துரோகம்!

அவன் அந்த இடத்தில்தான்

. தன்னை அச்சுறுத்திய. அதனைக் கடந்து போனான். ஒவ்வொரு முறையும். அவ்விடத்தைக் கடக்கிறபோது எல்லாம். படம் எடுத்தாடுகிறது. இல்லாத சர்ப்பம்!.
- க.அம்சப்ரியா

குளியலறை

தண்ணீரின் சலசலப்பு ஓய்ந்த
சற்று நேரத்தில்
மூடிய கதவின் மேலிருந்த
உள்ளாடைகளும் மேலாடைகளும்
உள்ளிழுத்துக்கொண்டு இருந்தன
எல்லாவற்றையும்
ஏதோ ஒரு உடல்
தின்றுகொண்டு இருக்கிறது!

- முத்துவேல்

நம்புங்கள்

முச்சந்தியில் விளக்கேற்றுங்கள்
தாலி பாக்கியம் தங்க
மஞ்சள், பச்சையில்
புடவை உடுத்துங்கள்.

அண்ணாமலை தீபம் அணைந்ததாம்
அடுக்கடுக்கடுக்காக இனி
துன்பங்கள்தான் என்கிறார்கள்.

மூத்த பிள்ளைக்கு ஆகாதாமே?
மறக்காமல் வேப்ப மரத்தில்
மஞ்சள் கயிறு கட்டுங்கள்

வீட்டுக்கு வீடு மரம் நடுங்கள்
பூமியே பிழைக்காதென்றால்
புரளியாய்க்கூட
நம்புகிறார்களில்லை!

- சு.கவிபாலா

குறி

பள்ளிப் பருவத்தின்போது
உலக வரைபடத்தில்
இந்தியா என்று
ஆப்பிரிக்காவைக் குறித்தவன்
ஆப்பிரிக்காவில் வேலை பார்க்கிறான்.
இந்தியா என்று
இந்தியாவைக் குறித்த நான்
இன்னும் பாஸ்போர்ட் எடுக்காத
இந்தியனாக இருக்கிறேன்!

- கட்டளை ஜெயா

கிங், குயின், ஜாக்!

விசிறிபோல் விரித்து
கார்டுகளைக் கையில் பிடிக்கும் லாகவத்தை
சொல்லித் தந்தது குண்டு பாபு.
ஒரிஜினல் ரம்மி சேர்ந்துவிட்டால்
அட்ரா சக்கை அட்ரா சக்கை
எனக் குதூகலிப்பான் மெய்யான்.
எதிராளி இறக்கும் கார்டை வைத்தே
அடுத்தவர் கார்டைக் கணிப்பதில்
குணாவுக்கு இணை யாரும் இல்லை.
ஓடும் ரயில், லொக்கடா பஸ்,
கீற்றுக் கொட்டாய், கிணற்று மேடு
கிடைக்கும் இடங்களில் எல்லாம்
வாகாய் இடம் அமைப்பதில்
கில்லாடி முத்துக்குமார்.
சினிமா செய்திகளையும்
கிசுகிசுக் கதைகளையும்
சுவாரஸ்யம் ததும்பச் சொல்வான் தேவராஜ்.
ஒவ்வொரு முறையும்
சீட்டுக் கட்டோடு நொறுக்குத் தீனிகளையும்
சேர்த்தே பிரிப்பான் சுன்னம் செந்தில்.
தன் கார்டை மடக்கிப் போட்டு
பக்கத்தில் இருப்பவனுக்கு ஆடுவதில்
பால் சீனி நல்லவன்.
பாயின்ட்டுக்குக் காசு வைத்து
நண்பர்களுடன் ஆடிய ஆட்டங்களில்
பல முறை தோற்றிருந்தாலும்
இன்னும் நிற்கிறது சந்தோஷங்கள்.

பக்கத்தில் யாரும் இல்லாமலும்
சந்தோஷம் இல்லா மனதும்
சலனம் இல்லா கரமும்
பொழுதைப் போக்கிட சுவாரஸ்யம் இன்றி
இயக்குகிறது எம்.எஸ்.வேர்டில் மவுஸை
ஸ்பைடர் சாலிடர் சீட்டாடும்
ஒவ்வொரு முறையும்
'You Win' எனக் குதூகலமாக அறிவிக்கிறது
கணினி!

- ஸ்ரீநிவாஸ் பிரபு

துரோகம்!

அவன் அந்த இடத்தில்தான்

. தன்னை அச்சுறுத்திய. அதனைக் கடந்து போனான். ஒவ்வொரு முறையும். அவ்விடத்தைக் கடக்கிறபோது எல்லாம். படம் எடுத்தாடுகிறது. இல்லாத சர்ப்பம்!.
- க.அம்சப்ரியா

குளியலறை

தண்ணீரின் சலசலப்பு ஓய்ந்த
சற்று நேரத்தில்
மூடிய கதவின் மேலிருந்த
உள்ளாடைகளும் மேலாடைகளும்
உள்ளிழுத்துக்கொண்டு இருந்தன
எல்லாவற்றையும்
ஏதோ ஒரு உடல்
தின்றுகொண்டு இருக்கிறது!

- முத்துவேல்

நம்புங்கள்

முச்சந்தியில் விளக்கேற்றுங்கள்
தாலி பாக்கியம் தங்க
மஞ்சள், பச்சையில்
புடவை உடுத்துங்கள்.

அண்ணாமலை தீபம் அணைந்ததாம்
அடுக்கடுக்கடுக்காக இனி
துன்பங்கள்தான் என்கிறார்கள்.

மூத்த பிள்ளைக்கு ஆகாதாமே?
மறக்காமல் வேப்ப மரத்தில்
மஞ்சள் கயிறு கட்டுங்கள்

வீட்டுக்கு வீடு மரம் நடுங்கள்
பூமியே பிழைக்காதென்றால்
புரளியாய்க்கூட
நம்புகிறார்களில்லை!

- சு.கவிபாலா

குறி

பள்ளிப் பருவத்தின்போது
உலக வரைபடத்தில்
இந்தியா என்று
ஆப்பிரிக்காவைக் குறித்தவன்
ஆப்பிரிக்காவில் வேலை பார்க்கிறான்.
இந்தியா என்று
இந்தியாவைக் குறித்த நான்
இன்னும் பாஸ்போர்ட் எடுக்காத
இந்தியனாக இருக்கிறேன்!

- கட்டளை ஜெயா

கிங், குயின், ஜாக்!

விசிறிபோல் விரித்து
கார்டுகளைக் கையில் பிடிக்கும் லாகவத்தை
சொல்லித் தந்தது குண்டு பாபு.
ஒரிஜினல் ரம்மி சேர்ந்துவிட்டால்
அட்ரா சக்கை அட்ரா சக்கை
எனக் குதூகலிப்பான் மெய்யான்.
எதிராளி இறக்கும் கார்டை வைத்தே
அடுத்தவர் கார்டைக் கணிப்பதில்
குணாவுக்கு இணை யாரும் இல்லை.
ஓடும் ரயில், லொக்கடா பஸ்,
கீற்றுக் கொட்டாய், கிணற்று மேடு
கிடைக்கும் இடங்களில் எல்லாம்
வாகாய் இடம் அமைப்பதில்
கில்லாடி முத்துக்குமார்.
சினிமா செய்திகளையும்
கிசுகிசுக் கதைகளையும்
சுவாரஸ்யம் ததும்பச் சொல்வான் தேவராஜ்.
ஒவ்வொரு முறையும்
சீட்டுக் கட்டோடு நொறுக்குத் தீனிகளையும்
சேர்த்தே பிரிப்பான் சுன்னம் செந்தில்.
தன் கார்டை மடக்கிப் போட்டு
பக்கத்தில் இருப்பவனுக்கு ஆடுவதில்
பால் சீனி நல்லவன்.
பாயின்ட்டுக்குக் காசு வைத்து
நண்பர்களுடன் ஆடிய ஆட்டங்களில்
பல முறை தோற்றிருந்தாலும்
இன்னும் நிற்கிறது சந்தோஷங்கள்.

பக்கத்தில் யாரும் இல்லாமலும்
சந்தோஷம் இல்லா மனதும்
சலனம் இல்லா கரமும்
பொழுதைப் போக்கிட சுவாரஸ்யம் இன்றி
இயக்குகிறது எம்.எஸ்.வேர்டில் மவுஸை
ஸ்பைடர் சாலிடர் சீட்டாடும்
ஒவ்வொரு முறையும்
'You Win' எனக் குதூகலமாக அறிவிக்கிறது
கணினி!

- ஸ்ரீநிவாஸ் பிரபு