பிரீமியம் ஸ்டோரி

அது ஒரு பெரிய பள்ளிக்கூடம். அதைச் சுற்றிலும் நிறைய மரங்கள். ஒரு மரத்தில் காகம் ஒன்று கூடு கட்டி, தன் குஞ்சுகளோடு வாழ்ந்தது.

அதில் ஒரு குட்டிக் காகம் சிண்டு. அது, அடிக்கடி வகுப்பறை ஜன்னல் அருகே சென்று ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கவனிக்கும். ஒரு நாள் ஆசிரியர் மாணவர்களுக்கு நரியிடம் வடையினை ஏமாந்த காகம் கதையைச் சொன்னார். அதைக் கேட்ட சிண்டு, 'ச்சே! ஒரு நரி நம் இனத்தையே முட்டாளாக்கிவிட்டதே’ என்று எண்ணியது. தாய் காகத்திடம் சென்று சொன்னது

கா...கா... கதையக்கா !

.

##~## தாய், ''அப்படி  எதுவும் நடக்கலைடா...  விஷயமே வேற'' என்றது. ''போம்மா உனக்குத் தெரியலை. மனுசங்க விவரம் தெரிஞ்சவங்க. அதிலும் அவர் ஆசிரியர். அவர் சொல்றது தப்பா இருக்குமா? நம்ம இனத்தை ஏமாத்தின நரிக்கு பாடம் புகட்டறேன்'' என்றபடி பறந்து சென்றது.

காட்டுப் பக்கம் வந்தது. அங்கே ஒரு கிழட்டு நரி உணவு கிடைக்காமல் சோர்வுடன் படுத்திருந்தது. சிண்டு அதை நெருங்கி, ''நீ தானே என் பாட்டியை ஏமாத்தினது?'' என்று கேட்டது.

நரிக்கு எதுவும் புரியவில்லை. ''பாட்டியா? எந்தப் பாட்டி?'' என்று கேட்டது. ''அதான்... மனுசப் பாட்டி கிட்ட வடையை எடுத்த என் பாட்டிகிட்ட பாட்டு  பாடச் சொல்லி வடையைத் தூக்கிட்டுப் போனியே'' என்றது.

''இந்தா... ஏற்கனவே பசியால என் தலை சுத்திட்டு இருக்கு. நீ வேற புரியாமப் பேசி இன்னும் சுத்த வைக்காதே'' என்றது நரி. ''சும்மா நடிக்காதே... என் பாட்டியை ஏமாத்தின உன்னைச் சும்மா விடமாட்டேன்'' என்றவாறு நரியின் தலையில 'சுருக்’ எனக் கொத்தியது. நரி வலி தாங்காமல், ''ஐயோ! அது நான் இல்ல'' என்று கத்திக்கொண்டே ஓடியது.

சில நாட்களுக்குப் பின்...  ஜாடிக்குள் கொஞ்சமாக இருந்தத் தண்ணீரை கற்களைக் கொண்டு நிரப்பி, தாகம் தணித்துக் கொண்ட காகத்தின் கதையைச் சொன்னார் ஆசிரியர்.

கா...கா... கதையக்கா !

காகம் தன் தாயிடம் சென்று, ''அது யாரும்மா?'' என்று கேட்டது. ''மனுசங்க எப்படி  வாழணும், எப்படி வாழக்கூடாது என்பதை அடுத்தவங்களுக்கு எளிமையா உணர்த்த இப்படி விலங்குகள், பறவைகளை வைத்து கற்பனைக் கதைகளைச் சொல்லிப்பாங்க'' என்றது.

சிண்டுவுக்குப் புரிந்தது. 'அடடா! இது தெரியாம வயசான நரியை கஷ்டப் படுத்திட்டோமே’ என வருந்தியது.  நரியிடம் சென்று மன்னிப்புக் கேட்டது.

-எஸ். காவ்யா,
கமலா நிக்கேதன்
மான்டிசோரி பள்ளி, திருச்சி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு