில் சாப்பிடுவதில்லை. தாத்தா இறந்ததைவிட, பெரியண்ணா தங்களைவிட்டு விலகிச் சென்றதும் வீட்டில் தங்காததும் மல்லியின் மனதில் சோகத்தையும், நிறைய கேள்விகளையும் எழுப்பின. ‘‘ஏங்க்கா பெரியண்ணா வர்றதில்ல?’’ என்று அக்காவிடம் கேட்டாள். ‘‘எனக்கென்னா தெரியும்?’’ என்று புலம்பினாள் அவள். அம்மாவிடம் கேட்கவும் பயம். விடையறிய முடியாத கேள்விகளால் மல்லி குழம்பிப்போனாள்.

வீட்டில் பணம், காசு அற்றுப்போக கோவிந்தம்மாவின் குடும்பச் செலவுக்குச் சுணக்கம் ஏற்பட்டது. காலை, மதியம். இரவு என்று மூன்று வேளையும், பானையேற்றப்பட்டு, எரிந்த வீட்டடுப்பு இப்போதெல்லாம் இரவு மட்டுமே மூட்டப்பட்டது. பெரியண்ணன் அவ்வப்போது வரும்போது வீட்டுச் செலவுக்கென்று தாராவிடம் தந்து செல்லும் பணம் போதவில்லை.

குடும்பச் செலவுகளுக்கு ஈடு கொடுக்க, கோவிந்தம்மா மூன்று வெடக் கோழிகளை

வாங்கிவிட்டார். சில வாரங்களுக்குள்ளேயே அவை முட்டையிடத் தொடங்கின. முட்டைகளை ஊரில் யாரும் காசு கொடுத்து வாங்க மாட்டார்கள் என்பதால், முட்டைகளை டவுனுக்குக் கொண்டு போய்தான் விற்பார்கள்.

கோவிந்தம்மா, ரொம்ப நாட்களாக, ஒரு குள்ளப் பசுவை வளர்த்து வந்தார். தாத்தா இறந்த சில வாரங்களில் அது கன்று ஈன்றது. கன்னுக்குட்டி ரொம்ப அழகு. அதனோடு விளையாடுவது மல்லிக்கு ரொம்பப் பிடிக்கும். குள்ளப் பசுவின் பாலைத் தயிராக்கிக் கடைந்து, வெண்ணெய் எடுக்கும் வேலை தாராவுடையது.

வாரமுச்சூடும் சேகரிக்கப்படும் முட்டைகளையும் வெண்ணையையும், டவுனுக்குக் கொண்டு போய் தெரிந்த கடையில் கொடுத்துவிட்டு கணக்குப் பார்த்து காசு வாங்கி வர வேண்டிய வேலை மல்லிக்கு. எனவே, ஞாயிற்றுக் கிழமையும் டவுனுக்கு நடக்க வேண்டியதாகிவிட்டது.

முழுப் பரீட்சைத் தேர்வுகள் முடிந்து பள்ளிக்கு பெரிய லீவு விடப்பட்டது. மல்லிக்கு பள்ளிக்குச் செல்வது ரொம்பப் பிடிக்கும் என்றாலும், தினம் தினம் நடப்பது என்பதிலிருந்து கிடைத்த விடுதலையை வரவேற்றாள். வாரம் ஒரு முறை முட்டை, வெண்ணெய் விற்று வர, டவுனுக்குப் போய் வருவது மட்டும் தொடர்ந்தது.

அன்று ஞாயிற்றுக் கிழமை. டவுனுக்குப் போய்விட்டு களைப்புடன் திரும்பிக்கொண்டு இருந்தவளை, தண்ணீர்க் குடத்துடன், புளியந்தோப்பில் சந்தித்த அன்னம்மா, ‘‘என்னாடி இவளே! எங்க போயிட்டு வர்றவ? ஒங்க அக்காவைப் பொண்ணு பாக்க வந்திருக்காங்களே, ஒனக்குத் தெரியாதா?’’ என்று கேட்டாள். ‘‘ஊஹும், தெரியாதே!’’ என்று ஆச்சர்யப்பட்ட மல்லி, தகவல் தந்த சேக்காளியிடம் நின்று ஒரு வார்த்தைகூடப் பேசாமல், வீட்டுக்கு ஓடினாள்.

ஆறேழு பேர் உள் வாசலில் ஈச்சம்பாய் விரித்து உட்கார்ந்திருந்தனர். பெண்களில் ஒருவர், தாத்தா சாவுக்கு வந்திருந்த டூப்ளிகேட் கண்ணாம்பா... குணவதி!

தாரா சிவப்பு நிற சில்க் புடவை, சிவப்பு ஜாக்கெட் அணிந்து தலையில் நிறைய மல்லிகைப் பூவுடன் அழகாக இருந்தாள். அருகே, அவளின் நெருங்கிய சிநேகிதி பாக்கியம்

பாக்கியக்காதான் பேசினாள். குணவதியோடு வந்திருக்கும் இரண்டு பெண்களும் அவருக்கு உறவுக்காரர்கள். இளைஞன், குணவதியின் மகன். பெயர், முத்துகிருஷ்ணன். அவனுக்குத்தான் தாராவைப் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் என்ற விவரத்தைக் கிசுகிசுத்தாள்.

‘‘ஓஹோ! அதான், தாத்தா செத்ததுக்கு வந்தப்ப இவங்க எங்கக்காவை அப்படி மொறச்சு மொறச்சுப் பாத்துக்கிட்டே இருந்தாங்களா? இப்பதான் எனக்கு எல்லாம் வெளங்குது!’’ என்று மல்லி ராகம் போட்டுச் சொல்ல, அத்தனை பேரும் சிரித்தார்கள். ‘‘உஷ்ஷ்!’’ என்று சாடை காட்டி மல்லியை அடக்கினாள் பாக்கியம்.

அறையை விட்டு வெளியே வந்த மல்லி, கை கட்டியபடி முத்துக்கிருஷ்ணனைக் குறுகுறுவெனப் பார்த்தாள். தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்த மல்லியை ‘‘இங்க வா’’ என்று மாப்பிள்ளை அழைத்தான். முகத்தைத் திருப்பிக்கொண்ட மல்லி, மீண்டும் அக்கா இருந்த அறைக்குள் வந்தாள். தாராவின் அருகே சென்று, அவள் காதில், ‘மாப்பிள்ளை நல்லா இருக்காருக்கா... நீ பாத்தியா? என்று ரகசியமாகக் கேட்டாள். ‘‘ச்சீ... போடி’’ என்று தள்ளிவிட்டாள் தாரா. அவளுக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருந்தது.

கல்யாணப் பேச்சு நடத்தும் பொறுப்பை சின்னத் தாத்தா எடுத்துக் கொண்டார். ‘‘குடும்ப நெலம ஒங்களுக்குத் தெரியாததில்ல. பெருசா எதுவும் எதிர்பார்க்கக் கூடாது. அவங்களால முடிஞ்சதைச் செய்வாங்க’’ என்றார். சமையல்கட்டின் கதவுக்கு பின்னாலிருந்து கோவிந்தம்மாவின் குரல் கேட்டது. ‘‘எதுக்கும் லோகுவைக் கேட்டுகிட்டுத்தான் முடிவெடுக்கணும். அவனை வெச்சுப் பேசிக்குவம்’’ என்றார்.

பொறுப்பு தன் கையை விட்டுச் சென்ற நிம்மதியோடு சின்னத் தாத்தா, ‘‘அதுவுஞ் சரிதான். தங்கச்சி கல்யாணம் லோகு பொறுப்புதான், ஒங்களுக்குப் பொண்ணைப் புடிச்சிட்டுதுல்ல’’ என மற்ற விஷயங்களில் மௌனமே சம்மதம் என்பதாக இருந்துவிட்டார்.

நிச்சயதார்த்தத்துக்கு முன், கை நனைக்கிற பழக்கம் இல்லை என்பதால் காபிகூடக் குடிக்கவில்லை. அனைவரும் விடைபெற்று வெளியேறினார். மாதங்கள் உருண்டன.

மல்லி, டவுன் பள்ளிக்கூடத்துக்குப் படிக்கச் சென்றதிலிருந்து, விடுமுறை நாட்களில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டு இருப்பாள். தாராவோ, அம்மாவோ அவளை எழுப்புவதில்லை. அன்று, படுத்துக்கிடந்த மல்லியைத் தாரா உலுக்கி எழுப்பினாள். ‘‘எந்திரிடி! அவங்கல்லாம் வந்திருக்காங்க’’ என்றாள். எழுந்து உட்கார்ந்த மல்லி, மலங்க மலங்க விழித்தாள். ‘‘போடி, பல்லு தேச்சி சோப்பு போட்டு மூஞ்சியைக் கழுவி வா’’ என்று விரட்டியவள், மல்லிக்கு பூப்போட்ட மஞ்சள் கவுனை எடுத்து மாட்டி விட்டாள். மல்லி, கண்ணாடி முன் நின்றிருந்தபோது உலகநாதன் சிறிய சூட்கேஸுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

அண்ணனைக் கண்ட மல்லிக்கு ஆச்சர்யம். ‘‘ஹை அண்ணா!’’ என்று ஓடிப்போய் அவன் கையைப் பிடித்துக் கொண்டவள், தாராவைப் பார்த்து, ‘‘அண்ணன் வந்திருக்கிறதைத்தான் சொன்னியா?’’ என்று கேட்டாள்.

‘‘அடியே வாண்டு, ஒனக்குத் தெரியாதா? தாராவைப் பொண்ணு பாக்க வந்திருந்தாங்கல்ல, அவங்கதான் மறுக்க வந்திருக்காங்க. மாமா வூட்ல இருக்காங்க. இப்ப நம்ப வூட்டுக்கு வருவாங்க’’ என்ற உலகநாதன், தான் கொண்டுவந்த பெட்டியைத் தாராவிடம் கொடுத்தான். ‘‘பத்திரம்! என் ஸ்காலர்ஷிப் பணமெல்லாம் அதுல இருக்கு’’ என்றான்.

மல்லியின் மனதில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த ஆசை அவளைறியாமல் படாரென வெளிப்பட்டது. ‘‘அண்ணண்ணா, அந்தப் பணத்துல எனக்கொரு சைக்கிள் வாங்கிக் குடுங்கண்ணா! தெனந்தெனம் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போறது காலெல்லாம் ரொம்ப வலிக்குது. லேட்டா போனா, வாத்தியார் மொதல் பீரியட் முடியற வரைக்கும் கிளாஸுக்கு வெளியே நிறுத்திவெச்சுடறார். எங் கிளாஸ்ல நெறய புள்ளங்க சைக்கிள்லதான் வர்றாங்க! பிளீஸ்ணா!’’ கெஞ்சும் குரலில் விண்ணப்பித்தாள்.

கேட்டுக்கொண்டே வந்த கோவிந்தம்மாள், ‘‘எருது புண்ணு காக்காவுக்குத் தெரியுமாங்கிறது சரியாத்தான் இருக்கு. குடும்பம் இருக்கிற நெலவரத்துக்கு ஒனக்கு அதொண்ணுதான் கொறச்சலு. தலைக்கு மேல காரியத்தை வெச்சுக்கிட்டு, எப்பிடி ஒப்பேத்துறதுன்னு தவிச்சுக்கிட்டிருக்கோம். இவளுக்கு சைக்கிள் வேணுமாஞ் சைக்கிள்!’’ - மல்லியைக் கண்டித்தபடி கையிலிருந்த காபி டம்ளரை மகனிடம் நீட்டினாள்.

‘‘அண்ணே, பழைய சைக்கிளா இருந்தாக்கூட பரவால்லண்ணா, நா பத்திரமா வெச்சு ஓட்டிக்கிறேன்’’ என்றாள் மறுபடியும்.

‘‘ராவுத்தரே கொள்ளு திங்குறாராம்! கோதும அல்வா கேக்குதாம் குதுர!’’

\ (தொடரும்)