Published:Updated:

தங்கத் தமிழ் - 4

தமிழுரை - அறிவுமதி, எழிலுரை - டிராட்ஸ்கி மருது

தங்கத் தமிழ் - 4

தமிழுரை - அறிவுமதி, எழிலுரை - டிராட்ஸ்கி மருது

Published:Updated:
தங்கத் தமிழ் - 4

புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே

தங்கத் தமிழ் - 4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

(நெய்தல்)   - உலோச்சனார், நற்றிணை - 11

தமிழ் நிலப்பரப்பில்
அன்றைய பெருவழிச் சாலைகளில்
கடற்கரையின்
ஈரமணல்வெளியே இன்றியமையாதது.

குறிஞ்சி, முல்லை, மருத நிலத்
தலைவர்களைவிடவும்
நெய்தல் நிலத் தலைவர்களே
தேர்களை
மிகுதியாகப் பயன்படுத்தியவர்கள்.

##~##

அதோ அந்தத் தேரும்
அத்தகைய தேர்களில் ஒன்றுதான்.

தன் தலைவியை மணந்துகொள்ளும்
மனவிருப்போடு வருகிற தேர்.

ஆனால், அந்த ஈரமணல் நெடுக
விளையாடிக்கொண்டிருக்கும்

ஆயிரமாயிரம் நண்டுகளில்
ஒரு நண்டைக்கூட தன் தேரின் உருளைகள்
நசுக்கிவிடாதபடிக்கு
மிகுந்த விழிப்போடு
ஓட்ட வேண்டும் என்பது தலைவனின் விருப்பம்.

அவன் விருப்பத்திற்கேற்பவே ஓட்டும் பாகனுக்கு
நிலா வெளிச்சமும்
சேர்ந்து ஒத்துழைக்கிறது.

நண்டுகள்கூட நசுங்கிவிடக் கூடாது.

இத்தகைய இரக்கம் காட்டியவர்கள்தாம் அன்றைய
நெய்தல் தமிழர்கள்!

இன்று இரக்கமற்று
எவன் எவனோ சுடச்சுடச் செத்து
மிதப்பவர்களாக...

தமிழ் வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism