Published:Updated:

களிமண் கொண்டு உயிர்களை உருவாக்கிய குழந்தைகள்; ஆச்சர்யப்படுத்திய நிகழ்ச்சி!

குழந்தைகள்

இயற்கை குறித்து புத்தகத்தில் மட்டும் குழந்தைகள் படித்துத் தெரிந்துகொள்ளாமல் செயல் மூலமாக மண்ணோடும் இயற்கையோடும் இணைந்து பயணிக்கும் ஒரு வாய்ப்பாக களிமண் பயிற்சி முகாமை ஒருங்கிணைத்தோம்.

களிமண் கொண்டு உயிர்களை உருவாக்கிய குழந்தைகள்; ஆச்சர்யப்படுத்திய நிகழ்ச்சி!

இயற்கை குறித்து புத்தகத்தில் மட்டும் குழந்தைகள் படித்துத் தெரிந்துகொள்ளாமல் செயல் மூலமாக மண்ணோடும் இயற்கையோடும் இணைந்து பயணிக்கும் ஒரு வாய்ப்பாக களிமண் பயிற்சி முகாமை ஒருங்கிணைத்தோம்.

Published:Updated:
குழந்தைகள்
சென்னை வேளச்சேரியில் உள்ள பயிலகம் அரங்கில் `சுட்டியானை' இதழின் குழந்தைகளுக்கான களிமண் பயிற்சி முகாம் நடைபெற்றது. சென்னையின் பல பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் ஆர்வத்துடன் இந்த முகாமில் கலந்துகொண்டனர். இயல் வாகை பதிப்பகத்தின் குழந்தைகளுக்கான இதழ் `சுட்டியானை'. இயற்கை சார்ந்து குழந்தைகள் சாரந்த பல நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறது. தற்போது குழந்தைகள் களிமண்ணைக் கொண்டு பொம்மை செய்யும் பயிற்சியை ஒருங்கிணைத்தது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிகழ்வை ஒருங்கிணைத்த சசிகலாவிடம் பேசினோம். "இயல்வாகை பதிப்பகம் சுற்றுச்சூழல் சார்ந்து பல முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது. இயல்வாகையின் சுட்டிக்குழந்தைதான் `சுட்டியானை', குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இதழ். குழந்தைகளுக்கென தனி இதழ் தேவையா என்றால் அதற்கான அவசியம் அதிகமா இருக்கு. பெரியவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் கிரியேட்டிவிட்டி அதிகம். அவர்கள்தான் நம் அடுத்த சந்ததியினர் அவர்களுக்கான நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை சுட்டி யானை தொடர்ந்து முன்னெடுக்கிறது. இயற்கை குறித்து புத்தகத்தில் மட்டும் குழந்தைகள் படித்துத் தெரிந்துகொள்ளாமல் செயல் மூலமாக மண்ணோடும் இயற்கையோடும் இணைந்து பயணிக்கும் ஒரு வாய்ப்பாக களிமண் பயிற்சி முகாமை ஒருங்கிணைத்தோம். குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இருந்த மகிழ்ச்சியும் ஆர்வமும் எனக்கு அதிகமாக இருந்தது. மரபு சார்ந்த விளையாட்டுகள் மறைந்து வரும் இந்தக் காலத்தில் பாரம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக களிமண் பொம்மை பயிற்சியை ஒருங்கிணைத்தோம். இதுபோன்ற பல பயிற்சிகளை முன்னெடுக்க உள்ளோம் என்றார்" சசிகலா.

சுட்டி யானை நிகழ்வில்
சுட்டி யானை நிகழ்வில்

பயிற்சியில் ஈடுபட்ட குழந்தையின் பெற்றோரும் பயிலகம் அரங்கில் உரிமையாளருமான முத்துராமலிங்கம் பேசுகையில், "இயல்வாகை பதிப்பகம் எனக்கு புத்தக கண்காட்சி மூலம்தான் அறிமுகமானது. அப்போது பதிப்பகத்தில் வெறும் புத்தகம் மட்டுமில்லாமல் விதைகளும் விற்பனைக்கு இருந்தது. அந்த முயற்சி எனக்கு வித்தியாசமானதாகவும் நல்ல மாற்றமாகவும் தோன்றியது. அதற்குப் பிறகு தான் இயல் வாகையுடன் தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன். சுட்டியானையின் பயிற்சி முகாமில் பெற்றோர்களின் உடன் குழந்தைகள் இல்லாமல், சக குழந்தைகளுடன் சேர்ந்து களிமண் பொம்மை செய்வதில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருந்தால் அவர்களின் தனித்தன்மை வெளிப்படாது . நாம் வேலை செய்யும்போது குழந்தைகள் நம்மைத் தொந்தரவு செய்தால் நமக்கு எப்படி எரிச்சல் ஏற்படுமோ, அதுபோல் அவர்களுக்கென்று இருக்கும் உலகத்தில் நாம் தலையிடுவது அவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும். குழந்தைகளின் உலகத்தில் அவர்களின் அனுமதியுடன் மட்டுமே நுழைய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போதுள்ள காலத்தில் வெயில், மழை, மண் என எதையும் எதிர்கொள்வதற்கு நம் குழந்தைகளில் பெரும்பாலானோர் பழக்கப்படவில்லை. அனைத்தையும் எதிர்நோக்கும் குழந்தைகளாக வளர இந்த பயிற்சி முகாம் உதவும்" என்றார்.

தியா
தியா

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவி தியா பேசுகையில், "நான் வேளச்சேரி கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்கிறேன். இந்தப் பயிற்சி முகாம் ஜாலியா இருந்துச்சு. பூனை, டைனோசர், வண்ணத்துப்பூச்சி எல்லாம் செய்தோம். யானை செய்ய பிடித்தாலும் செய்வது கொஞ்சம் கஷ்டமா இருக்கு" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism