ந  ம்மிடம் கதை சொல்ல, சுட்டிகள் இவ்வளவு ஆர்வமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. அடுக்கடுக்காகச் சொல்லி அசத்திவிட்டார்கள். இதோ அந்தக் கதைகள் உங்களுக்காக...

முதலில் வருபவர்  ஹரிஹர விக்னேஷ். இவர் ஈரோடு, இந்து கல்வி நிலையத்தில் 8-ம் வகுப்பு படிப்பவர்.

ராமு, கந்தன் இருவரும் மரம் வெட்டிகள். இருவரும் காட்டுக்கு மரம் வெட்டச் சென்றனர்.

ராமு கடினமாக உழைப்பவன். கந்தன் புத்திசாலி. ராமு, கந்தனிடம் சவால் விட்டான், ‘‘இன்று நான்தான் அதிகமாக வெட்டுவேன்...’’

கந்தனோ ‘‘நான்தான் அதிகமாக வெட்டுவேன்’’ என்றான்.

இருவரும் மரங்களை வெட்ட ஆரம்பித்தார்கள். ராமு, நிறுத்தாமல் மரங்களை வெட்டிக்கொண்டே இருந்தான். கந்தன் இடையிடையே சற்று ஓய்வு எடுத்துக் கொண்டும், கோடாரியைத் தீட்டியபடியும் மரங்களை வெட்டினான்.

இறுதியில் கந்தன்தான் அதிக மரங்களை வெட்டியிருந்தான். ராமு தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.

‘‘நான் விவசாயி கதை சொல்றேன்’’ என்று ஆரம்பித்த கவிப்பிரியா, பவானி, எஸ்.எஸ்.எம். பள்ளியில் 6-ம் வகுப்பு படிப்பவர்.

அருளப்பன் என்ற விவசாயி நிறைய ஆடுகளை வளர்த்து வந்தான். அவனிடம் பெரிய கிடா ஒன்று வளர்ந்து வந்தது. ஒரு சமயம் அந்தக் கிடா மேய்ச்சலுக்குப் போனது. மேயும் கவனத்தில் போய் கொடிகளுக்குள் சிக்கிக்கொண்டது கிடா. மாலை நேரமாகியும் அந்தக் கிடா அதிலிருந்து மீள முடியாமல் போராடியது.

அப்போது அந்த வழியில் நரிகள் வந்தன. கிடாவைப் பார்த்ததும், ‘‘ஆகா... இன்று நல்ல விருந்து’’ என்று எக்காளம் இட்டன.

‘என்ன செய்யலாம்?’ என்று தவித்த கிடாவிற்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே நரிகளைப் பார்த்து, ‘‘உங்களைப் பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது. அநியாயமாக இங்கு வந்து சிக்கிக் கொண்டீர்களே...’’ என்று சொல்லிச் சிரித்தது.

நரிகள் குழப்பமாகப் பார்க்க, ‘‘இந்தப் பகுதியில் குள்ள நரிகளின் நடமாட்டம் அதிகமாகி விட்டது. இங்கு ஒரு ஆட்டைக் கட்டி வைத்தால் கண்டிப்பாக நரிகள் வரும், அப்போது அவற்றை வேட்டையாடிவிடலாம் என்று இங்குள்ள விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர். நீங்களே வந்து வலையில் விழுந்து விட்டீர்கள்’’ என்று கிடா சொல்லி முடிப்பதற்குள்ளேயே பின்னங்கால் பிடறியில் பட நரிகள் ஓட்டம் எடுத்தன.

ஆட்டைக் காணோம் என்று தேடி வந்த அருளப்பன் கிடாவை மீட்டுச் சென்றான்.

‘‘எனக்கு நரிக்கதைன்னா ரொம்பப் பிடிக்கும். நான் ஒண்ணு சொல்லட்டுமா..?’’ என்று கொஞ்சும் குரலில் கேட்ட வர்ஷா, மேட்டூர் செயின்ட் மேரீஸ் மாணவி.

நரி ஒன்று காட்டின் வழியே சென்று கொண்டிருந்தது. அப்போது அதற்கு தாகம் எடுத்தது.

ஒரு கிணற்றைக் கண்ட நரி அந்தக் கிணற்றில் உள்ள கயிற்றில் கட்டப்பட்டுள்ள வாளியில் ஏறிக்கொண்டது. வாளி கிணற்றுக்குள் சென்றுவிட வேண்டும் அளவுக்கு தண்ணீர் அருந்தியது. ஆனால் எப்படி மேலே வருவது என்று அதற்குத் தெரியவில்லை.

அப்போது அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த ஓநாயைக் கூப்பிட்டது. ‘‘ஓநாயாரே மேலே என்ன செய்கிறீர்கள்? இங்கு சொர்க்கமே தெரிகிறது. எத்தனை வகையான இறைச்சிகள், பானங்கள் அட அட அடா..!’’ என்று ஆசை காட்டியது.

‘‘ஆகா சொர்க்கமா!’’ என்று ஆசைப்பட்ட ஓநாய், கயிற்றின் இன்னொரு முனையில் கட்டப்பட்டு இருந்த வாளியில் ஏறி உட்கார்ந்துகொண்டது.

ஓநாய் உள்ள வாளி கீழே செல்ல நரியின் வாளி மேலே சென்றது. நரி தாவிக் குதித்து ஓடி விட்டது.

ஓநாயோ கிணற்றுக்குள் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தது.

கிணற்றைப் பற்றிய கதையைத் தொடர்ந்து குளத்தைப் பற்றிச் சொல்ல வருகிறார் கோவை, நேஷனல் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் ஹரிணி.

டிங்கு என்ற சின்ன முதலையும், முங்கு என்ற பெரிய முதலையும் ஒரு குளத்தில் வாழ்ந்து வந்ததாம். மிங்குவிற்கு எப்போதுமே கெட்ட எண்ணம்தான். அதற்கு டிங்குவைக் கண்டால் எப்போதுமே பிடிக்காது.

டிங்கு ஒரு சமயம் அழகான மணல் வீடு கட்டி வைத்திருந்ததாம். மிங்கு வந்து அதை இடித்து தள்ளி விட்டதாம். டிங்குவும் மிங்குவிடம் சண்டை பிடிக்காமல் சென்று விட்டதாம்.

மற்றொரு சமயம் டிங்கு புதுச் சட்டை அணிந்து வந்ததாம், மிங்கு அதன் மேல் சேற்றை வாரி வீசி விட்டதாம். டிங்கு சோகத்துடன் அமைதியாக சென்று விட்டதாம்.

இன்னொரு நாள் டிங்கு, தன் வீட்டின் முன்பு ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாம். மிங்கு அதைப் பிடுங்கி எறிந்த போதும் அது எதுவுமே பேசவில்லையாம்.

ஒரு சமயம் மிங்கு காய்ச்சல் வந்து மயக்கத்தால் கீழே விழுந்துவிட்டதாம். உடனே டிங்கு ஓடிச் சென்று அதற்குத் தண்ணீர் கொடுத்து உதவியதாம்.

அதிலிருந்து மிங்கு திருந்தி, இருவரும் தற்போது நண்பர்களாகிவிட்டார்களாம்.

அடுத்த கதைசொல்லி, சுஜிதா. அன்னூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார்

ஒரு ஊரில் சங்கர், லட்சுமி என்ற கணவன் மனைவி வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு அழகான மகன் அவன் பெயர் தினேஷ்.

அவர்கள் வீட்டில் ஒரு கீரியையும் செல்லமாக வளர்த்து வந்தனர். ஒரு சமயம் சங்கர் வேலைக்குச் சென்றுவிட்டான். லட்சுமியும் விறகு பொறுக்கச் சென்றுவிட்டாள்.

வீட்டில் தினேஷ் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டுக்குள் ஒரு பாம்பு புகுந்து விட்டது.

அதைப் பார்த்து விட்ட கீரி அந்த பாம்பு தூங்கிக் கொண்டு இருக்கும் தினேஷைக் கடித்து விடாமல் இருக்க அதனிடம் சண்டை போட்டு அதைக் கொன்று விட்டது. வாயில் ரத்தத்துடன் வாசலில் காத்துக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த லட்சுமி கீரியின் வாயில் உள்ள ரத்தத்தை பார்த்து விட்டு அது, குழந்தை தினேஷைத்தான் கடித்துக் கொன்றுவிட்டது என்று நினைத்து விறகுக் கட்டையாலேயே கீரியை அடித்துக் கொன்று விட்டாள்.

பிறகு உள்ளே வந்து பார்த்த போதுதான் தெரிந்தது குழந்தை தினேஷை காப்பாற்ற பாம்பை கடித்துக் கொன்றுவிட்டது என்று. அநியாயமாக கீரியைக் கொன்றதற்காக லட்சுமி மிகவும் வருத்தப்பட்டாள்.

படங்கள்: ச.டிஸ்னி
ஓவியங்கள்: காலேப்