Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

Published:Updated:

தொலைந்தது

சொல்வனம்

இரண்டு வருடங்களின் முன்
தொலைந்துபோன
ஒரு ஜோடி
செருப்புகள்
அலமாரியை
நகர்த்தியபோது
மீண்டன.
அவை தொலைந்த தினம்
ஒரு மழை நாள்
எங்கோ எதற்காகவோ
அவசரமாகப் புறப்பட்டு
பின் தடைப்பட்ட பயணம்
மனைவியுடன் நேர்ந்த சண்டை
குழந்தைகளிடம் நடத்திய விசாரணை
நாய்க் குட்டி மீது ஏற்பட்ட சந்தேகம்
வீடு முழுவதும் குடும்பமாகத்
நடத்திய தேடுதல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு வருடங்களின் முன்
செருப்புகளோடு சேர்த்து
ஒரு பகற்பொழுதையும்
அலமாரியின் அடியில்
ஒளித்துவைத்தவருக்கு
அவை மீண்ட இப்பொழுதில்
நன்றி சொல்கிறது மனம்!

- பாணன்

நாளை என்பது...

சொல்வனம்

ராத்திரியோடு ரயிலேறிவிட்டார் சித்தப்பா
யாரோடும் பேசிக்கொள்ளவில்லை
ஒன்றிரண்டு சட்டைகள்
சேர்த்துவைத்த பணம்
வாங்கிய கூஜாவோடு போய்விட்டார்
சாமியாராகப் போகிறார் என்றும்
வாழ்க்கை வெறுத்துப்போய்
விரக்தியில் சாகப்போகிறார் என்றும் பேசினார்கள்
அம்மாவும் அப்பாவும்
கேட்டவருக்கெல்லாம் பதிலளித்து ஓய்ந்தார்கள்
யாருக்கும் தெரியாத
சித்தப்பாவின் அந்திம ரகசியம்
எனக்குத் தெரிந்திருந்தது
கூடவே
புனிதாவுக்கும் தெரிந்திருக்கும்
 

##~##

நாளை அவளுக்குத் திருமணம்
சித்தப்பாவின் நாளையென்பது
புனிதாவின் ராஜ்ஜியத்திலிருந்து விடுபடப்போவது
புனிதாவின் நாளையென்பது
கொஞ்சம் அழுகையும் போலிச் சிரிப்புமானது
என் அம்மாவின் நாளையென்பது
அவருக்கு வடிக்க வேண்டியிராத
சாதம் பற்றியது
ஊராரின் நாளையென்பது
அவரின் மரணச் செய்தி எதிர்பார்ப்பது
என் நாளையென்பது
புனிதாவின் கல்யாணம் நின்றுபோய்
சித்தப்பா அவளுக்காக வந்து
இருவரும் மாலை மாற்றிக்கொள்கிற
பிராயத்தவனின் நியாயமான கற்பனை!

- ப.ராமச்சந்திரன்

பிரார்த்தனை

சொல்வனம்

ம்மா எப்போதுமே
பூஜை அறையில்
பிரார்த்தனையிலேயே
இருப்பாள்
பிறந்த நாட்களில்
பரீட்சை தினங்களில்
வேலை கிடைத்தபோது
தம்பி நோயுற்றபோது
அக்காவின் திருமணத்தின்போது
பேரக் குழந்தைகள் பிறந்தபோது
துன்பங்களோ இன்பங்களோ
எவை வந்தபோதும்
அம்மாவின் ஒரே பதில்
பிரார்த்தனை
அன்று அம்மாவை
அறுவை சிகிச்சைக்காக
வைத்திய சாலையில்
விட்டுவிட்டுத்
திரும்பியபோது
பூஜை அறையில்
அம்மா இல்லை
பிரார்த்தனை மட்டும் இருந்தது!    

- பாணன்

புரிதல்

பிறந்த பின்
ஆண்டுகள்
ஓடிய பின்னர்
புரிந்துகொண்டேன்
பிறந்தேன் என்பதை

சொல்வனம்

நிகழ்தலில் இல்லை
நிகழ்வது என்பது
புரிதலின்போதே
நிகழ்தல் அறிந்தேன்

காதல் செய்ததோ
இருபது வயதில்
காதல் உணர்ந்ததோ
ஐம்பது வயதில்

வாழ்தலில் இல்லை
வாழ்க்கை என்பதும்
வாழ்தல் முடிந்த பின்
வாழ்க்கை உணர்தலும்
வாழ்க்கையின் முழுமை
என்பதை அறிந்தேன்

எனில்,
சாதல் அடைந்த பின்
சாதலே இன்றி
இருப்பதும் நிஜம் எனில்
இறந்திட மாட்டேன்!

- பா.கிருஷ்ணன்

சொல்வனம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism