அன்புள்ள கமாண்டர் கோபிக்கு...

உன் ஈரமான விரல்கள் இந்தக் கடிதத்தைத் தொடும் போது, இந்த உலகில் ஒரு புதிய மரம் தோன்றும் என்று நம்புகிறேன். உனக்கு என்னைத் தெரியுதா? எல்லோருக்கும் நான் ஒரு பூவரசு மரம். ஆனால், உனக்கும் உன் நண்பர்களுக்கும் நான் யானை மரம். உனக்கு நான் கடிதம் எழுதுவது ஆச்சரியமாக இருக்கலாம். இந்தக் கவலை யான நேரத்தில் உன்னிடம் சில செய்திகளைச் சொல்ல விரும்புகிறேன்.

ஒரு காலத்தில் நானும் என்னைப் போன்ற பலரும் சேர்ந்து நரசிங்கக் காடாக இருந்தோம். எண்ணற்ற குருவிகளும் விலங்குகளும் எங்களோடு வாழ்ந்தன. ஒரு நாள், மனிதர்கள் எங்கள் காட்டுக்கு வந்தனர். 'இவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ?’ என்று பயந்தோம். என் அருகிலே ஒரு குடிசை கட்டினார்கள். அதுதான் உங்கள் பள்ளிக்கூடம்.

உன்னைப் போன்ற குழந்தைகள் துள்ளலுடன் படிக்க வந்ததைப் பார்த்து நாங்கள் மகிழ்ந்தோம். நீங்கள் மழலைக் குரலில் படிப்பதும், பாடுவதும் எங்களுக்கு சந்தோஷத்தை அளித்தது. ஓய்வு நேரத்தில் எங்களோடு விளையாடுவீர்கள். ஒரு நாள், நீ என் கிளைமீது ஏறிக்கொண்டு ஆடினாய். நானும் ஆடினேன். ''டேய் இங்கே பாருங்கடா யானை மரம்'' என்று ஆச்சர்யத்தோடு கூவினாய். உன் நண்பர்களும் ஏறி ஆட ஆரம்பித்தார்கள். அன்று முதல் நான் யானை மரமாகிவிட்டேன். என் மீது ஏறி, நீங்கள் இந்தப் பாட்டைப் பாடுவீர்கள்...

''யானை யானை அழகர் யானை!

ஆயிரம் பேரைச் சுமக்கும் யானை!

ஊருக்கே உதவும் யானை

ஊர்வலம் வருது ஓடி வாங்கடா!''’

இதைக் கேட்கும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும் தெரியுமா? உங்கள் பெற்றோர் களும், நீங்கள் விளையாடுவதைப் பார்த்து ரசிப்பார்கள். என் மீது இருக்கும்போது உங்களுக்கு நிறைய கற்பனைகள் வருவதாகக் கூறுவார் கள். உன் நண்பர் சித்திக்கின் பாட்டி நதீரா பானு, என் காலடியில் மிட்டாய் கடை வைத்திருந்தார். உங்கள் காசுக்கு மிட்டாய் தருவாள், இலவசமாய் கதைகள் சொல்வாள். நாங்களும் அந்தக் கதைகளை ரசிப்போம்.

உனக்கு ஞாபகம் இருக்கா கோபி... ஒரு முறை ஜப்பான் நாட்டில் இருந்து நம் பள்ளிக்கு தாஜீமா என்ற எழுத்தாளர் வந்தார். சிற்றூரில் பிறந்த அவர், டோக்கியோ நகரத்தில் படித்தாராம். அவருக்கு நகர வாழ்க்கை ரொம்பப் பிடித்து விட்டதாம். அதனால், டோக்கியோவில் வசிக்கப் போவதாக அவருடைய அப்பாவிடம் சொன்னாராம். விவசாயியான அவரது அப்பா, ''நீ எங்கு வேண்டுமானாலும் போ. ஆனால், போகும் முன் ஒரு மரத்தை நட்டுவிடு'' என்று. அதற்கு தாஜீமா, ''ஜப்பானில் ஒரு மரம் முழுமையாக வளர 100 வருடம் ஆகும். அது வளர்வதற்குள் நான் இறந்துவிடுவேன். நான் பார்க்க முடியாத மரத்தை நடுவதால் என்ன பயன்?'' எனக் கேட்டார். ''அந்த மரம் உனக்கு இல்லையப்பா... உன் மகன், மகள், பேரன், பேத்திகளுக்கு'' என்று சொன்னாராம். அப்பாவின் வார்த்தைகள் அவரை மரங்களைப் பற்றி எழுதும் எழுத்தாளராக மாற்றியதாம்.

''இந்தியாவில் ஒரு மரம் சில வருடத்திலேயே வளர்ந்துவிடும். இதை ஏன் இந்தியர்கள் புரிந்துகொள்ளவில்லை'' என்று தாஜீமா ஆச்சரியத்துடன் கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.

நரசிங்கக்காடு இப்போது இல்லை. இங்கே நானும், இன்னும் சில மரங்களும் மட்டுமே மீதம் இருக்கிறோம். நேற்று நம் பள்ளிக்கு வந்திருந்த அதிகாரியிடம் ஒரு கரைவேட்டிக்காரர் பேசிக் கொண்டு வந்தார். அவரைப் பார்க்கவே பயமாக இருந்தது. இயற்கைச் சூழ்நிலையில் இருக்கும் இந்தப் பள்ளியை, இன்னும் பெரிதாக... 100 வகுப்பறைகள் கொண்டதாக கட்டப் போகிறார்களாம். அதனால், நிறைய மாணவர்கள் சேர்ந்து, நிறைய வருமானம் வருமாம். அதற்காக மீதம் இருக்கும் எங்களையும் வெட்டப் போகிறார்கள். நாங்கள் எங்களது நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

நீ கடல்படைத் தளபதியாக இருக்கிறாய் என்று உன் ஆசிரியர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டேன். புயல் வீசும் கடலில் துணிவுடன் கடற் கொள்ளையர்களை நீ மடக்கிப் பிடித்து வெற்றி பெறுகிறாயாம். எனக்கு, உன்னைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. வீரத் தளபதியே! கடல் கொள்ளையர்களைப் போல இந்த மரக் கொள்ளையரை அடக்க வருவாயா?

உன் வருகைக்காக, யானை மரம்