Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

Published:Updated:
##~##

குழந்தை மொழியியல்

ன் இரண்டு வயதுக் குழந்தைக்கு
மஞ்சு அக்கா
ஒரு நல்ல நாளில் பாடம்
கற்றுக்கொடுக்கத் தொடங்கினாள்.
வீட்டு விலங்குகளின் படங்களையும்
காட்டு விலங்குகளின் படங்களையும்
முதலில் சொல்லிக்கொடுத்தாள்.
ஆர்வமாகக் கேட்டுக்கொண்டது
குழந்தை.
'கரடி எங்கே காட்டு’ என்று
ஆர்வமாகக் கேட்டாள் குழந்தையிடம்
குழந்தையும் சற்றும் யோசிக்காமல்
குதிரையின் வாலைத் தொட்டது.
'குரங்கு?’
சற்றுத் தடுமாறிய குழந்தை
சிங்கத்தைச் சுட்டிக்காட்டியது.
பதற்றத்தோடு அம்மா அடுத்து
கேட்டது 'யானை’யை
சிரித்துக்கொண்டே குழந்தை
யானையெனக் கூறியது ஒட்டகத்தை
காட்டெருமைக்குப் புலியையும்
நாய்க்கு நரியையும்
ஓநாய்க்கு கழுதையையும்
சிறுத்தைக்கு மானையும்
முயலுக்கு முள்ளம்பன்றியுமென
மாற்றி மாற்றிக் காட்டியது.
யோசித்தாள் அம்மா
ஒரே விலங்கை இரண்டு முறை
காட்டாத குழந்தையின் அறிவெண்ணி
புளகாங்கிதம் அடைந்தாள்
குதிரையை 'குதிரை’ என்றுதான்
சொல்ல வேண்டுமா?
'கரடி’ என்றும் சொல்லலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சு.இரமேஷ்

சொல்வனம்!

எச்சங்கள்

ரு துப்பாக்கியில் இருந்து
புறப்படும் தோட்டா
பறந்துகொண்டு இருக்கும்
பறவையை அடைவதற்குள்
செத்துப்போய்விடுகிறது
மனிதமும்
அதன் மகத்துவமும்
பின்னர்
பறவை சாவதும்
அதை உண்ட
மனிதன் சாவதும்
காலத்தின் எச்சங்கள்தான்!

ஜி.வேலு

அழியாத புள்ளிகள்

ப்போதுமே
மதில் மீதுதான்
அமர்ந்திருக்கிறது
மனப் பூனை
குழப்பங்கள் நீங்காமலேயே
குதிக்கும்
அதன் பக்கங்களை
வேண்டுமானால்
நாம் தீர்மானிக்கலாம்
இடமென்றும்
வலமென்றும்
நன்மையென்றும்
தீமையென்றும்!

- வே.விநாயகமூர்த்தி

 பறத்தலின் பேராவல்

ழலையர் பள்ளியில் இருந்து வந்த குட்டிப் பெண்
பட்டாம்பூச்சியாகி இங்கும் அங்குமாகத் தேடுகிறாள்
'மம்மு ஒழுங்கா சாப்ட்டியா?’ இது பாட்டி
'மிஸ் சொன்னதெல்லாம் புரிஞ்சதா?’ இது அம்மா
'ஷூ கழட்டிட்டு உள்ள வா!’ இது தாத்தா
பிடிமானத்துக்காக இறகு தேடிக்கொண்டு இருக்க
நழுவி நழுவி ஓடிக்கொண்டு இருந்தாள்
பட்டாம்பூச்சியின் சிறகுகள் தாமரை சிவப்பில் இருந்து
தும்பை நிறத்துக்கு மாறத் தொடங்கிய நொடியில்
'ஹே... மாதவன் கிடைச்சிட்டான்!’
'அம்மா மாதவன் தாச்சி குடிச்சானா?’
'அவனை இன்னிக்கு குளிக்கவெச்சிங்களா?’
என்ற கேள்விகளோடு இறக்கை விரித்து
மாதவனோடு பறக்கத்தொடங்கிவிட்டாள்!

- ச.விஜயலெட்சுமி

சொல்வனம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism