Published:Updated:

அடுத்த அடியை கவனமாக வையுங்கள்! | பர்வீன் சுல்தானா | சொல் புதிது

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

அடுத்த அடியை ஏன் கவனமாக வைக்க வேண்டும் என 'சொல் புதிது' ஷோவில், கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

"தன் வாழ்வில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்த ஒரு தொழில்அதிபர், மனஅமைதி கிடைக்கவும், ஆலோசனை கேட்கவும் தன் குருநாதரை தேடிச் செல்கிறார். குருநாதரிடம் தனக்கு நடந்தவற்றைக் கூறி என்ன செய்வது எனக் கேட்கிறார். அதற்கு குருநாதர் 'அடுத்த அடியை கவனமாக எடுத்து வை' எனக் கூறுகிறார். மிகவும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என நினைக்கும் போது அடுத்த அடியை மட்டும் கவனமாக எடுத்து வைப்பதன் மூலம் என் வெற்றிப் பாதையை அடைந்து விட முடியுமா, எனக் கேட்கிறார் அந்தத் தொழில்அதிபர். அந்தத் தொழில்அதிபர் தன் வாகனத்தில் கிளம்பத் தயாராகிறார். அப்போது குருநாதர் 'இரவாகி விட்டதே எப்படி வீடு போய் சேர்வாய்' எனக் கேட்கிறார். 'வண்டியில்தான் விளக்கு இருக்கிறதே அதை எனவே வீடு சென்று சேர்ந்து விடுவேன் எனப் பதில் அளிக்கிறார்' அந்தத் தொழில்அதிபர். 'விளக்கு வெளிச்சம் இரண்டு அடி தூரத்திற்குத் தானே இருக்கிறது, இதை வைத்து எப்படி வீடு வரைக்கும் செல்வாய்' எனக் கேட்கிறார் குருநாதர். தொழில்அதிபருக்கு விளங்குகிறது, அடுத்த அடியை கவனமாக வைக்கும்போது நாம் குறித்திருக்கும் எல்லையை அடைந்து விடலாமென்று."

அடுத்த அடியை ஏன் கவனமாக வைக்க வேண்டும் என 'சொல் புதிது' என்ற கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
அடுத்த கட்டுரைக்கு