Published:Updated:

8 ஜானர்களில் 8 இ-புக்ஸ் ஃப்ரீ... ரூ.995 மதிப்பிலான இ-புத்தகங்கள் முற்றிலும் இலவசம்!

இ-புத்தகங்கள்
இ-புத்தகங்கள்

லாக்டவுணால் ஏற்பட்ட மிகச் சில நன்மைகளுள் இதுவும் ஒண்ணு.

"ஏதாச்சும் பிடிஎஃப் புக் இருந்தா அனுப்பு..."

வாசிப்புல ஈடுபாடு இருக்குற நட்பு வட்டாரம் மட்டுமில்லாம, புதுசா வாசிக்க ஆரம்பிக்கிற ஃப்ரெண்ட்ஸ்களும் இப்பல்லாம் இப்படி மெசேஜ் தட்டிவிட ஆரம்பிச்சிட்டாங்கல?!

லாக்டவுணால் ஏற்பட்ட மிகச் சில நன்மைகளுள் இதுவும் ஒண்ணு.

மக்கள் வாசிப்பை நேசிக்கத் தொடங்குற, வாசிப்போட அருமையை புரிஞ்சிக்கத் தொடங்குற இந்த நேரத்துல, அவங்களோட வாசிப்பு லெவலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துறதுக்காக இதோ 8 அட்டகாசமான இ-புத்தகங்களை வழங்குகிறது விகடன்.

8 ஜானர்களில் 8 புத்தகங்களும் அடுத்தடுத்த லாக்டவுண் நாள்களை பயனுள்ளபடி கடத்துறது மட்டுமில்லாமல், வாழ்க்கையில ஒரு பாசிட்டிவ் ப்ரேக் கிடைக்கவும் காரணமா இருக்கலாம்.

ரூ.995 மதிப்பிலான இந்த 8 இ-புக்ஸையும் நீங்க வாசிக்க, Vikatan App-ஐ இன்ஸ்டால் பண்ணாலே போதும். இதுல இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா, விகடன் App-ஐ இப்போ இன்ஸ்டால் பண்ணினா, 30 நாள்களுக்கு விகடனோட எல்லா இதழ்களையும் ஃப்ரீயாவே படிக்கலாம்.

அதேதான்... "ஓரே App-ல ரெண்டு லாபம்!"

சரி, இப்போ ஒவ்வொரு புத்தகத்தின் ஸ்பெஷலையும், அதோட லிங்கையும் பார்ப்போம்...

1) பெரியார்

கேலியும் கிண்டலுமாகப் பேசி, மண்டி வியாபாரத்தில் சாமர்த்தியமாக தன்னை விஞ்சுவது கண்டு நெகிழ்ந்த தந்தை வெங்கட்ட நாயக்கர், ஐந்துமாத பெண் குழந்தை இறந்த துக்கத்தால் வாடிய பெரியாரின் மனதைப் புரிந்துகொள்ளாமல், வெற்றிலை எச்சிலால் பலர் முன்னிலையில் முகத்தில் உமிழ்ந்து அவமானப்படுத்தியதையும்... காசியில் கடும் பசியில் நண்பர்களோடு விருந்துக்குச் சென்ற பெரியாரை சாதி பிரச்னை காரணமாக தடுத்து உள்ளே விட மறுக்க, பசியின் கொடுமையால் எச்சில் இலைமுன் அமர்ந்து வயிறு நிறைத்ததையும் படிக்கும்போது பெரியார் என்ற மாமனிதருடன் வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது.

8 ஜானர்களில் 8 இ-புக்ஸ் ஃப்ரீ... ரூ.995 மதிப்பிலான இ-புத்தகங்கள் முற்றிலும் இலவசம்!

ஒரு திரைப்படம் நம் கண்முன் விரிவது போல பெரியாரின் வாழ்க்கை தொடர்பான சம்பவங்கள் பலவற்றை இந்த நூலில் விவரித்துக் காட்டுகிறார் நூலாசிரியர் அஜயன் பாலா.

பெரியார் இ-புக் இலவசமாக இங்கே > https://bit.ly/2xcthCt

2) சுஜாதாட்ஸ்

விகடன் குழுமத்திலிருந்து முன்பு வெளிவந்துகொண்டிருந்த ஜூனியர் போஸ்ட் இதழில், சுஜாதாட்ஸ் என்ற தொடர் வெளிவந்தது. அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும் சம்பவங்களையும் தன் சிந்தனை ஓட்டத்தில் இருந்து எழுத்தாளர் சுஜாதா எழுதிவந்தார். அப்போது, ஜூனியர் போஸ்ட் வாசகர்கள் மத்தியில், அது மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இலக்கியம், அரசியல், சினிமா, ஊடகம் என்று பல்வேறு துறைகளையும் சுஜாதா அந்தக் கட்டுரைகளில் அலசியிருக்கிறார். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்கிற முறையே அந்தக் கட்டுரைகளின் சிறப்பு.

8 ஜானர்களில் 8 இ-புக்ஸ் ஃப்ரீ... ரூ.995 மதிப்பிலான இ-புத்தகங்கள் முற்றிலும் இலவசம்!

நாஸ்டாலஜி ஃபீல் மட்டுமின்றி, சுஜாதாவின் எழுத்து வித்தைகளுடனான சுவாரசிய அனுபவம் வேண்டுவோருக்கு, அவரது 'சுஜாதாட்ஸ்' செம ட்ரீட்!

சுஜாதாட்ஸ் இ-புக் இலவசமாக இங்கே > https://bit.ly/2V1mcxi

3) டூயட் கிளினிக்

அன்பு, கோபம், அழுகை, வெறுப்பு, ஆசை, காதல், காமம்... என மனித உயிர்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகள் ஏராளம். இதில், காதலும் காமமும் தவிர்க்க முடியாதது என்பது எவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் பாலுணர்வு, இளமைப் பருவத்தில் தொடங்கி முதிய பருவம் வரையில் வாழ்க்கையில் பல வகையில் சுக துக்கங்களை அளிக்கவல்லது. விபரீதமான வித்தியாசமான ஆசைகளை ஏற்படுத்தும் இந்தப் பாலுணர்வை, ஒவ்வொருவரும் எப்படி கையாள வேண்டும், தாம்பத்திய வாழ்வில் துணையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், உடலுறவின்போது ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்ன..?

8 ஜானர்களில் 8 இ-புக்ஸ் ஃப்ரீ... ரூ.995 மதிப்பிலான இ-புத்தகங்கள் முற்றிலும் இலவசம்!

இப்படி நம் மனதில் எழும் பல கேள்விகளுக்கான பதில்களை, அசத்தலான உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர் டாக்டர் டி.நாராயண ரெட்டி. இந்த 'டூயட் கிளினிக்' நூல்... தாம்பத்தியத் தகவல்கள், செக்ஸ் பற்றிய ஆழமான கருத்துகளை மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ள உதவும்.

டூயட் கிளினிக் இ-புக் இலவசமாக இங்கே > https://bit.ly/34rJXlq

4) தேவதைக் கதைகள்

கதைகள் மன அழுத்தத்தைக் குறைப்பவை, மகிழ்ச்சியை, புத்துணர்வைக் கொடுக்கக் கூடியவை. கதை கேட்டு வளர்ந்த சமூகம் மிகவும் விழிப்பு உணர்வு பெற்றதாக இருந்தது. சிறுவர்கள் மட்டுமல்ல கதைகளால் களிக்கும் பெரியோர்களும் உண்டு... கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு வகைகளில் சொல்லப்பட்டு வந்தன. இன்றுவரை கதைகளில் ஆர்வமில்லாதவர்கள் இருக்கவே முடியாது.

8 ஜானர்களில் 8 இ-புக்ஸ் ஃப்ரீ... ரூ.995 மதிப்பிலான இ-புத்தகங்கள் முற்றிலும் இலவசம்!

புராணக் கதைகள், ராஜாக்களின் கதைகள், நீதிக் கதைகள், சாகசக் கதைகள், புனைவுக் கதைகள்... என எல்லா விதமான கதைகளை எல்லோரும் கேட்டிருப்போம். அந்த வரிசையில் இவை தேவதைக் கதைகள். குழந்தைகள் தேவதை போன்றவர்கள், அந்த தேவதைகளை உற்சாகப்படுத்தும், உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களை உருவாக்கும் கே.முரளிதரன் எழுதியுள்ள இந்த தேவதைக் கதைகள்!

தேவதைக் கதைகள் இ-புக் இலவசமாக இங்கே > https://bit.ly/2ySq4bA

5) ஏழாம் சுவை

பாரம்பரிய வாழ்வியலையும், இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு உணவு விஷயத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லன எல்லாவற்றையும் சொல்லும் மகத்தான நூல் இது. ஒரு மருத்துவராக மட்டும் அல்லாமல், இன்றைய சூழல் மீது அக்கறை கொண்டவராக, இளைய தலைமுறை மீது மாறாத நம்பிக்கைக் கொண்டவராக சிவராமன் எழுதி இருக்கும் இந்த நூல், உணவு தொடங்கி உள்ளம் வரையிலான பலவிதத் தெளிவுகளையும் நமக்குள் ஏற்படுத்தும்.

8 ஜானர்களில் 8 இ-புக்ஸ் ஃப்ரீ... ரூ.995 மதிப்பிலான இ-புத்தகங்கள் முற்றிலும் இலவசம்!

பருவநிலை, பாதிப்பு, தேவை ஆகியவற்றைப் பட்டியலிட்டு அதற்குத் தகுந்த உணவுகளை இந்த நூலில் வகைப்படுத்திக் காட்டுகிறார் மருத்துவர் சிவராமன்.

ஏழாம் சுவை இ-புக் இலவசமாக இங்கே > https://bit.ly/3cak8Ja

6) நெடுஞ்சாலை வாழ்க்கை

கனரக வாகனங்களை ஓட்டிச்செல்லும் லாரி ஓட்டுநர்கள் இரும்புக் குதிரைகள் என்றாலும் ஈரம் குறையாத மனசுடைய மனிதர்களாகவே வாழ்கிறார்கள். பயணமே இவர்களுக்கு வாழ்க்கையாகிப்போனது. நெடுஞ்சாலைப் பயணங்களில் லாரி ஓட்டுநர்கள் படும் இன்னல்களை இந்த நூல் எடுத்துரைக்கிறது. அவற்றில் ஒன்று - கொள்ளை; விதவிதமாக பணம் பறிப்பவர்கள் மத்தியில் பணத்தைப் பிரித்து ஆங்காங்கே ஒளித்துவைத்து தன்னையும் தன் உடைமைகளையும் காப்பாற்றுவதற்கே அன்றாடம் போராடுகிறார்கள். விபத்து, வழக்கு, போலீஸ், கொலை, கொள்ளை, நோய் என அனைத்தையும் தாண்டி இந்தத் தொழிலை இவர்கள் நேசிக்கிறார்கள்.

8 ஜானர்களில் 8 இ-புக்ஸ் ஃப்ரீ... ரூ.995 மதிப்பிலான இ-புத்தகங்கள் முற்றிலும் இலவசம்!

கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகள் இப்பணியில் தங்களது ஈடுபாட்டைச் செலுத்தியிருப்பவர்களும் உண்டு. லாரி ஓட்டுநர்கள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை விலக்கி, அவர்களின் உண்மையான நிலையை அவர்களுடன் பயணித்துப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் கா.பாலமுருகன். உங்களுக்கு ஒரு சூப்பரான ரோடு மூவி பார்த்த ஃபீல் நிச்சயம்.

நெடுஞ்சாலை வாழ்க்கை இ-புக் இலவசமாக இங்கே > https://bit.ly/3ce5QYd

7) ஷேர் மார்க்கெட் A to Z

பங்குச் சந்தையில் எந்த வகையான பங்குகளை வாங்கலாம், ஒரு பங்கை வாங்கும்முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை, ஒரு பங்கு எந்த நிலையில் இருக்கும்போது வாங்க விற்க வேண்டும், பங்குச் சந்தையில் 'காளை' மற்றும் 'கரடி' நிலைகளை அறியும் வழிமுறை, இதில் நிபுணராக நாம் மேற்கொள்ள வேண்டிய யுக்தி... போன்ற பல்வேறு தகவல்களை நடைமுறை உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர் சொக்கலிங்கம் பழனியப்பன்.

8 ஜானர்களில் 8 இ-புக்ஸ் ஃப்ரீ... ரூ.995 மதிப்பிலான இ-புத்தகங்கள் முற்றிலும் இலவசம்!

நாணயம் விகடனில் 'பங்குச் சந்தை ஆத்திசூடி' என்ற தலைப்பில் வெளிவந்த தகவல் தொகுப்புதான் இந்த நூல். 'வீட்டுப் பாடம்' என்ற தலைப்பில், பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான சில பயிற்சி முறைகளை அத்தியாயம் தோறும் சொல்லி இருப்பது, இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு. மொத்தத்தில், சாமானிய மக்களும் 'ஷேர் மார்க்கெட்' தொடர்பான அடிப்படை அறிவைப் பெறவேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம்.

ஷேர் மார்க்கெட் A to Z இ-புக் இலவசமாக இங்கே > https://bit.ly/3egcHSz

8) தமிழகத்து பிசினஸ்மேன்கள்

வெற்றி என்பது தோல்வி கற்றுத்தந்தது. தோல்விகளில் துவளாமல் தமது விடாமுயற்சியால் பிசினஸில் வெற்றிபெற்று புகழ்பெற்றவர்கள் ஏராளம். பிசினஸ் செய்வதற்கான குணங்களையும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீராத தாகத்தையும் உடையவர்களால் மட்டுமே பிசினஸில் வெற்றிபெற முடிகிறது. போட்டிகளும் புதுமைகளும் பெருகிக்கொண்டே இருக்கும் இந்தக் காலத்தில் புதியவற்றைக் கற்றுக்கொண்டே இருப்பது, பிசினஸ் செய்பவர்களுக்கு முக்கியமானது. ஒவ்வொரு நிமிடமும் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைப் புதுப்பித்துக்கொண்டால்தான் அவர்களின் பிசினஸில் தொடர் வெற்றிபெற முடியும்.

8 ஜானர்களில் 8 இ-புக்ஸ் ஃப்ரீ... ரூ.995 மதிப்பிலான இ-புத்தகங்கள் முற்றிலும் இலவசம்!

இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ்பெற்றுத் திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தாங்கள் தொடங்கிய தொழிலில் எப்படி வெற்றிபெற்றார்கள் என்பதையும் அந்தத் தொழில் சாம்ராஜ்ஜியம் தலைமுறைகளாகத் தொடர்வது பற்றியும் கூறும் நூல் இது!

தமிழகத்து பிசினஸ்மேன்கள் இ-புக் இலவசமாக இங்கே > https://bit.ly/2JYf1Qs

எஞ்சாய் பண்ணுங்க... உங்க உறவுகளுக்கும் ஷேர் பண்ணி ஹார்ட்டின் லைக்ஸ் அள்ளுங்க!

அடுத்த கட்டுரைக்கு