Published:Updated:

நல்லவர்கள் தோற்பது ஏன்? | பர்வீன் சுல்தானா | சொல் புதிது

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

'சொல் புதிது' என்ற கீழ்க்காணும் காணொளியில் 'நல்லவர்கள் தோற்பது ஏன்' என்ற தலைப்பில் தீவிரத்தன்மையை வைத்து அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

வாழ்வில் எல்லா சொற்களும் நமக்குப் பழகிப் போனவைதான். ஆனால், ஒரு சொல்லின் பொருள் புரிகிற போது அந்தச் சொல் நமக்குப் புதிதாகிறது.

'தீவிரம்' என்ற சொல்லைத் தினமும் நம் வாழ்வில் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். தீவிரம் என்ற சொல்லுக்கான பொருள் நமக்குத் தெரியும். ஆனால், அதனை நம் வாழ்வில் செயல்படுத்தினால் எத்தகைய மாற்றங்களை நாம் காண முடியும், எத்தகைய வெற்றிகளை நாம் பெற முடியும், எவ்வளவு உயரத்தை நாம் அடைய முடியும் என்பது நமக்குத் தெரியாது.

'பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்' என்பார்கள். அந்த இடத்தில் பூவுடைய வாசத்தின் தீவிரத்தன்மை தான் அந்த நாரையும் அதனுடன் மணக்க வைக்கிறது. அது போல நாம் செய்யும் எந்த விஷயத்திலும் தீவிரத்தன்மையைக் காட்டினால், கண்டிப்பாக எத்தகைய சூழலையும் நம்மால் மாற்ற முடியும்.

'சொல் புதிது' என்ற கீழ்க்காணும் காணொளியில் 'நல்லவர்கள் தோற்பது ஏன்' என்ற தலைப்பில் தீவிரத்தன்மையை வைத்து அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

அடுத்த கட்டுரைக்கு