Published:Updated:

நிதானம் இல்லாவிட்டால் இதுதான் நிலை! | சொல் புதிது | பர்வீன் சுல்தானா

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

ஒருவருடைய வாழ்வில் நிதானம் எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"உலகில் வாழும் உயிர்களுக்குத் தேவையான அடிப்படை குணம் என்பது நிதானம். நம்மில் எத்தனை பேருக்கு நிதானம் இருக்கிறது. நிதானம் என்பது குணத்தோடு தொடர்புடையது. ஆனால், குணம் என்று நாம் எதைச் சொல்கிறோம். குணம் என்பது இயல்பாக இருப்பது. இயல்பாக இருப்பதற்குப் பெயர் தான் குணம், அதில் நல்லதோ கெட்டதோ வந்து சேர்கிறது. வாழ்வில் நிதானம் என்பது மிகவும் முக்கியம். நிதானத்தோடு ஒரு செயலை செய்கிற போது, அந்த செயலை அற்புதமான வகையில் நம்மால் செய்ய முடிகிறது. ஒரு காட்டுப்பூனையாக இருந்தாலும் சரி, ஒரு மரமாக இருந்தாலும் சரி நிதானம் மிகவும் முக்கியம். வேகமாக ஓடும் சிறுத்தைக்கு ஒரு கட்டத்திற்கு மேல் உடல் அதிக சூடாகிவிடும், அப்படி சூடாகும் போது அந்த நொடியோ வேட்டையை நிறுத்தும் நிதானம் சிறுத்தைக்கு இருக்கிறது. தன் உடலை நிர்வகிக்க அந்தச் சிறுத்தைக்குத் தெரிந்திருக்கிறது. நம்மிடம் அந்த நிதானம் இருக்கிறதா?"

ஒருவருடைய வாழ்வில் நிதானம் எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு