நட்பு வட்டம்

எதிர் வீட்டில் வசிப்பவர் யாரென்று
வருடங்களில் இன்னமும் தெரியாது
நண்பர்களாகச் சாப்பிடப் போன இடத்தில்
அவரவர் தேநீருக்கு
அவரவரே காசு தருகிறோம்
எப்போதும் தென்படுகிற வாட்ச்மேன்
சிநேகமாகச் சிரித்தால்
காசுக்குத்தானென்று எண்ணி
அப்படியே பழக்கப்படுத்துகிறோம்
அப்பாவுக்கு ஆனதைப்போல
ரயிலில் சந்தித்த நண்பரென்று
யாரும் திருமண அழைப்பிதழோடு
வீட்டுக்கு வந்தது கிடையாது
நித்தம் பார்க்கிற மளிகைக்காரனிடம்
ரெண்டு ரூபாய் சில்லறை மீதத்தை
நான்கு புளிப்பு மிட்டாய்களோடு
முடித்துக்கொள்கிறோம் கவனமாக
ஃபேஸ்புக்கில் மட்டும் என்னவோ
Hiew hui tang உட்பட
நான்கு நிலுவைகளையும் சேர்த்து
இருநூற்றி எழுபது நண்பர்கள்!

- ப.ராமச்சந்திரன்

கடற்கரை மணல்

உனக்குப் பின் நானோ
எனக்குப் பின் நீயோ
சென்றிருக்கலாம் - இப்படி
இருவரும் ஒரே நேரத்தில்
எதிரெதிரே.

நொடி நேரம்
கண்ணில் பட்டு மறையும்
நிகழ்வுபோல்
கடந்து போகிறோம்
ஒன்றும் பரிமாறிக்கொள்ளாமல்.

சொற்களோ
கடற்கரை மணலைப்போல்
நம்முள்!

- சு.முரளி

மடியில் கனம்?

அரசு மகளிர்
மேல் நிலைப் பள்ளியில்
ஆயிரம் மாணவிகளுக்கு
மூன்று கழிவறைகள்
முந்நூறு லேப்-டாப்!

- எஸ்.தளவாய்சாமி

மழை இரவு

பிடிவாதம் மிகுந்த
பூனைக் குட்டி
இடைவிடாத மழை இரவில்...

எங்கோ பதுங்கியபடி
குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது

இந்த இரவை...
இந்த மழையை...
இந்த மனிதர்களை!

- இளங்கோ

இலைக் கற்றை!

எங்கே மேய்வது
எவ்வளவு மேய்வது
என்பதை
ஆடுகள் தீர்மானிப்பதில்லை.

நேற்று மதியம்
இலையைத் தின்ற ஆடுகள்
இன்று மதியம்
இலையில் இருக்கின்றன.

மேய்ப்பவர்கள்
எப்போதும் தப்பிவிடுகிறார்கள்!

- எஸ்.தளவாய்சாமி

உதிரும் கண்கள்

பள்ளி வாகனத்தில் ஏறியமர்ந்து
கையசைத்துக்கொண்டே செல்கையில்
அம்மாவின் ஈரக் கண்கள்
உதிரத் தொடங்குகின்றன.
வழியெங்கும் வகுப்பறை வரை
உதிர்ந்துகிடக்கும்
அம்மாவின் கண்களை
மாலையில் வீடு திரும்புகையில்
அள்ளி வருகிறாள்
சிறுமி!

- உழவன்

நட்பு வட்டம்

எதிர் வீட்டில் வசிப்பவர் யாரென்று
வருடங்களில் இன்னமும் தெரியாது
நண்பர்களாகச் சாப்பிடப் போன இடத்தில்
அவரவர் தேநீருக்கு
அவரவரே காசு தருகிறோம்
எப்போதும் தென்படுகிற வாட்ச்மேன்
சிநேகமாகச் சிரித்தால்
காசுக்குத்தானென்று எண்ணி
அப்படியே பழக்கப்படுத்துகிறோம்
அப்பாவுக்கு ஆனதைப்போல
ரயிலில் சந்தித்த நண்பரென்று
யாரும் திருமண அழைப்பிதழோடு
வீட்டுக்கு வந்தது கிடையாது
நித்தம் பார்க்கிற மளிகைக்காரனிடம்
ரெண்டு ரூபாய் சில்லறை மீதத்தை
நான்கு புளிப்பு மிட்டாய்களோடு
முடித்துக்கொள்கிறோம் கவனமாக
ஃபேஸ்புக்கில் மட்டும் என்னவோ
Hiew hui tang உட்பட
நான்கு நிலுவைகளையும் சேர்த்து
இருநூற்றி எழுபது நண்பர்கள்!

- ப.ராமச்சந்திரன்

கடற்கரை மணல்

உனக்குப் பின் நானோ
எனக்குப் பின் நீயோ
சென்றிருக்கலாம் - இப்படி
இருவரும் ஒரே நேரத்தில்
எதிரெதிரே.

நொடி நேரம்
கண்ணில் பட்டு மறையும்
நிகழ்வுபோல்
கடந்து போகிறோம்
ஒன்றும் பரிமாறிக்கொள்ளாமல்.

சொற்களோ
கடற்கரை மணலைப்போல்
நம்முள்!

- சு.முரளி

மடியில் கனம்?

அரசு மகளிர்
மேல் நிலைப் பள்ளியில்
ஆயிரம் மாணவிகளுக்கு
மூன்று கழிவறைகள்
முந்நூறு லேப்-டாப்!

- எஸ்.தளவாய்சாமி

மழை இரவு

பிடிவாதம் மிகுந்த
பூனைக் குட்டி
இடைவிடாத மழை இரவில்...

எங்கோ பதுங்கியபடி
குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது

இந்த இரவை...
இந்த மழையை...
இந்த மனிதர்களை!

- இளங்கோ

இலைக் கற்றை!

எங்கே மேய்வது
எவ்வளவு மேய்வது
என்பதை
ஆடுகள் தீர்மானிப்பதில்லை.

நேற்று மதியம்
இலையைத் தின்ற ஆடுகள்
இன்று மதியம்
இலையில் இருக்கின்றன.

மேய்ப்பவர்கள்
எப்போதும் தப்பிவிடுகிறார்கள்!

- எஸ்.தளவாய்சாமி

உதிரும் கண்கள்

பள்ளி வாகனத்தில் ஏறியமர்ந்து
கையசைத்துக்கொண்டே செல்கையில்
அம்மாவின் ஈரக் கண்கள்
உதிரத் தொடங்குகின்றன.
வழியெங்கும் வகுப்பறை வரை
உதிர்ந்துகிடக்கும்
அம்மாவின் கண்களை
மாலையில் வீடு திரும்புகையில்
அள்ளி வருகிறாள்
சிறுமி!

- உழவன்