Published:Updated:

உனக்கு முன்... - கவிதை

இளம்பிறை, ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையராஜா

உனக்கு முன்... - கவிதை
##~##

கரக் கட்டடங்களுக்கிடையே
வளைந்து நெளிந்து
கிளைகள் குறுக்கி நிற்கும்
பெரும் மரத்தின் வேதனையுடன்
ஒடுங்கி நிற்கும்
என் நேசத்தின் நிச்சயமின்மைகள்
பூத்து உதிர்கின்றன கண்களில்.
பகலை படல்படலாக
நகர்த்திக்கொண்டிருக்கிறது பின் அந்தி
முக்கால் நிலவுக்கு உறுதுணையாக
முளைத்துக்கொண்டிருக்கின்றன விண்மீன்கள்.
தெரியாத கம்பங்களில்
எரியும் விளக்குகளாக
கடலின் உச்சியிலிருந்து
வருவது போலிருக்கின்றன வானூர்திகள்.
கடல் பார்க்க வந்த நான்
வான் பார்த்திருக்கிறேன்
ஓரக்கடல்மீது
ஒரு ஜோடி கொக்குகளின் உல்லாசம்
தூரத்தில் போய்க்கொண்டிருக்கிறாய் நீ
சோர்ந்துவிட மாட்டேன்
மென்மேலும் பெருக்கிக்கொண்டிருக்கிறேன்
என் இறக்கைகளின் வலுவை!
உனக்கு முன் அங்கிருப்பேன்
என்னை விட்டுச்செல்ல முடியாது உன்னால்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz