Published:Updated:

வாழ்க்கை தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துகிறோமா? | பர்வீன் சுல்தானா | சொல் புதிது

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

வாய்ப்புகளை நாம் ஏன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

"வாழ்க்கை உத்தரவாதங்களைத் தருவதில்லை. வாய்ப்புகளை மட்டும்தான் தருகிறது. அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால், பல நேரங்களில் இந்த வாய்ப்புகளை நாம் வித்தியாசமான முறையில் தவறவிடுகிறோம். உதாரணமாக ஒத்திவைத்தல், ஒத்திவைத்தல் என்பது நமக்குப் பழகிப்போன செயலாகிவிட்டது. எளிதாக எந்தவொரு செயலையும் ஒத்திவைத்து விடுகிறோம். நாளை என்பதை யார் உத்தரவாதம் செய்தது. வாழ்க்கை எப்போதும் உத்தரவாதத்தைத் தருவதேயில்லை. இந்த நொடி.. இந்தக் கணம் தான் நம்மிடத்தில் இருக்கிறது, அதனை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா?

சாக்ரடீஸூக்கு விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இரண்டு நாட்களில் மரணதண்டனை நிறைவேறவிருக்கும் சாக்ரடீஸ் தன் சிறை அறையில் நடந்து கொண்டிருக்கிறார். அப்போது பக்கத்துச் சிறை அறையில் இருந்து ஒருவன் ஒரு இசைக்கருவியை இசைக்கும் சத்தம் கேட்கிறது. அந்த இசையில் மெய்மறந்து போன சாக்ரடீஸ் அவனிடம் கேட்கிறார் 'எனக்கு இந்த இசைக் கருவியை இசைக்கக் கற்றுத்தருவாயா' என்று. இரண்டு நாள்களுக்குப் பின் வரவிருக்கும் இறப்பைப் பற்றி அவர் யோசிக்கவில்லை. மாறாக அந்த நாள், அந்த நொடியை வாழ்கிறார்."

வாய்ப்புகளை நாம் ஏன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
அடுத்த கட்டுரைக்கு