Published:Updated:

விநாடிகளைத் தக்க வையுங்கள்... யுகங்களை ஜெயிக்கலாம்! | பர்வீன் சுல்தானா | சொல் புதிது

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

காலம் எப்படிப்பட்டது, அதனை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொலியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"'காலம் பொன் போன்றதல்ல, காலம் உயிர் போன்றது', இழந்தால் மறுபடியும் கிடைக்காது. உழைப்பைச் சுரண்டுபவன் கூட அதிகாரம் படைத்தவன் அல்ல, நேரத்தைச் சுரண்டுபவன்தான் உண்மையில் அதிகாரம் படைத்தவன். நம்முடைய நேரத்தை நாம் யாருக்காகவும் சுரண்டக் கொடுக்கலாகாது. மிகப்பெரிய விஷயங்களைக் காலத்தைக் கருத்தில் கொண்டு யோசிக்கும் போது அதனை வெற்றி கொள்கிறோம். காலத்தையும் இடத்தையும் சரியாகக் கணித்து, சரியான முறையில் செயல்படுத்தினால் இந்த உலகத்தையே கூட உன்னால் வெற்றி கொள்ள முடியும் என வள்ளுவர் கூறுகிறார். இரண்டாம் ரிச்சர்ட் மன்னர் சொல்கிறார், 'இளமையில் காலத்தை நான் வீணடித்தேன், இப்போது காலம் என்னை வீணடிக்கிறது' என்கிறார். விநாடிகள்தான் தவறிழைக்கின்றன, தண்டனையோ யுகங்களுக்குக் கிடைக்கிறது. எவன் ஒருவன் விநாடிகளைத் தக்க வைத்துக் கொள்கிறானோ, அவன் தலைமுறையை யுகங்களை வெற்றி கொள்கிறான்."

காலம் எப்படிப்பட்டது, அதனை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொலியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு