Published:Updated:

பெற்றோர்களே... குழந்தைகளுக்கு இதைக் கற்றுக்கொடுங்கள்! | சொல் புதிது | பர்வீன் சுல்தானா

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

குழந்தைகளுக்குத் தெளிவாக ஏன் சிந்திக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

"குறிப்பிட்ட ஒரு சொல் நம்மை வந்து சேர்கிற போது, ஏற்கெனவே நாம் புரிந்து வைத்திருக்கும் வாழக்கையில் வேறு விதமான பரிணாமத்தில் ஒரு வெளிச்சம் நமக்குக் கிடைக்கிறது. இந்த சொல் எனக்குப் பத்தாண்டுகளுக்கு முன்னால் தெரிந்திருந்தால், இந்தப் புரிதல் எனக்கு ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன் வந்திருந்தால் என் காலத்தை நான் காப்பாற்றியிருப்பேனே எனச் சொல்லக்கூடியவர்கள் ஏராளம். திருமறையில் ஒரு வாசகம் வரும். யாரையேனும் இறைவன் தண்டிக்க விரும்புகிறான் என்றால், அவன் சிந்தனைக்குத் திரையிட்டு விடுகிறான் என்று வரும்."

"'தனக்கு மிஞ்சி தான் தான தர்மம்' என்ற வாக்கியத்தை நிறைய இடங்களில் சொல்லக் கேட்டிருப்போம். இங்கே 'மிஞ்சி' என்ற சொல்லை நம் தேவையைக் கடந்து என்ற பொருளில் நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதிலே ஒரு சிந்தனைத் தெளிவிருந்தால் அந்தச் சொல் நமக்கு வேறு விதமாகப் புரியும்.."

குழந்தைகளுக்குத் தெளிவாக ஏன் சிந்திக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
அடுத்த கட்டுரைக்கு