Published:Updated:

கல்புர்கி, கௌரி லங்கேஷைக் கண்டு ஏன் அஞ்சுகிறது அதிகார வர்க்கம்? | சொல் புதிது | பர்வீன் சுல்தானா

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

படைப்பாளர்களைக் கண்டும் ஏன் அதிகார வர்க்கம் அஞ்சுகிறது எனச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொளியில் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார் பர்வீன் சுல்தானா.

"யார் படைப்பாளர்கள்? ஒரு சமூகத்தின் மாற்றத்தைத் தீர்மானிப்பவர்கள் படைப்பாளர்கள். ஒரு சமூகம் ஏன் இப்படி இருக்கிறது, அது ஏன் இப்படி இருக்கக் கூடாது என்பதை தம் படைப்புகளின் மூலமாகச் சொல்பவர்கள். ரஷ்யப் புரட்சி ஏற்படுவதற்கு முன்னாள் அந்தப் புரட்சி புத்தகங்களில் தான் வெடித்தது. படைப்பாளர்கள் அதிகார வர்க்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். படைப்பாளர்கள் என்பவர்கள் மிக முக்கியமான ஒரு நகர்வை இந்த சமூகத்தில் ஏற்படுத்துகின்றவர்களாக இருக்கிறார்கள். ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தில் ஒரு கதையை ஒரு சமூகத்தைப் பதிவு செய்தான் என்பதற்காகவே அவனது வீடு அடித்து நொறுக்கப்படுகிறது என்றால், எழுத்தை இந்த சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான். யோசித்துப் பார்த்தால் இந்த படைப்பாளர்கள் ஒரு தீர்மானிப்புச் சக்தியாக இயங்குகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக யோசிக்கிறார்கள்."

படைப்பாளர்களைக் கண்டும் ஏன் அதிகார வர்க்கம் அஞ்சுகிறது எனச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொளியில் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார் பர்வீன் சுல்தானா.
அடுத்த கட்டுரைக்கு