Published:Updated:

ஒப்பீடு செய்வது மனநோயா? | பர்வீன் சுல்தானா | சொல் புதிது |Sol Puthithu | Parveen Sulthana

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

மனம் இருந்தால் போதும், வெற்றி பெற எதுவுமே நமக்குத் தடையல்ல என்பதனை 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"அடிப்படையில் இளைஞர்களிடத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மனவேதனையாக நான் கருதுவது, அவர்கள் தங்களை யாரோடும் ஒப்பிட்டுப் பேசுவதை விரும்புவதேயில்லை. ஆனால், பெரியவர்கள் அதனைத் தவிர வேறெதையும் செய்வதேயில்லை. ஒப்பீடு செய்து செய்து நம் குழந்தைகளை நாமே மனக்காயப்படுத்தி விடுகிறோம். யாரையும் யாரோடும் ஒப்பிடத் தேவையில்லை."

"ஒரு மனிதனின் வெற்றி என்பது, அவனது மன உயர்வைப் பொறுத்தது தான். மனதளவில் நாம் உயர்ந்து நிற்கிற பொழுது யாராலும், நமது வெற்றியைத் தடுத்துவிட முடியாது. முதன் முதலில் எவரெஸ்டில் ஏறிய தேசியக் கொடியைப் பொதித்த நபரிடம் கேட்கப்பட்டது, 'எவரெஸ்டில் ஏறும் போது உங்களுக்குத் தடையாக இருந்தது, அல்லது நீங்கள் தடையாக நினைத்தது எது?', அதற்கு அவர் கூறினார் 'நான் சிகரத்தை அடைவதற்கு எதுவுமே எனக்குத் தடையாக இருக்கவில்லை. சிகரத்தை அடைந்த போது நான் என மனதுக்கு மட்டுமே நன்றி கூறினேன். அடுத்தடுத்து சவால்களைச் சந்தித்து நான் ஏறுகிற பொழுது, என்னால் சிகரத்தைத் தொடமுடியாது என்று என் மனம் என்னிடம் கூறவேயில்லை. அதற்காகவே என மனதுக்கு நான் நன்றி கூறினேன்' எனக் கூறினார்."மனம் இருந்தால் போதும், வெற்றி பெற எதுவுமே நமக்குத் தடையல்ல என்பதனை 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

மனம் இருந்தால் போதும், வெற்றி பெற எதுவுமே நமக்குத் தடையல்ல என்பதனை 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு