ஸ்பெஷல் -1
சினிமா
Published:Updated:

கலை இலக்கியா கவிதைகள்

கலை இலக்கியா கவிதைகள்

கலை இலக்கியா கவிதைகள்
கலை இலக்கியா கவிதைகள்!
கலை இலக்கியா கவிதைகள்
கலை இலக்கியா கவிதைகள்
கலை இலக்கியா கவிதைகள்
கலை இலக்கியா

கலை இலக்கியா கவிதைகள்

பெ ண்களின் பிரத்யேகமான பிரச்னைகளை, விசாலமான பார்வையில், நுட்பமான மொழியில் எழுதுபவர் கலை இலக்கியா. சமூகத்தின் மீதான கோபமும் நேயமும் பொங்கி வழிகிற நேர்த்தி இவரது கவிதையின் தனிச் சிறப்பு. ‘எனக்குக் கிடைத்த உலகத்தை எனக்குத் தெரிந்த மொழியில், எல்லோர்க்கும் உணர்த்த விரும்புவதே என் கவிதைகள்’ என்கிற கலை இலக்கியாவின் இயற்பெயர் ச.இந்திரா. சொந்த ஊர் தேனி அருகே, ஜெயமங்கலம்!

கோமியம் சாணம் கலந்த நெடி
கோழி ஆடு எனத் தீனி சிதறிய தளம் அன்று
பிறகு கொசுவும் பல்லியுமே சுற்றும்
அங்கங்கு சில வீடுகளில்

கண்ணாடியாய்
தூசின் சுவடோ கைகளோ படாத மதில் சுவர்கள்
‘புழுங்கி அழுக்காகாதது வீடா?’
என்பாள் அம்மா

சேரும் சோபாவும் இருக்க
மதில் சாயும்
அம்மாவின் முகம்
என்னவோ சொல்லிக்கொண்டே
இருக்கிறது!

கலை இலக்கியா கவிதைகள்

ஆற்றின் நீளமும்
கடலின் எல்லைகளும்
ஒரு கெண்டை மீனின்
நீச்சல் வட்டத்துக்குள் சிக்குவதில்லை

புல்லின் தலைக்கு
அகப்படும் வானமும்
வேருக்குப் பிடிபடும்
மண்ணும்தான்
எத்தனை சிறியது?

ஒரு பிறப்புக்கு
நூற்றாண்டு மனிதர்களின் சிரிப்பும்
ஒரு மரணத்துக்கு
யுகயுகத்து மனிதர்களின் அழுகையும்
எந்தளவு புரிபடும்?

தும்பிக்கையால் சுமைகளை
தூக்கிச் சுருட்டிக்கொண்டு
நெஞ்சிலிருந்து மூச்சுப் பாதையில்
ஏறுகின்றன
ஏகாந்த யானைகள்

சுமைகளை அவை
இறக்கவும் இல்லை
நெஞ்சுக்கும் நாசிக்குமான
அதன் மிதித்தல்
ஓயவும் இல்லை!

பறந்துவிடத்
தவமிருக்கும் மனசு
கனவுகளைச்
சுமந்திருக்கும் உயிர்

இரண்டுக்கும் பொருந்தாமல்

எழுதப்படாத சட்டங்களால்
சீசாவில் அடைக்கப்பட்டுள்ளது
பெண் என்னும் உடல்

அறிவும் மனசும்
லட்சியமும் உடலும்
ஒவ்வொரு திசைநின்று
மோதிக்கொள்ளும்போது தெரியும்
பெண் என்றால் என்னவென்று!

 
கலை இலக்கியா கவிதைகள்