'மூங்கில் காட்டின் பக்கத்தில் நான் ஒரு வீடு கட்டலாம் என முடிவு செய்திருக்கிறேன். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்'' என்று கேட்டது சிறுத்தை ராஜா.

''ஆகா... பிரமாதம்'' என்றன அங்கே கூடியிருந்த மற்ற விலங்குகள்.

''வீடு கட்ட யார் எனக்கு உதவி செய்கிறீர்கள்?' என்று கேட்டது சிறுத்தை.

விலங்குகள் எல்லாம் உரத்த குரலில், 'நாங்கள் வருகிறோம், நாங்கள் வருகிறோம்!' என்றன.

அப்போதெல்லாம் சிறுத்தைதான் காட்டுக்கு ராஜாவாக இருந்தது. ராஜா வீடு கட்டும்போது, மற்ற விலங்குகள் எப்படி உதவி செய்யாமல் இருக்க முடியும்?

தவிர, அந்தச் சிறுத்தை ஆணவம் மிக்கது. தான் நினைத்தது நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும்.தான் செய்வது சரி என்றும் நினைக்கும். மற்ற எந்த விலங்கையும் மதிக்காது. அதனால், மற்ற விலங்குகள், சிறுத்தை ராஜாவின் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசுவது இல்லை.

வீடு கட்டுவது பற்றி அறிவித்த பிறகு, சிறுத்தை வெளியே சென்றுவிட்டது. மற்ற விலங்குகள் எல்லாம் ஒன்று சேர்ந்தன. வீட்டை அமைக்க வேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுத்து, வேலையைத் தொடங்கின. ஒவ்வொரு விலங்கும் தன்னால் செய்யக்கூடிய வேலையை எடுத்துக்கொண்டது.

ஆமை, தூண்கள் அமைக்க பள்ளங்கள் தோண்டியது. சிங்கம், தூண்களுக்கான மரங்களை வெட்டி எடுத்துவந்தது. கழுதைப் புலி, அந்த மரங்களைப் பள்ளங்களில் வைத்து உறுதிப்படுத்தியது. மான்கள், சுற்றுச் சுவர் அமைத்தன. குரங்குகள், மேற்கூரையை அமைத்தன.

மாலையில் திரும்பிவந்தது சிறுத்தை. அப்போது, வீடு கட்டி முடிக்கப்பட்டு, கடைசிக் கட்ட அலங்கார வேலைகள் நடந்துகொண்டிருந்தன. காலையில் இருந்து வேலை செய்ததால், எல்லா விலங்குகளும் களைத்துச் சோர்ந்திருந்தன. ஆனாலும், தங்கள் ராஜாவுக்கு மிக அழகான வீட்டைக் கட்டிய சந்தோஷம், மனநிறைவைத் தந்தது.

ஆனால், அந்த அருமையான வீட்டைப் பார்த்தும் சிறுத்தை எதுவும் சொல்லவில்லை. அங்கிருந்த விலங்குகளை ஏறிட்டும் பா£ர்க்காமல், வீட்டுக்குள் சென்றது. அங்கே விளையாடிக்கொண்டிருந்த குரங்குக் குட்டிகளை, 'இங்கே என்ன கலாட்டா? வெளியே போ!' என்று கூச்சலிட்டு விரட்டியது.

தாங்கள் பாடுபட்டு வீடு கட்டியதைச் சிறுத்தை ராஜா பொருட்படுத்தவே இல்லை. நன்றி என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லையே என்று மற்ற விலங்குகள் மிகவும் வெறுப்படைந்தன. அன்று இரவே, குன்றின் மீது கூட்டம்போட்டுப் பேசின.

'சிறுத்தை ராஜாவின் நடத்தை சரியில்லை. யாராக இருந்தாலும் நன்றி இல்லாமல் நடந்துகொள்வது பெரிய குற்றம். அதுவும் ராஜா இப்படி நடந்துகொள்வதைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது' என்றது யானை.

எனவே, அவை எல்லாம் ஒன்று சேர்ந்து, சிறுத்தையின் ராஜா பதவியைப் பறிப்பது என முடிவுசெய்தன. 'ஆனால், இதை அந்தச் சிறுத்தையிடம் சொல்லி, விரட்டுவது யார்? அப்படிச் செய்தபின் ராஜாவாக இருந்து பொறுப்புகளைக் கவனிக்கப்போவது யார்?’ என்ற கேள்விகள் எழுந்தன.

மற்ற விலங்குகள் தயங்கியபோது, சிங்கம் முன்வந்தது. ''நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். உங்களுக்கு எல்லாம் நல்ல அரசனாக இருப்பேன்'' என்றது.

அன்று இரவு, சிறுத்தை தன் புதிய வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தது. அங்கே, சிங்கம் தலைமையில் விலங்குகள் கூட்டமாக வந்தன. யானை, தன் நீண்ட தும்பிக்கையை நீட்டி, வீட்டின் மேற்கூரையை இழுத்துக் கீழே போட்டது. திடுக்கிட்டு விழித்த சிறுத்தை, சுற்றிலும் கூடியிருந்த விலங்குகளைப் பார்த்துத் திகைத்தது.

''என்ன தைரியம் இருந்தால், என் தூக்கத்தைக் கெடுத்திருப்பீர்கள்?'' என்று கோபமாகக் கேட்டது.

அப்போது, சிங்கம் உறுமலுடன் முன்னால் வந்து, ''இனி உன் கூச்சலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். உன்னை அரசர் பதவியில் இருந்து நீக்குகிறோம்.உனக்கு பதவிதான் வேண்டும் என்றால், என்னோடு மோதிப் பார். அல்லது உயிர் போதும் என்றால், அமைதியாகப் போய்விடு'' என்றது.

சிங்கம் இவ்வாறு தைரியமாகப் பேசியதும் மற்ற விலங்குகளும் தைரியம்பெற்று, சிறுத்தைக்கு எதிராகக் கோஷம் போட்டன.

'இவர்களை எதிர்த்து நின்றால், வெற்றிபெற மாட்டோம். அரசன் என்ற உயர்ந்த பதவி கிடைத்தும் அதை முறையாகப் பயன்படுத்தாத எனக்கு, இது தேவைதான்’ என்று நொந்துகொண்ட சிறுத்தை, காட்டின் அடர்ந்த பகுதிக்குள் ஓடி மறைந்தது.

அதன் பிறகு விலங்குகள், சிங்கத்தை காட்டு ராஜாவாக அறிவித்தன. அன்பும் வீரமும் கொண்ட சிங்க ராஜாவின் ஆட்சியில், விலங்குகளும் பறவைகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்தன.